நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ப்ரட் வகைகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ப்ரட் வகைகள் என்னென்ன தெரியுமா?


ஏனெனில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் இரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் ரொட்டி சாப்பிடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆம். பல்வேறு உணவுகளில் பிரதானமான ரொட்டியில் அதிக கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. எல்லா பிரட் வகைகளும் ஒரேமாதிரி அல்ல. எனவே நீரிழிவு நோயாளிகள் சரியான வகை வகை ரொட்டியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும். இதில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் சேர்க்கக் கூடிய ரொட்டிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Rajma for Diabetes: நீரிழிவு நோயாளிகள் கிட்னி பீன்ஸ் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பிரட் வகைகள்

பொதுவாக இனிப்புகள், தானியங்கள், பால், சில காய்கறிகள் மற்றும் ரொட்டி போன்ற உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் நிறைந்திருக்கலாம். இதில் ரொட்டிகள் நம் அன்றாட உணவின் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது. ஏனெனில், இது டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானதாக அமைகிறது. எனினும், வெள்ளை ரொட்டிக்கு பதிலாக 100 சதவீதம் முழு கோதுமை ரொட்டி நிறைந்த ஆரோக்கியமான மாற்றுகளைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளை ரொட்டி மிகவும் பதப்படுத்தப்பட்ட வெள்ளை மாவு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படலாம். இதில் நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சேர்க்க வேண்டிய பிரட் வகைகள் சிலவற்றைக் காணலாம்.

கம்பு ரொட்டி

நீரிழிவு நோயாளிகள் முழு தானிய கம்பு வகைகளை தங்கள் உணவில் சேர்ப்பது சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த கம்பு வைத்து தயார் செய்யப்படும் கம்பு ரொட்டி, கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு முழு தானியமாகும். இது கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. கோதுமை ரொட்டியுடன் ஒப்பிடுகையில், கம்பு ரொட்டி குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டதாகும். எனவே இது நீரிழிவு நோயை நிர்வகிக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. எனவே இந்த முழு தானிய கம்பு ரொட்டி வகை 2 நீரிழிவு நோயாளிகளில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

முளைத்த தானிய ரொட்டி

இது எசேக்கியேல் ரொட்டி எனவும் அழைக்கப்படுகிறது. இது முளைத்த முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டியாகும். தானியங்களை ரொட்டியாக தயார் செய்யும் முன்பாக அதை முளைக்க வேண்டும். இது அவைகளின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்கவும், குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் அமைகிறது. இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு முக்கியமானவையாகும். மற்ற ரொட்டி வகைகளை விட, முளைத்த தானிய ரொட்டி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Guava Leaves For Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கொய்யா இலை. எப்படி சாப்பிடணும் தெரியுமா?

ஆளிவிதை ரொட்டி

ஆளிவிதை ரொட்டி நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாகும். ஆய்வு ஒன்றில், ஆளிவிதை நுகர்வு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் செரிமான செயல்முறையை மெதுவாக்கி, நிலையான இரத்த சர்க்கரை அளவுகளுக்கு வழிவகுக்கிறது. இது தவிர, ஆளி விதையில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு தொடர்பான சிக்கல்களை நிர்வகிக்க உதவுகிறது.

புளிப்பு ரொட்டி

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ரொட்டிகளில் புளிப்பு ரொட்டியும் ஒன்று. இதற்கு முக்கியமான மற்றும் தனித்துவமான நொதித்தல் செயல்முறையே காரணமாகும். இந்த நொதித்தல் செயல்முறையானது மாவில் உள்ள மாவுச்சத்தை உடைத்து, செரிமானத்தை எளிதாக்குகிறது. இந்த ரொட்டியும் மற்ற ரொட்டிகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. பொதுவாக கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது உணவுகள் எவ்வளவு விரைவாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பதற்கான அளவீடு ஆகும். எனவே நீரிழிவு நோயை நிர்வகிக்க குறைந்த ஜிஐ உணவுகள் சிறந்ததாகும். புளிப்பு ரொட்டியில் உள்ள இயற்கை அமிலங்கள் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்குவதுடன், இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்துகிறது.

இந்த வகை ரொட்டி வகைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ரொட்டி வகைகளாகும். நீரிழிவு நோயாளிகள் இந்த ரொட்டி வகைகளை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க ஏதுவாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சுகர் லெவல் டக்குனு குறைய இலவங்கப்பட்டையுடன் இந்த ஒரு பொருள் சேர்த்துக்கோங்க!

Image Source: Freepik

Read Next

குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் இங்கே..

Disclaimer