what causes food poisoning in summer: மற்ற காலங்களை விட கோடை காலத்தில் உணவு விஷம் (Food Poisoning) ஏற்படும் அபாயம் அதிகம். ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் மட்டுமே இந்தப் பிரச்னை வந்தாலும், அதற்குப் பின்னால் வேறு காரணங்களும் உள்ளன.
ஃபுட் பாய்சன் காரணமாக, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பிடிப்புகள், தலைவலி, சோர்வு, நீரிழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Summer Diarrhea: வெயில் காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்? தடுப்பது எப்படி?
உணவு விஷத்தின் காரணங்களும் தடுப்பு நடவடிக்கைகளும்

உணவு நச்சுத்தன்மையைத் தவிர்ப்பதற்கான முதல் படி, உங்கள் உணவை உண்ணும் முன் காய்கறி, கை மற்றும் பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும். முடிந்தால், உணவு சுத்திகரிப்பான்களையும் பயன்படுத்தலாம்.
எஞ்சிய உணவை குளிர்ந்த இடத்தில் அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், உணவில் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கலாம்.
பெரும்பாலும் நம் கைகள் மூலமாகவே நமக்கு தொற்று ஏற்படுகிறது. நோய்க்கிருமிகள் கைகள் வழியாக நம் உடலில் நுழைகின்றன. உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும், தொடர்ந்து கைகளைக் கழுவவும். இது தொற்று அல்லது நோய்களைத் தவிர்க்க உதவும்.
தெரு உணவுகள் மிகவும் சுவையாகத் தோன்றலாம். ஆனால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்த உணவுகள் திறந்திருக்கும் போது அதில் கொசுக்கள் மற்றும் ஈக்கள் அவற்றின் மீது உட்காரும்போது, பாக்டீரியாக்கள் வளர்ந்து, அது நேரடியாக நம் வயிற்றுக்குள் செல்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : Eggs and Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடக் கூடாதா? இதோ உங்களுக்கான பதில்!
நீங்கள் பச்சையாகவோ அல்லது சமைக்கப்படாத உணவையோ சாப்பிட்டால், உங்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்படலாம். அசைவம் செய்யும் போதெல்லாம் நன்றாக சமைக்கவும்.
சமைத்த உணவை மட்டும் அல்ல, சமைக்கப்படாத பச்சை இறைச்சியையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இல்லையெனில் பாக்டீரியாக்கள் உணவை பாதிக்கலாம்.
சமைப்பதற்கு முன் கைகளை கழுவுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சமையலறையை சுத்தம் செய்வதும் முக்கியம். தினமும் சமையலறையை சுத்தம் செய்ய வேண்டும். புதிய உணவுக்கு அருகில் சிந்தப்பட்ட உணவு நோய்க்கிருமிகளை ஈர்த்து உங்களை நோய்வாய்ப்படுத்தும். சமையலுக்குப் பாத்திரத்தைப் பயன்படுத்தும் போதெல்லாம், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Kidney Disease: இந்த பருப்பு வகைகளை மறந்தும் சிறுநீரக நோயாளிகள் சாப்பிடக்கூடாது!
ஃபுட் பாய்சன் அறிகுறிகள் என்ன?

உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகள் அடிப்படை காரணங்கள் மாறுபடும். ஆனால், பெரும்பாலான மக்கள் உணவு நச்சுத்தன்மையின் பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை சந்திக்கலாம்_
- குமட்டல் மற்றும் வாந்தி
- வயிற்றுப்போக்கு
- மலத்தில் இரத்தம்
- காய்ச்சல் (உடல் வலி மற்றும் குளிர்ச்சியுடன் அல்லது இல்லாமல்)
- வயிற்றுப் பிடிப்புகள்
- பலவீனம் மற்றும் மந்தமான தன்மை
- பசியின்மை
உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகள் அசுத்தமான உணவை உண்ட சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களுக்குள்ளோ தொடங்கும். அரிதான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் தோன்றுவதற்கு வாரங்கள் கூட ஆகலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Fingernail Hurt: கை நகம் வலிக்கிறதா? சாதாரணமா விட்றாதீங்க பாஸ்..
ஃபுட் பாய்சனை வீட்டிலேயே எவ்வாறு சரிசெய்வது?

- உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றவும்.
- காரமான, எண்ணெய், திட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். சாதுவான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை (மோர், தேங்காய் தண்ணீர், தயிர் சாதம், தயிர் சேர்த்து கிச்சடி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த அரிசியிலிருந்து வடிகட்டிய நீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சில விருப்பங்கள்) சிறிய அளவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
- மது, காஃபின் அல்லது சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Jaggery: கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் சர்க்கரை அல்லது வெல்லம் சாப்பிடுவது நல்லதா?
- வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியால் இழந்த திரவங்களை குடிநீர் அல்லது வாய்வழி ரீஹைட்ரேஷன் தெரபி மூலம் எடுக்கவும்.
- மருத்துவரின் ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது வயிற்றுப்போக்கு எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.
Pic Courtesy: Freepik