Benefits of neem stick for teeth: நம் உடல் ஆரோக்கியம் என்பது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்து அமைகிறது. அதன் படி, பற்களின் ஆரோக்கியமும் மிகவும் இன்றியமையாததாகும். பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க செயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துவர். ஆனால் இதில் சில சமயங்களில் இரசாயனக் கலவைகள் கலந்திருக்கலாம். இது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காக வேப்பங்குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது. இது நல்ல பல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்படும் பழமையான முறைகளில் ஒன்றாகும்.
வேம்பின் மருத்துவ குணங்கள்
வேம்பு இலைகள் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும் ஃபிளாவனாய்டுகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள அசாடிராக்டின் ஒரு இயற்கை பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. வேப்ப இலைகளில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற சேர்மங்களும், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் சி மற்றும் கரோட்டின் போன்ற கனிமங்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேம்பு பற்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Bad Breath: காலையில் எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசிகிறதா? இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்!
வேப்பங்குச்சி கொண்டு பற்களைத் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள்
ஈறுகளை வலுப்படுத்த
பற்களுக்கு வேப்பங்குச்சி பயன்படுத்துவது ஈறுகளை பலப்படுத்துகிறது. மேலும் இது பற்களுக்கு வலுவான அமைப்பை வழங்குகிறது. இது தவிர, ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான மற்றும் வலுவான ஈறுகளை உருவாக்கவும் உதவுகிறது.
பற்களை வெண்மையாக்குவதற்கு
பற்களுக்கு வேம்பு பயன்படுத்துவது பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வெண்மையாக மாற்றுகிறது. இதற்கு வேப்பங்குச்சி பயன்படுத்துவதற்கு பதில் வேப்ப இலைகளை மெல்லுவதன் மூலம் பற்களை வெண்மையாக்கலாம். இதன் பல்வேறு மருத்துவ பண்புகள் பற்களை வெண்மையாக்குவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
பாக்டீரியாவை வெளியேற்ற
வாய் எளிதில் பாக்டீரியாவுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு ஆகும். ஏனெனில், நாம் அன்றாடம் உண்ணும் உணவால் பாக்டீரியாக்கள் வாயின் உள்ளே எளிதில் செல்கிறது. எனவே பாக்டீரியாவைத் தடுக்க முறையான பராமரிப்பு அவசியமாகும். எனவே தான் சாதாரண குச்சிகளுக்குப் பதிலாக, வேப்பங்குச்சி பயன்படுத்தப்படுகிறது. இதன் குணங்கள் பாக்டீரியாவை எதிர்த்து போராடி அதன் வளர்ச்சியை தடுத்து வாயை சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: அல்சரால் வாய்துர்நாற்றமா? இந்த இரண்டையும் அடித்து விரட்ட இந்த ஒரு பானம் குடிங்க போதும்!
துர்நாற்றத்தை நீக்குவதற்கு
நம் அன்றாட வாழ்வில் நாம் நிறைய நொறுக்குத்தீனிகள், ஜங்க் ஃபுட் போன்றவற்றை உட்கொள்கிறோம். ஆனால், இந்த வகை உணவுகளை உட்கொண்ட பிறகு நாம் வாயை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பதும் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். பெரும்பாலான மக்களுக்கு இது மிகவும் கடுமையான பிரச்சனையாக மாறிவிட்டது. இவ்வாறு பற்களை முறையாக சுத்தம் செய்யாத போது, பிளேக் போன்ற பாக்டீரியாக்கள் சேமித்து வைக்கப்படலாம். இது இறுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க வேப்பங்குச்சியைப் பயன்படுத்தலாம்.
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த
வேம்பு ஆனது பல்வேறு ஆரோக்கியமான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி பற்களைத் துலக்குவது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது. இது வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் இன்றியமையாததாகும். இதன் கசப்பான சுவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உண்மையில் பற்களை சிறப்பாக சுத்தம் செய்வதற்கும், நீண்ட காலத்திற்கு பிளேக் உருவாவதைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இவை பற்களில் கறை படிவதைத் தடுக்கவும், ஒட்டுமொத்த பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இவ்வாறு பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bad Breath Remedies: வாய் துர்நாற்றத்தை விரைவில் போக்கும் சூப்பர் ரெமிடிஸ்!
Image Source: Freepik