How to stop food poisoning before it happens: பொதுவாக அன்றாட உணவில் ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். ஆனால், இவ்வாறு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டதா, பரிமாறப்பட்டதா அல்லது சேமிக்கப்பட்டதா என்பது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா? உண்மையில், என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது போல, அது பாதுகாப்பானதாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில், ஆரோக்கியமான உணவு கூட சில சமயங்களில் விஷமாக மாறலாம்.
பொதுவாக ஃபுட் பாய்சனிங் ஆனது ஒரு தீவிரமான நிலையாகும். இதனால் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், இளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு உயிருக்கே ஆபத்தாகும் சூழல் உண்டாகலாம். உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் லேசாக இருக்கலாம். அதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. எனினும் இன்னும் சிலருக்கு இது மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
எனவே உட்கொள்ளும் உணவு தயாரிக்கப்பட்டதா, பரிமாறப்பட்டதா அல்லது பாதுகாப்பாக சேமிக்கப்பட்டதா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை அப்புறப்படுத்துவதே சிறந்த ஆலோசனை ஆகும். மேலும் உணவு மூலம் பரவும் நோயைத் தவிர்ப்பதற்கு சில பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம். அவற்றைக் குறித்து காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: வயிற்றுப் பிரச்சனையால் அவதியா? விரைவில் குணமடைய இதை ஃபாலோ பண்ணுங்க போதும்
உணவு விஷம் ஏற்படுவதைத் தவிர்க்க செய்ய வேண்டியவை
நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது
உணவு விஷம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு, உணவு தயாரிப்பதற்கு அல்லது உட்கொள்வதற்கு முன்னதாக கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவுவது அவசியமாகும். கைகளை மட்டுமல்லாமல், உணவுகளை சமைக்கக் கூடிய பாத்திரங்களையும், உணவு மேற்பரப்புகளையும் சுத்தமாகக் கழுவுவது அவசியமாகும். மேலும் உணவைக் கையாளுவதற்கு முன்பும், மீன், முட்டை, இறைச்சி மற்றும் காய்கறிகள் உட்பட பச்சை உணவைக் கையாண்ட பிறகும் அதை முழுமையாக உலர வைக்க வேண்டும்.
சாப்பிடத் தயாராக உள்ள உணவிலிருந்து பச்சை உணவுகளைத் தனியாக வைப்பது
பச்சை இறைச்சி, கோழி, மீன் மற்றும் மட்டி போன்றவற்றை மற்ற உணவுகளிலிருந்து விலக்கி வைத்திருப்பது அவசியமாகும். இதன் மூலம் குறுக்கு மாசுபாட்டைத் தவிர்க்கலாம். மேலும், இதனால் உணவில் சேரக்கூடிய எந்த பாக்டீரியாவும் அழிக்கப்படாது.
உணவை நன்கு சமைக்க வேண்டும்
உணவை நன்கு சமைப்பதை உறுதி செய்வது அவசியமாகும். குறிப்பாக, இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் முட்டைகள் போன்றவற்றை சரியான வெப்பநிலையில் சமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உணவு சரியாக சமைக்கப்படாவிட்டால், பாக்டீரியாக்கள் கொல்லப்படாமல் போகலாம். எனவே உணவை நன்கு சமைப்பதை உறுதி செய்வதன் மூலம் உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஃபுட் பாய்சனைத் தவிர்க்க சமையலறையில் இந்த சின்ன, சின்ன விஷயங்கள மட்டும் செய்யுங்க...!
குடிநீர் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்
காலரா மற்றும் டைபாய்டு போன்ற நீரினால் பரவக்கூடிய நோய்கள் ஏற்படலாம். எனவே குடிக்க, சமைக்க மற்றும் காய்கறிகளைக் கழுவ வடிகட்டிய, வேகவைத்த அல்லது பாட்டில் தண்ணீரைப் பயன்படுத்துவதலாம். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை உட்கொள்வதைத் தடுக்கலாம். மேலும் பாதுகாப்பான நீரைப் பயன்படுத்துவதன் மூலம் பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். அதே சமயம், உணவின் மீது பூச்சிகள் உட்காருவதைத் தவிர்க்க அதை சேமித்து வைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.
புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது
எஞ்சிய உணவுகளுக்குப் பதிலாக புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும். இதன் மூலம் மாசுபட்ட உணவை உட்கொள்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். ஏனெனில், மீதமுள்ள உணவில் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருக வாய்ப்புள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகள் மாசுபடுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இது போன்ற வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் ஃபுட் பாய்சனிங் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நீங்க சமைக்கக்கூடிய இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தாதீங்க.. அப்றம் ஆபத்து உங்களுக்குத் தான்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version