ஆபாச வீடியோக்களை அதிகமாக பார்க்கிறீர்களா.? ஜாக்கிரதை.!

  • SHARE
  • FOLLOW
ஆபாச வீடியோக்களை அதிகமாக பார்க்கிறீர்களா.? ஜாக்கிரதை.!


Is Watching Porn Bad: இன்றைய நவீன காலத்தில், பல ஆண்கள் மற்றும் பெண்கள், ஆபாச வலையில் சிக்கியுள்ளனர். குறிப்பாக செக்ஸ் வீடியோக்களை (Porn Video) பார்த்து, அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் 

நம் நாட்டில் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை உணராமல், மக்கள் இதற்கு அடிமையாகின்றனர். அதிகமாக செக்ஸ் வீடியோ (Sex Video)  பார்ப்பதால் என்ன ஆகும் என்று இங்கே விரிவாக காண்போம். 

ஆபாச வீடியோக்கு அடிமை.! (Sex Videos Addiction)

ஆபாச வீடியோக்கள் (Porn Video) பார்ப்பது இளைஞர்களின் ஃபேஷன் ஆகிவிட்டது. உள்ளங்கையில் ஃபோனும், இணைய இணைப்பும் இருப்பதால், இந்த செக்ஸ் வீடியோக்களை (Sex Video) எப்போது வேண்டுமானாலும் பார்க்கிறார்கள். சிலர் குறைந்த நேரத்தை மட்டுமே இதற்காக நேரம் ஒதுக்குகிறார்கள். மற்றவர்கள் பெரும்பாலான நாட்களில் அவற்றைப் பார்ப்பதற்கு அடிமையாகிறார்கள். இதனால், பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த இதை செய்யுங்கள்!

உணர்ச்சியை தூண்டும்!

ஆபாச வீடியோ (Porn Video) பார்ப்பது ஒரு விதமான உணர்ச்சியை தூண்டுகிறது. அதை பார்த்தபடியே உறங்கிவிடுகிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால் அவர்களின் வாழ்க்கையே அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் வேலையை விட்டுவிடுகிறார்கள். இந்தப் புதைமணலில் இருந்து உடனடியாக வெளியேற கடினமாக உழைக்கவும்.

தம்பதியினருக்குள் சண்டை..

ஆபாச வீடியோக்களைப் (Porn Video) பார்த்த பிறகு, அதில் உள்ளவாறு உடலுறவு மேற்கொள்ள வேண்டும் என சில ஆண்கள் நினைக்கிறார்கள். தங்கள் துணையும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது நடக்காது. ஏனென்றால் அந்த வீடியோக்களில் இருப்பது நடிப்பு மட்டுமே. இதுபோன்ற விஷயங்கள் தங்கள் துணையிடமிருந்து வராதபோது, தம்பதியினரிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுகிறது. ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவற்றிலிருந்து உங்களைத் திசைதிருப்ப ஏதாவது செய்யுங்கள்.

Image Source: Freepik

Read Next

மழை ஸ்டார்ட் ஆயிடுச்சி! நீங்க தயாராக வைத்திருக்க வேண்டியவை இது தான்..!

Disclaimer