$
Warm Water With Honey: காலை எழுந்ததும் வெந்நீரில் தேனும் எலுமிச்சைப்பழச்சாறும் கலந்து குடிப்பதை எடைக்குறைப்புக்கான மிகச் சிறந்த வழியென பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வெந்நீரில் தேன் கலந்து குடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து மற்றும் உடல் நல ஆலோசகர் நேஹா சஹாயா எச்சரித்துள்ளார்.
நான் நீண்ட காலமாக காலை எழுந்ததும் வெந்நீரில் தேன் கலந்து குடித்து வருகிறேன், உடல் எடை நன்றாக குறைகிறது என கூறலாம். ஆனால் காலை எழுந்ததும் சர்க்கரை கலந்த டீ, காபி குடிப்பதற்கு பதிலாக தேன் கலந்த வெந்நீரை குடிப்பது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தலாமோ தவிர, சூடான பானங்களில் தேனை கலப்பது உடல் நலத்திற்கு ஆபத்தானது என்கிறார்.

இதையும் படியுங்கள்: மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் இயற்கை வழிகள் இதோ!
மேலும் சூடான உணவு அல்லது பானங்களில் ஏன் தேன் கலக்கக்கூடாது என்பதற்கான காரணங்களையும் நேஹா சஹாயா விளக்கியுள்ளார்.
1. ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும்:
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் தேனைச் சூடாக்குவது அதன் இரசாயனக் கலவையை மாற்றி, அதை நச்சுப் பொருளாக மாற்றும். இது தவிர, தேனில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இப்போது, சர்க்கரை உள்ள எதையும் சூடாக்கினால் 5-ஹைட்ராக்ஸிமெதைல்ஃபர்ஃபுரல் அல்லது HMF ஐ வெளியிடலாம், இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர்.
2. சமநிலையை சீர்குலைக்கும்:
ஆயுர்வேத நம்பிக்கைகள் மற்றும் முறையின்படி, தேன் அதன் மூல வடிவத்தில் இருக்கும்போது தான் இயற்கையான நன்மைகள் இருக்கக்கூடும். மறுபுறம், சூடான தேன் உடலில் ஒரு வகையான நச்சுப் பொருளாக மாறுகிறது. இது உடல் செரிமான சிக்கல்களை உருவாக்கக்கூடும். தேன் உடலில் மெதுவாக ஜீரணமாகும்போது, அதன் பண்புகள் விஷத்தைப் போலவே மாறும், இது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

3. நச்சுத்தன்மை வெளிப்படும்:
தேனின் வெப்பநிலை அதிகரிப்பு 140 டிகிரிக்கு குறைவாக உள்ளது, இது உங்கள் சூடான பாலை விட மிகக் குறைவு. எனவே, நீங்கள் சூடான பாலில் தேனைக் கலக்கும்போது, அதன் பண்புகள் மாறி, நச்சுத்தன்மையுடையதாகவும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகவும் மாறும்.
எனவே தேனின் இயற்கை நன்மைகளை பெற விரும்பினால், இரவு உறங்கச் செல்லும் முன்பு வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிப்பது நல்லது.
4. இயற்கையான தேனே சிறந்தது:
சூடான தேன் அதன் இயற்கையான என்சைம்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை இழக்கும் என்று கருதப்படுகிறது, இது குறைவான நன்மைகளை உருவாக்குகிறது.
இயற்கையான தேன் ஊட்டச்சத்து நோக்கங்களுக்காக உட்கொள்ளப்படுகிறது, அதே சமயம் கடைகளில் கிடைக்கும் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட தேனில் கார்ன் சிரப் அல்லது பிற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை தீங்கு விளைவிக்கும். மேலும் இயற்கையான தேனில் காணப்படும் மகரந்தம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் என்சைம்களும் இதில் கிடையாது.
இதையும் படியுங்கள்: Childhood Obesity: குழந்தையின் உடல் பருமனை சரி செய்வது எப்படி?
5. பேக்கேஜ் தேனில் மறைந்திருக்கும் ஆபத்து:
சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் அழகான கண்ணாடி பாட்டில்களில் கண்களை கவரும் வகையில் பேக்கிங் செய்து விற்கப்படும் தேன்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். ஏனெனில் இந்த வகை தேன்கள் ஏற்கனவே அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்பட்டு பேக் செய்யப்பட்டிருக்கும் என்பதால், அவற்றை மீண்டும் சூடான உணவுடன் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. எனவே கடைகளில் விற்கப்படும் வணிக ரீதியிலான தேன் பிராண்டுகளை தவிர்த்துவிட்டு, வனப்பகுதியில் இருந்து நேரடியாக கிடைக்கும் அல்லது உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய இயற்கையான தேனை வாங்கி பயன்படுத்த வேண்டும்.