சரியா தூங்கலைன்னா சுகர் வந்துடுமாம்! பெண்களே உஷார்..

  • SHARE
  • FOLLOW
சரியா தூங்கலைன்னா சுகர் வந்துடுமாம்! பெண்களே உஷார்..


Lack Of Sleep Increases Diabetes In Women: வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துவதற்கு தூக்கம் முக்கியமான ஒன்று. சரியான தூக்கம் இல்லையென்றால், சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு தூக்கமின்மை சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது. 

குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்கள், போதுமாக அளவு தூக்கம் பெறுவதில்லை. இதனால் அவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறன. 6 வாரங்கள் தொடர்ந்து தூக்கமின்மையை சந்திக்கும் பெண்களின் உடலில் இன்சுலின் உற்பத்தி குறைகிறது. இதில் மாதவிடாய் நின்ற பெண்கள் தான் அதிகம் உள்ளனர். 

இதையும் படிங்க: டைப்-2 நீரிழிவு மூளையின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

பொதுவாக ஒருவர் குறைந்தது 8-9 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் ஆறு வாரங்கள் சரியான தூக்கம் இல்லையென்றால், அது பெண்களுக்கு சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் தூக்கமின்மைக்கு பிரசவ காலம், குழந்தை வளர்ப்பு மற்றும் மாதவிடாய் போன்ற பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

38 பெண்களிடம் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் நன்கு தூங்குபவர்கள் எந்த ஆபத்தும் ஏற்படாமல் உள்ளதாகவும்,  6 வாரங்கள் தொடர்ந்து தூக்கமின்மையை சந்திக்கும் பெண்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆகையால் பெண்கள் நன்கு தூங்க வேண்டும். 

Image Source: Freepik

Read Next

Mint Water: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வேகமாக குறைக்க இந்த பானத்தை குடியுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்