$
Side Effects Of Not Taking Diabetes Medication: நீரிழிவு நோய் என்பது தீவிரமான நோயாகும். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை தொடங்கப்படாவிட்டால், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இந்த நிலையைத் தவிர்க்க தினமும் சர்க்கரை நோயாளிகள் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். எனினும், சர்க்கரை நோய்க்கு மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் விட்டாலோ அல்லது தற்செயலாக மருந்துகளைத் தவறவிட்டாலோ உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விகள் அனைவருக்கும் எழும். இது குறித்து சாரதா மருத்துவமனையின் பொது மருத்துவப் பேராசிரியர் டாக்டர் அனுராக் பிரசாத் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes in teenagers: இளைஞர்களை தாக்கும் சர்க்கரை நோய்… முக்கிய காரணங்கள் என்னென்ன?
நீரிழிவு நோயாளிகள் மருந்து எடுத்துக் கொள்ளாததன் விளைவுகள்
நீரிழிவு நோய் முழுமையாக மாற்ற முடியாத நோயாகும். இதில் ஒரு நபர் தனது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கவனத்தைக் கொள்ள வேண்டும். மேலும், நீரிழிவு நோய்க்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறாமல், சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். எப்போதாவது, அதாவது ஒன்று அல்லது இரண்டு முறை தற்செயலாக மருந்துகளை எடுத்துக் கொள்ள மறந்து விட்டால், அது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தாது.
இந்த விளைவை உடனடியாக உணர முடியாது. அதே நேரத்தில் நீரிழிவு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதைத் தவறவிடுவதுடன் வாழ்க்கை மற்றும் உணவு முறைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை எனும் போது உடல் ஆரோக்கியம் மோசமடையலாம். இது நோயாளிகளுக்கு வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

பக்கவாதம் ஏற்படுவது
ஒரு நபர் தொடர்ந்து நீரிழிவு மருந்துகளைத் தவறுபவராயின், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். அமெரிக்க ஸ்ட்ரோக் அசோசியேஷன் கருத்துப்படி,”இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், இரத்த நாளங்கள் உறைவதுடன், கொழுப்பு சேரலாம். இந்த கட்டிகள் இரத்த நாளங்களைச் சுருக்கி இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆக்ஸிஜன் மூளைக்குச் சரியாக செல்லாது. இதுவே பக்கவாதத்திற்கு காரணமாகிறது. அதிலும் ஆரோக்கியமானவர்களை விட, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது”.
இந்த பதிவும் உதவலாம்: Brown Sugar For Diabetes: சர்க்கரை நோயாளிகள் நாட்டுச் சர்க்கரை சாப்பிடுவது நல்லதா?
நரம்பு சேதம் ஏற்படுவது
மயோகிளினிக் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், இரத்த சர்க்கரையை நீண்ட நேரம் நிர்வகிக்காமல் இருப்பது, நரம்பு சேதத்தை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. உண்மையில் நீரிழிவு நோயால் இரத்த நாளங்கள் பலவீனமடைகிறது. இதனால், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நரம்புகளுக்குச் சரியாக செல்லவில்ல. இதனால் நரம்பு சேதம் ஏற்பட்டு ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலத்திற்கு மருந்துகளைத் தவறவிடக் கூடாது. மேலும் நீரிழிவு நோய்க்கு உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான செயல்களைக் கையாள வேண்டும்.
இரத்த சர்க்கரை அதிகரிப்பு
நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து, நீண்ட காலத்திற்கு நீரிழிவு மருந்துகளைத் தவறவிட்டால், இது தவிர ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவில்லை எனில், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை அதிகம் இருப்பது சிறுநீரகம், இதய பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு தீவிர நோய்களை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லையெனில் இது போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Fruits: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த பழங்களை சாப்பிடலாம்
Image Source: Freepik