Will eating red meat bring on diabetes: நம்மில் பலருக்கு ரெட் மீட் என அழைக்கப்படும் சிவப்பு இறைச்சி நம்மில் பலருக்கு பிடிக்கும். சிக்கனை விட பலர் சிவப்பு இறைச்சியை அதிகம் விரும்பி உண்ணுகிறார்கள். இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்றாலும், சில நேரங்களில் அதை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.
அதிகமாக ரெட் மீட் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதோடு இதயம் தொடர்பான நோய்களும் அதிகரிக்கும். இவை பட்டும் அல்ல, இன்னும் பல உடல் நல பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ரெட் மீட் சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆம், நீங்கள் சரியாத்தான் படித்தீர்கள். வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Benefits Of Tulsi Water: காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் துளசி வாட்டர் குடிப்பது இவ்வளவு நல்லதா?
ரெட் மீட் என்பது என்ன?

சிவப்பு இறைச்சி (Red Meat) என்பது பாலூட்டிகளிலிருந்து எடுக்கப்பட்ட இறைச்சியைக் குறிக்கிறது. அதாவது, ஆடு, மாடு, எருமை, ஒட்டகம், பன்றி போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும் இறைச்சியை தான் ரெட் மீட் என்கிறார்கள். வெள்ளை இறைச்சி என்பது கோழியிலிருந்து எடுக்கப்பட்ட இறைச்சி ஆகும். கடல் உணவு என்பது மீன் மற்றும் மட்டியிலிருந்து எடுக்கப்பட்ட இறைச்சியைக் குறிக்கிறது.
ரெட் மீட் நீரிழிவு நோயை ஏற்படுத்துமா?
தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் (American Journal of Clinical Nutrition) வெளியிடப்பட்ட ஹார்வர்ட் ஆய்வின்படி, “சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். ஒவ்வொரு வாரமும் அதிக சிவப்பு இறைச்சியை உண்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 62% அதிகமாக இருப்பதாகவும், மேலும் ஒவ்வொரு கூடுதல் தினசரி பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது 46% நீரிழிவு நோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சியின் ஒவ்வொரு கூடுதல் தினசரி உட்கொள்ளலுக்கும் 24% ஆபத்து அதிகமாகும்.
இந்த பதிவும் உதவலாம் : Diet Guidelines: ஆரோக்கியமான உணவுமுறை என்பது என்ன? WHO கூறுவது இங்கே!
இருப்பினும், சிவப்பு இறைச்சி சாப்பிடுவது நீரிழிவு நோயை கட்டாயம் ஏற்படுத்தும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. ஆனால், சிவப்பு இறைச்சி நுகர்வு குறைக்க மற்றும் அதற்கு பதிலாக அதிக தாவர அடிப்படையிலான புரதங்களை சாப்பிடுவதற்கான பரிந்துரைகளை கண்டுபிடிப்புகள் ஆதரிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே போல, ஒரு நாளைக்கு ஒரு ரெட் மீட்ஸை கொட்டைகள் அல்லது பருப்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடுவது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை 30% குறைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நாளைக்கு 100 கிராம் வரை இறைச்சி சாப்பிடுவது வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை 10 சதவீதம் அதிகரிக்கிறது. 19 லட்சம் பேரின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் ஒரு பகுதியாக, மக்களுக்கு தொடர்ந்து 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வழங்கப்பட்டது. இவர்களை 10 ஆண்டுகள் கண்காணித்ததில், தினமும் இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு 15 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்தது.
இந்த பதிவும் உதவலாம் : Cucumber Nutrition: வெள்ளரியில் ஊட்டச்சத்து உள்ளதா? அல்லது வெறும் தண்ணீர் மட்டுமே உள்ளதா?
சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

- சிவப்பு இறைச்சி சாப்பிடுவது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- சிவப்பு இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, இது இதயம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கிறது.
- இதை சாப்பிடுவது சில நேரங்களில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
- இதை அதிகமாக உட்கொள்வது சில சமயங்களில் உடல் பருமனுக்கு பலியாகலாம்.
- இதில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
- சிவப்பு இறைச்சி சாப்பிடுவது சில சமயங்களில் முகப்பருவை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : உணவில் சணல் விதைகள் சேர்க்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
வகை 2 நீரிழிவு நோயைத் தவிர்ப்பதற்கான வழிகள்
வகை 2 நீரிழிவு நோயைத் தவிர்க்க, நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு உணவில் கொட்டைகள் மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக, உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவதுடன், புகைபிடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதற்கு நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
Pic Courtesy: Freepik