How to induce period naturally: முறையற்ற மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களுக்கான மிகப்பெரிய சவாலாக உள்ளது. மன அழுத்தம், உடல் எடையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், பிசிஓஎஸ், தைராய்டு, தீவிர உடற்பயிற்சி, ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுகிறது. அதனை சரி செய்ய என்னென்ன மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள்.
முக்கிய கட்டுரைகள்
1. உடல் எடை பராமரிப்பு:
பெண்களின் உடல் எடை மாதவிடாய் சுழற்சியில் மிகவும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஓவர் குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ இருக்கிறீர்கள் என்றால், சீரான உணவு, உடற்பயிற்சி மூலமாக சரியான எடையை பராமரிப்பது அவசியமாகும்.
2. மன அழுத்தம்:
யோகா, தியானம், சுவாசப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைப் பயிற்சி செய்து, ஹார்மோன்களை சமநிலைப்படுத்தலாம்.
3. உணவுமுறையில் மாற்றம்:
சீரற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்கள், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, கீரைகள், மெல்லிய புரதம் உள்ள உணவுகள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்ளலாம்.
4. மூலிகை தேநீர்:
ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் மாதவிடாயை தூண்டக்கூடிய இஞ்சி, கெமோமில் போன்ற மூலிகை தேநீர் வகைகளை முயற்சித்து பார்க்கலாம்.
5. மிதமான உடற்பயிற்சி:
தீவிரமான உடற்பயிற்சி பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
6. வைட்டமின் சி:
அதிக அளவு வைட்டமின் சி ஈஸ்ட்ரோஜனின் உற்பத்தியைத் தூண்டி, உங்கள் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தும். நீங்கள் சிட்ரஸ் பழங்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்தைப் பெறலாம்.
7. ஆரோக்கியமான கொழுப்புகள்:
வெண்ணெய், நட்ஸ் வகைகள் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவை ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
8. ஆழ்ந்த உறக்கம்:
தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும், எனவே 8 மணி நேர நீண்ட, ஆழ்ந்த தூக்கம் கட்டாயமாகும். குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே செல்போன் மற்றும் டி.வி, கம்ப்யூட்டர் போன்றவற்றின் ஸ்கிரீன்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.