முடி உதிர்வு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினை. மருத்துவத்தில் முன்னேற்றத்தால், Hair Transplant சிகிச்சை ஒரு நிலையான தீர்வாகி விட்டது. ஆனால், சிகிச்சைக்கு பிறகு செய்யும் பராமரிப்பு தான் முடிவின் தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணி.
முடி மாற்று சிகிச்சைக்கு பிறகு செய்ய வேண்டிய பராமரிப்புகள்
சுத்தம் மிக அவசியம்
முடி மாற்று சிகிச்சைக்கு பிறகு, முதல் சில நாட்களில் தலை சுத்தத்தை கவனமாக செய்ய வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மென்மையான ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்தவும். பலமாக தேய்த்தல் அல்லது கீறல் செய்ய வேண்டாம்.
சூரிய ஒளியைத் தவிர்க்கவும்
சிகிச்சைக்கு பிறகு, தலைத் தோல் மிகவும் சென்சிடிவ் ஆக இருக்கும். நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது, முடி வேர்களில் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். வெளியில் செல்லும் போது லூசான தொப்பி அல்லது ஸ்கார்ஃப் அணியவும்.
தலைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
சிகிச்சைக்குப் பிறகு சில வாரங்கள், தலைப்பகுதியில் அழுத்தம் வரக்கூடிய ஹெல்மெட், டோப்பி போன்றவற்றைத் தவிர்க்கவும். இது புதிய முடி வேர்களை பாதிக்கக்கூடும்.
மேலும் படிக்க: வழக்கமான உச்சந்தலை மசாஜ் செஞ்சா வேகமாக முடி வளருமா? என்னனு தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கியமான உணவு பழக்கம்
புதிய முடி வளர்ச்சிக்கு, புரதம், இரும்புச் சத்து, வைட்டமின் B மற்றும் E மிக அவசியம். முட்டை, மீன், கீரைகள், விதைகள், பாதாம் போன்றவற்றை உணவில் சேர்க்கவும். தினமும் போதுமான அளவு நீர் குடிப்பதும் முக்கியம்.
மருத்துவர் கூறும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மருந்துகள் அல்லது vitamin supplements-ஐ மருத்துவர் பரிந்துரைத்தால், அவற்றை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி மற்றும் வியர்வையை கட்டுப்படுத்தவும்
சிகிச்சைக்கு பிறகு முதல் 10–14 நாட்கள் கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்க்கவும். அதிக வியர்வை, தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
பொறுமை வேண்டும்
Hair transplant-க்கு பிறகு முடி வளர்ச்சி ஒரு நாளில் நிகழாது. பொதுவாக 3–4 மாதங்களில் புதிய முடி வளரத் தொடங்கும், 8–12 மாதங்களில் முழு பலனும் தெரியும். இடையில் சிறிய முடி உதிர்வுகள் சாதாரணம்.
தொந்தரவு இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்
சிகிச்சைக்கு பிறகு சிவத்தல், வீக்கம், அதிக வலி, அல்லது சீல் போன்றவை இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும்.
குறிப்பு
Hair transplant சிகிச்சை வெற்றிகரமாக அமைய, சிகிச்சைக்கு பிறகு மேற்கொள்ளும் aftercare மிக முக்கியம். சரியான பராமரிப்பு, ஆரோக்கியமான உணவு, மற்றும் மருத்துவர் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதால், நீண்டநாள் இயற்கையான மற்றும் அடர்த்தியான முடியைப் பெற முடியும்.