Meditation Benefits: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தினமும் 20 நிமிடம் தியானம் செஞ்சா போதும்

  • SHARE
  • FOLLOW
Meditation Benefits: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தினமும் 20 நிமிடம் தியானம் செஞ்சா போதும்

தியானம் செய்வதன் விளைவுகள்

தியானம் மனதை தளர்வாக்கி, பல பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. குறிப்பாக மன அமைதியுடன் இருப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத் துடிப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. தியானத்தின் முக்கிய நன்மை மன அழுத்தத்தைக் குறைப்பதாகும். இதை அறிந்த பலரும், தியானத்தில் ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். மன அழுத்தத்தில் இருக்கும் போது கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவு அதிகரிக்கலாம். இதனால், மனச்சோர்வு, மன அழுத்தம், தூக்கக் கலக்கம், இரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் உற்பத்தி செய்வது நிறுத்தப்படுகிறது.

தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

தியானம் செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இப்போது தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

நினைவாற்றல் மேம்பாடு

தியானம் செய்வதால் மனம் அமைதி அடைவதுடன், நினைவாற்றலை மேம்படுத்தும். ஆனால் இது ஒரே நாளில் செய்வதால் மட்டும் நடக்காது. இதனை தினசரி வழக்கமாக மாற்றும் வரை தொடர்ந்து பயிற்சி செய்து வர வேன்டும். இது எண்ணங்களில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது.

படைப்பாற்றலை அதிகரிக்க

தியானம் செய்வதன் மூலம் முழு விழிப்புணர்வு அடைந்த நிலையில், மனதை ஒருநிலைப்படுத்தலாம். இது சிரமமின்றி வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைச் சமாளிக்க உதவுகிறது. தியானத்தின் மூலம் நினைவாற்றல் அதிகரிப்பதுடன், படைப்பாற்றலை அதிகரிக்க முடியும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது, இதய பாதிப்பை ஏற்படுத்தும். இது தவிர பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். இதனைத் தவிர்க்க தியானம் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. தியானம் செய்யும் போது இதயத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் நரம்புகள் தளர்த்தப்படுகிறது. இது இதயத்தை சாத்தியமான பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வலியைக் கட்டுப்படுத்த

மத்திய நரம்பு மண்டலத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட உணர்வே வலியாகும். மன அழுத்த சூழ்நிலைகளுக்கு உள்ளாகும் போது, வலி அதிகமாக இருக்கும். அன்றாட வாழ்வில் தியானம் செய்வதன் மூலம் இந்த எரிச்சலூட்டும் உணர்வை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும். தியானம் வலியைக் குறைக்கவும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

உற்பத்தித்திறன் அதிகரிக்க

மனதை ஒருநிலைப்படுத்தி செய்யும் செயல்கள் விரைவாகவும், எந்த சிக்கல்களுமின்றி நிறைவேறும். தியானம் செய்வதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம். அதாவது தியானம் செய்வது ஒரு செயலில் முழு ஈடுபாட்டுடன் வைப்பதற்கு வழிவகுக்கும். மேலும், இது செயலில் அதிக தெளிவு மற்றும் கவனத்தை அதிகரிப்பதன் மூலம், செயல்திறனை அதிகரிக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: National Lazy Day: சோம்பேறித்தனத்தை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகள்

Image Source: Freepik

Read Next

நாள் முழுவதும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறீர்களா? அப்போ இத ஃபாலோ பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்