Doctor Verified

Heart Surgery-க்கு பிறகு செய்யக்கூடாத தவறுகள்..

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள். மருந்து, உணவு, உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியத்தில் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றி முழுமையான தகவல்கள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
Heart Surgery-க்கு பிறகு செய்யக்கூடாத தவறுகள்..


இன்றைய காலத்தில் இதயம் தொடர்பான நோய்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, இதய நோய்கள் உலகளவில் அதிகமான இறப்புகளுக்குக் காரணமாகின்றன. இதைத் தடுக்கும் வகையில் பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்றம், திறந்த இதயம் அறுவை சிகிச்சை போன்றவை செய்யப்படுகின்றன.

ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை அலட்சியம் செய்யும் போது குணமடைதல் தாமதமாகி விடுகிறது. இதனால் மீண்டும் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

டெல்லியில் உள்ள மேக்ஸ் ஸ்மார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இணை இயக்குநரும், இதய அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஆதித்ய குமார் சிங், இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனிக்க வேண்டிய விஷயங்களை, இங்கே பகிர்ந்துள்ளார்.

artical  - 2025-08-23T233639.906

தவிர்க்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்

மருந்துகளை நிறுத்த வேண்டாம்

சிகிச்சைக்குப் பிறகு சில வாரங்களில் நோயாளிகள் தாங்களாகவே மருந்துகளை நிறுத்துவதால், குணமடைதல் தாமதமாகிறது. மருத்துவர் கூறிய வரை மருந்துகளை முறையாக உட்கொள்வது அவசியம்.

விரைவில் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டாம்

சிகிச்சைக்குப் பிறகு 1 முதல் 3 மாதங்கள் ஓய்வெடுத்து மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். எடை தூக்கும் பழக்கம், படிக்கட்டில் வேகமாக ஏறுதல், நீண்ட பயணம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இதயம் பலவீனமடையும் போது..   உடல் இந்த 7 எச்சரிக்கைகளை அளிக்கும்..

கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டாம்

அதிக எடையை தூக்குவது, ஓடுவது அல்லது திடீர் பயிற்சிகள் செய்வது காயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஆரம்பத்தில் லேசான கை-கால் அசைவுகள் மட்டுமே செய்ய வேண்டும்.

மன ஆரோக்கியத்தை புறக்கணிக்க வேண்டாம்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிலர் மன அழுத்தத்திற்குள் செல்லக்கூடும். ஆழ்ந்த சுவாச பயிற்சி, புத்தகம் வாசித்தல், இசை கேட்குதல் போன்ற செயல்கள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.

உணவில் கவனக்குறைவாக இருக்காதீர்கள்

வறுத்த உணவு, உப்பு அதிகம் உள்ள உணவு, மதுபானம், புகைபிடித்தல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமச்சீரான வீட்டுச் சாப்பாடு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

artical  - 2025-08-23T233748.685

கவனிக்க வேண்டியவை

* மருத்துவர் கூறிய மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

* காயத்தை சுத்தமாகவும் உலர்ந்தும் வைத்திருங்கள்.

* இரத்த அழுத்தம், சர்க்கரை, இதய துடிப்பு ஆகியவற்றை வீட்டிலேயே கண்காணிக்கவும்.

* எடையை கவனமாக பராமரிக்கவும்.

* ஆரம்ப நாட்களில் கூட்ட நெரிசல் உள்ள இடங்களைத் தவிர்க்கவும்.

* எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகவும்.

இறுதியாக..

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீட்பு காலத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக பின்பற்றுவது மிகவும் அவசியம். மருத்துவர் கூறிய ஓய்வு, உணவு, மருந்து மற்றும் உடற்பயிற்சி வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே நோயாளி விரைவாகவும் பாதுகாப்பாகவும் குணமடைய முடியும்.

Read Next

ஆரோக்கியமானது போல் தோன்றும்.. ஆனால் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.. இதய நிபுணர் கூறும் அபாயகரமான 10 உணவுகள்.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்