மழை ஸ்டார்ட் ஆயிடுச்சி! நீங்க தயாராக வைத்திருக்க வேண்டியவை இது தான்..!

  • SHARE
  • FOLLOW
மழை ஸ்டார்ட் ஆயிடுச்சி! நீங்க தயாராக வைத்திருக்க வேண்டியவை இது தான்..!


வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.

மிக்ஜம் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் வலுப்பெறுவதால் பல்வேறு இடங்களில் தீவிரமாக மழை பெய்யும் என கூறப்படுகிறது. இதனால் அடுத்து வரும் மூன்று நாளைக்கு தமிழகத்தில் மிதமானது முதல் கனமாக வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மழைக்கு முன்னதாகவே சில அத்தியாவசிய பொருள்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இதில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Meditation Benefits: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தினமும் 20 நிமிடம் தியானம் செஞ்சா போதும்

மழைக்காலத்தில் தேவையான அத்தியாவசிய பொருள்கள்

ரெயின்கோட் மற்றும் குடை

மழைக்காலத்தில் வெளியில் செல்லும் சூழல் உருவாகும் நிலையில் நாம் முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும். அவசியமான காரணங்களுக்காக வெளியில் செல்ல நினைப்பவர்கள் குடை மற்றும் ரெயின்கோட் போன்றவற்றைத் தயாரா வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, ரெயின்கோட்டுகள் முழு நீளமாக இருக்க வேண்டும். ரெயின்கோட் தலைமுழுவதும் நிரப்பியவாறு அமைய வேண்டும். இல்லையெனில் அதிகளவு மழைநீரால் தலை நனையும் போது சைனஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

அவசர விளக்குகள்

மழை பெய்யும் சமயத்தில் சில இடங்களில் பலத்த காற்று, இடி மின்னல் போன்றவை ஏற்படலாம். இதனால் மின் கம்பிகள் அறுந்து, மின்வெட்டு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே மின்சாரம் தடைபட்ட நேரத்தில் வீட்டில் அவசர விளக்குகள் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் சார்ஜிங் விளக்குகளைப் பயன்படுத்தும் போது மின்சாரம் இருக்கும் சமயத்தில் பேட்டரியை முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலுதவி பெட்டி

பலத்த காற்று மற்றும் மழையால் உடல் பாதுகாப்பு ஆபத்து வரும் சூழ்நிலை ஏற்படலாம். குளிர்காலத்தில் பொதுவாக நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். இந்த கால கட்டத்தில் பாக்டீரியா எதிர்ப்பு கிரீம், பூஞ்சை காளான் பவுடர் மற்றும் இன்னும் பிற அத்தியாவசிய மருந்துகளைக் கொண்ட அடிப்படை முதலுதவி பெட்டையை எப்போதும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இத தினமும் செய்யுங்க.

நீரிழிவு அளவிடும் கருவிகள்

பொதுவாக குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அதிகமாக காணப்படலாம். இந்த குளிர்ச்சியான சூழல் நீரிழிவு அளவிடும் கருவிகள் மற்றும் உபகரணங்களையும் பாதிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் துல்லியமான அளவீடுகளை உறுதிப்படுத்த, சோதனைக்கு முன் உடல் வெப்பநிலை சாதாரணமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஸ்பிக்மோமானோமீட்டர்

ஸ்பிக்மோமானோ மீட்டர் உடலில் இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியாகும். மழைக்காலத்தில் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்படும் நிலையில் வீட்டிலேயே ஸ்பிக்மோமானோமீட்டர் கருவியைத் தயாராக வைத்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இரத்த அழுத்தத்தைக் கணக்கிட்டு, மழைக்காலத்தில் தங்களுடைய உணவுமுறைகளை சரியாகக் கையாளலாம்.

இவை தவிர, ஸ்மார்ட்போன் பாதுகாப்பு கவர்கள், நீர்ப்புகா கவர்கள், மற்றும் நீர்ப்புகாத செருப்பு உள்ளிட்ட மற்ற பொருள்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health: இந்த 4 உணவுகளை சாப்பிட்டால்… மூளை சும்மா கம்பியூட்டர்மாதிரி சுறுசுறுப்பா வேலை செய்யும்!

Image Source: Freepik

Read Next

Mental Health: இந்த 4 உணவுகளை சாப்பிட்டால்… மூளை சும்மா கம்பியூட்டர்மாதிரி சுறுசுறுப்பா வேலை செய்யும்!

Disclaimer

குறிச்சொற்கள்