How To Get Energy Fast Naturally: சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அன்றாட வேலைகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக, வாழ்க்கை மிகவும் பிஸியாகிவிடுகிறது. இதனால், நம்மை கவனிக்க நமக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுகிறது.
நம்மில் சிலர் நாள் முழுவதும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வோம். இதனால், அவர்களின் வேலைகளை சரியாக செய்ய முடியாது. இதிலிருந்து எப்படி விடுபடுவது என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Things Do Before Going To Bed: தூங்கும்
வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிடவும்

உங்கள் உணவில் போதுமான அளவு வைட்டமின் பி இருப்பதை உறுதி செய்யுங்கள். பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. உடலில் வைட்டமின் பி12 குறைவதால் சோர்வு, மனநிலை மாற்றங்கள், எரிச்சல், பதட்டம் மற்றும் பலவீனம் ஏற்படுகிறது. இதற்கு முட்டை, சீஸ், தயிர், முழு தானியங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மெக்னீசியம் அளவு அவசியம்

உடலில் மெக்னீசியம் இல்லாத காரணத்தினாலும் பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படலாம். இது உடலில் நிகழும் 300-க்கும் மேற்பட்ட உயிர்வேதியியல் எதிர்வினைகளில் ஈடுபட்டுள்ளது. எனவே, இது போதுமான அளவில் இருப்பது முக்கியம். மெக்னீசியத்தின் அளவை அதிகரிக்க, பாதாம், புதினா மற்றும் கொத்தமல்லி தண்ணீர் மற்றும் மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Anger Control Tips: கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள்
உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்

உங்கள் உடலில் போதுமான அளவு நீரேற்றம் இருந்தால், உங்களுக்கு ஆற்றல் பற்றாக்குறை இருக்காது. எனவே, அதிக தண்ணீர் குடிக்கவும், மது அருந்துவதை குறைக்கவும். ஆல்கஹால் உடலை நீரிழக்கச் செய்கிறது, இது உங்களை சோர்வடையச் செய்யும். ஆனால், நீர் உங்கள் உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இது தவிர, எலுமிச்சை தண்ணீர், தேங்காய் தண்ணீர் மற்றும் மோர் போன்ற ஹைட்ரேட்டிங் முகவர்களையும் நீங்கள் எடுக்க ஆரம்பிக்கலாம்.
புரத சமநிலையை கவனித்துக் கொள்ளுங்கள்

போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் அளவைக் குறைப்பதும் ஆற்றலை மேம்படுத்தலாம். கார்போஹைட்ரேட்டுகளை அதிகமாக உட்கொள்வது (பருப்பு, அரிசி, பிரியாணி) உங்களை கனமாகவும் சோம்பலாகவும் உணர வைக்கும். இது தவிர, புரதம் நிறைந்த உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : sleeping tips: உங்களின் தூக்கத்தை கெடுக்கும் 5 கெட்ட பழக்கங்கள்!
போதிய அளவு தூக்கம் அவசியம்

தூக்கமின்மை சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே, போதுமான அளவு ஓய்வு ஏடுகள். மேலும், பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் 20 நிமிடம் ஓய்வெடுப்பது நல்லது. இது உடலில் ஆற்றலைப் பராமரிப்பது மட்டுமின்றி நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும்.
ஆரோக்கியமான கொழுப்புகள்

உடலில் ஆற்றலைப் பராமரிக்க ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் உணவில் 1 தேக்கரண்டி ஆளி விதைகள், எள், பூசணி விதைகள், பாதாம், அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம், உடலில் ஆரோக்கியமான கொழுப்பை அதிகரிக்கலாம். வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும் ஆற்றலை பராமரிக்கவும் இது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம் : செக்ஸ் வாழ்க்கை மன ஆரோக்கியத்தை பாதிக்குமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே
தைராய்டு அளவை சோதிக்கவும்

உங்கள் தைராய்டு சுரப்பியை தொடர்ந்து பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், தைராய்டு அளவு மாறினால், நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் மாறுவீர்கள். உங்களுக்கு இரத்த சோகை இருந்தாலும் இந்த பிரச்சனைகள் இருக்கலாம். எனவே, உணவில் அதிக கவனம் செலுத்தி, அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
Pic Courtesy: Freepik