Pongal: பொங்கல் பண்டிகை வந்தாச்சு, இந்த பண்டிகை நாட்களில் பொதுவாக அனைவரும் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதே வழக்கம். பெரும்பாலானோர் வீட்டில் சர்க்கரை பொங்கலை வழக்கமாக செய்து வைத்து சாமி கும்பிட்டுவிட்டு பரிமாறுவது வழக்கம். ஆனால் அனைவர் வீட்டிலும் இது நடக்காது என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை.
பலரது வீட்டிலும் பொங்கல் பண்டிகையன்று வகைவகையான பொங்கல் செய்து பரிமாறுவது வழக்கம். அத்தகைய வகையான பொங்கலின் வகைகளை பார்க்கலாம்.
அதிகம் படித்தவை: ஹீல்ஸ் போட்டு நடக்கனும்.. ஆனா வலிக்கக்கூடாதா.? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..
சர்க்கரை பொங்கல்
முதலில் வழக்கமான சர்க்கரை பொங்கலையே பார்க்கலாம். இதில் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக பச்சரிசி, ஏலக்காய், நெய், முந்திரி, உலர் திராட்சை கலந்து பொங்கல் செய்யலாம்.
இதில் நெய், கிஸ்மிஸ், முந்திரி என பல ஆரோக்கிய பொருட்கள் சேர்க்கப்படுவதால் இது உடல்நலத்திற்கு பலவகையில் நன்மை பயக்கும்.
கோதுமைப் பொங்கல்
சம்பா கோதுமையில் செய்யப்படும் இந்த பொங்கல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதில் பாசிப்பருப்பு மற்றும் சம்பா கோதுமை பயன்படுத்தலாம், பொதுவாகவே கோதுமை ஆரோக்கியத்திற்கு மிக நல்லது என்பதை அனைவரும் அறிவார்கள். இதிலும் பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், துருவிய தேங்காய் என பல உப பொருட்கள் சேர்க்கப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல கூறுகள் இதில் உள்ளன.
சிவப்பரிசி பொங்கல்
வழக்கமான பொங்கலில் பயன்படுத்தப்படும் பச்சரிக்கு பதிலாக சிகப்பரிசி பயன்படுத்தப்படுவதால் இது ஆரோக்கியத்திற்கு மிக நல்லதாகும். பொதுவாகவே சிகப்பரிசி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பலன்களை வழங்குகிறது.
அதேபோல் இதில் கருப்பட்டி வெல்லம், ஏலக்காய், நெய் உள்ளிட்டவைகள் சேர்க்கப்படுவதால். இது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய நன்மைகளை வழங்குகிறது.
ஜவ்வரிசி பொங்கல்
ஜவ்வரிசி பொங்கல் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக ஜவ்வரிசி என்பது பாயசத்தில் சேர்க்கப்படு்ம மூலப் பொருளாகும். இதிலும் நெய், கிஸ்மிஸ் என பல பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு மிக நன்மையாக கருதப்படுகிறது.
கற்கண்டு பொங்கல்
கோயில்கள் முதல் பல இடங்களில் கொடுக்கப்படும் பொங்கல்தான் கற்கண்டு பொங்கலாகும். இந்த பொங்கல் ருசியின் ஆதாரமாக கருதப்படுகிறது. அவ்வளவுதூரம் திகட்டாமல் சாப்பிட சாப்பிட மேலும் ஆசையை தூண்டும் வகையில் இருக்கும். வழக்கமான சர்க்கரை பொங்கலில் இருக்கும் நன்மைகள் இதிலும் உள்ளது.
இதை போன்ற பலவகை பொங்கலை உங்கள் வீட்டில் செய்து ருசித்து சாப்பிட்டு பொங்கலை கொண்டாடி மகிழுங்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
piccourtesy: freepik