Fri Sep 11, 2026 | 10:20 PM IST

Doctor Verified

அக்குள் பகுதி கருமையைப் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியங்கள்.. மருத்துவர் தரும் விளக்கம்

சரும ஆரோக்கியத்தில் அக்குள் பகுதி பலரும் கவனிக்காத ஒன்றாகும். எனினும், அக்குள் பகுதியைக் கருமையாக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இதில் அக்குள் பகுதி கருமையைப் போக்க உதவும் சிறந்த இயற்கை வைத்தியங்கள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

சரும ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பலரும் முகம், கை, கால்கள் போன்ற பகுதிகளிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், அக்குள் பகுதியானது மக்கள் பலராலும் புறக்கணிக்கக்கூடிய பகுதியாகும். எனினும், சிலர் டியோடரண்ட், முடி அகற்றும் கிரீம் அல்லது அடிக்கடி ஷேவிங் போன்றவற்றை செய்வதால் அக்குள் கருமை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இது தன்னம்பிக்கையைக் குறைத்து, ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியத் தயங்கச் செய்ய வைக்கிறது. மேலும், சந்தையில் கிடைக்கும் பல கிரீம்கள் மற்றும் சிகிச்சைகள் உடனடி முடிவுகளைத் தருகின்றன என்று நம்புகின்றனர்.

ஆனால் அவற்றில் காணப்படும் ரசாயனங்கள் நீண்ட காலத்திற்கு சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான தோல் பராமரிப்பு மற்றும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் படிப்படியாக தெளிவான மற்றும் சீரான சரும நிறத்திற்கு வழிவகுக்கும். இந்த வைத்தியங்கள் கறைகளை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், சருமத்தை ஊட்டமளித்து, உணர்திறன் வாய்ந்த பகுதியை ரசாயனங்கள் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. இது குறித்த தகால்களுக்கு, லக்னோவின் விகாஸ் நகரில் அமைந்துள்ள பிரஞ்சல் ஆயுர்வேத மருத்துவமனையின் டாக்டர் மணீஷ் சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: அக்குள் பகுதி கருப்பா இருக்கா? மென்மையா, வெள்ளையா மாற்ற கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க

அக்குள் கருமை பகுதியைப் போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்

மஞ்சள் கலந்த உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாற்றில் கேட்டகோல் என்சைம்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் உள்ள கறைகளை குறைக்க பெரிதும் உதவுகின்றன. மேலும், மஞ்சளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகின்றன. டெர்மட்டாலஜி ரிசர்ச் இதழின் படி, மஞ்சள் பயன்படுத்துவது சரும நிறமியைக் குறைக்க உதவுகிறது. அதன் படி, உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து, அக்குள்களில் 10 நிமிடங்கள் தடவி, பின்னர் துவைக்கலாம்.

கற்றாழை ஜெல்

டாக்டர் மணீஷ் சிங் அவர்களின் கூற்றுப்படி, கற்றாழையில் அலோசின் என்ற கலவை உள்ளது. இவை மெலனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் சருமஹ்தின் நிறமியை ஒளிரச் செய்கிறது என்று விளக்குகிறார். இந்தியன் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், கற்றாழை சருமத்திற்கு நீரேற்றம் மற்றும் பழுதுபார்ப்புக்கு உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 15 நிமிடங்கள் புதிய கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்திய பிறகு, சிறிது நேரத்திலேயே வித்தியாசத்தைக் காண முடியும்.

ஓட்ஸ் மற்றும் தயிர் பேக்கைப் பயன்படுத்துவது

ஓட்ஸ் ஒரு எக்ஸ்ஃபோலியண்ட் ஆக செயல்படுகிறது. மேலும், தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த கலவையானது சருமத்தின் நிறத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது. மேலும், இது ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கும், முகப்பருவைக் குறைப்பதற்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஓட்ஸ் பொடியை தயிருடன் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இந்தக் கலவையை 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு, மெதுவாக மசாஜ் செய்து, பின்னர் கழுவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dark underarms: வியர்வையால் உங்க அக்குள் கருமையாகிவிட்டதா? அக்குள் கருமையை போக்க உதவும் வீட்டு வைத்தியம்!

கிரீன் டீ பேக் தடவுவது

கிரீன் டீயில் கேட்டசின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை சருமப் பராமரிப்பிற்கு உதவுகின்றன. கிரீன் டீ பேக் பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. ஜர்னல் ஆஃப் க்யூட்டானியஸ் அண்ட் எஸ்தெடிக் சர்ஜரி படி, கிரீன் டீயில் உள்ள பாலிபினால்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகின்றன. இதற்கு இரண்டு கிரீன் டீ பைகளை வெந்நீரில் ஊறவைத்து, அவற்றை குளிர்விக்க விட வேண்டும். பின்னர் கிரீன் டீ மற்றும் டீ பேக் இரண்டையும், அக்குள்களில் 10 நிமிடங்கள் தடவலாம். இவை கரும்புள்ளிகளைப் படிப்படியாக இலகுவாக்கி, சருமமும் மென்மையாக வைக்க உதவுகிறது.

வைட்டமின் ஈ எண்ணெயுடன் மசாஜ் செய்யவது

வைட்டமின் E சேதமடைந்த சருமத்தை சரிசெய்யும் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும் என்று மருத்துவர் விளக்குகிறார். வைட்டமின் E எண்ணெயுடனான வழக்கமான மசாஜ் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையையும், நிறத்தையும் மேம்படுத்துவதாக பல மருத்துவ ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, வைட்டமின் E காப்ஸ்யூலில் இருந்து எண்ணெயை அக்குள்களில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யலாம்.

முடிவு

மருத்துவர் பகிர்ந்துள்ள இந்த வீட்டு வைத்தியங்களை கவனமாகப் பின்பற்றுவதன் மூலம், அக்குள் சருமம் படிப்படியாக தெளிவாகவும், மென்மையாகவும் மாறும். எனினும், எந்தவொரு புதிய வைத்தியத்தையும் தொடங்குவதற்கு முன்பாக, ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியமாகும். அதே சமயம், அக்குள் கருமை அதிகமாக இருந்தால், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Dark Underarms.. வெறும் அழகு பிரச்சினை அல்ல.. உங்கள் உடல் அனுப்பும் Signal.! உடனே தெரிஞ்சிக்கோங்க..

Image Source: Freepik

Read Next

அசிடிட்டியை விரைவில் குணமாக்க உதவும் ஓமவல்லி.. இப்படி மட்டும் எடுத்துக்கோங்க போதும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 08, 2025 22:49 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content