Doctor Verified

கர்ப்பிணி பெண்களே.! நீர்ச்சத்து குறைபாடு உங்கள் குழந்தைக்கு பெரிய அபாயம்.. நிபுணர் எச்சரிக்கை.!

கர்ப்பிணிப் பெண்களில் நீர்ச்சத்து குறைவால் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு, குறைந்த எடை, குறைப்பிரசவம் போன்ற தீவிர பிரச்சினைகள் ஏற்படும் என IVF நிபுணர் எச்சரிக்கிறார். கர்ப்ப காலத்தில் தண்ணீர் குடிக்கும் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
கர்ப்பிணி பெண்களே.! நீர்ச்சத்து குறைபாடு உங்கள் குழந்தைக்கு பெரிய அபாயம்.. நிபுணர் எச்சரிக்கை.!


கர்ப்ப காலத்தில் பெண்கள் பல்வேறு உடல்நல சவால்களை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் முக்கியமானதும் பொதுவானதும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஆகும். சாதாரணமாக நீர்ச்சத்து குறைவால் சோர்வு, தலைசுற்றல், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு கடுமையான அபாயமாக மாறும்.

இதுபற்றி பிருந்தாவனில் உள்ள மம்மாஸ் பிளெசிங் IVF மற்றும் பிறப்பு பாரடைஸ் மருத்துவமனையின் இயக்குநரும் IVF நிபுணருமான டாக்டர் ஷோபா குப்தா, “கர்ப்ப காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு அம்னோடிக் திரவத்தை பாதித்து, குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிய இடையூறாகும்” என எச்சரிக்கிறார்.

pregnancy gas

கர்ப்பத்தில் நீரிழப்பு – குழந்தைக்கு ஏற்படும் அபாயங்கள்

1. பிறப்பு குறைபாடுகள்

அம்னோடிக் திரவம் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமானது. நீரிழப்பு ஏற்பட்டால் இந்த திரவத்தின் அளவு குறைந்து, குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இதன் விளைவாக, பிறப்பு குறைபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது.

2. ஊட்டச்சத்து குறைபாடு

நீரிழப்பு தாயின் உடலில் இரத்த ஓட்டத்தைக் குறைத்து, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை பாதிக்கும். இதனால், கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல், அவர்களின் வளர்ச்சி தாமதமாகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் மாங்காய் சாப்பிடலாமா.? மருத்துவர் விளக்கம்..

3. குறைப்பிரசவ அபாயம்

மருத்துவர்கள் கூறுவதுப்படி, நீரிழப்பு கருப்பைச் சுருக்கத்தை தூண்டும். இதனால், குறைப்பிரசவம் (Preterm Delivery) ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

4. குறைந்த எடை

நீர்ச்சத்து குறைபாட்டால் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து செல்லாது. இதன் விளைவாக, குழந்தை குறைந்த எடையுடன் பிறக்க வாய்ப்பு அதிகம்.

pregnancy-massage-benefits-in-tamil-01

கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

*தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் (குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர் வரை).

* தேங்காய் நீர், மோர், சூப் போன்ற திரவங்களை உட்கொள்ளுங்கள்.

* நீரிழப்பு அறிகுறிகள் (வாய் வறட்சி, தலைசுற்றல், சிறுநீர் குறைவு) இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

* அதிக வெப்பம் உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருக்காமல் கவனமாக இருங்கள்.

* காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற நீரிழப்பை அதிகரிக்கும் பானங்களை தவிர்க்கவும்.

இறுதியாக..

கர்ப்ப காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு என்பது சாதாரண பிரச்சினையாகத் தோன்றினாலும், அது குழந்தைக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். பிறப்பு குறைபாடு, குறைந்த எடை, குறைப்பிரசவம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க, கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் நீரேற்றமாக இருக்க வேண்டும். "தண்ணீர் தான் கர்ப்பிணி பெண்களுக்கு உயிர்காக்கும் மருந்து" என நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் பகிர்வுக்காக மட்டுமே. கர்ப்பிணிப் பெண்கள் நீரிழப்பு அல்லது பிற பிரச்சினைகளை எதிர்கொள்வதாக இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

Read Next

கர்ப்ப காலத்தில் மாங்காய் சாப்பிடலாமா.? மருத்துவர் விளக்கம்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 20, 2025 17:36 IST

    Published By : Ishvarya Gurumurthy