Expert

மஞ்சள் முதல்.. ப்ரொக்கோலி வரை.. புற்றுநோயை தடுக்கும் 10 அற்புத உணவுகள் இங்கே.. நிபுணர் டிம்பிள் ஜாங்க்டா பரிந்துரை..

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் 10 அற்புத இயற்கை உணவுகள் பற்றி ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜாங்க்டா பகிர்ந்துள்ளார். மஞ்சள் முதல் ப்ரோக்கொலி வரை, நிபுணர் பகிர்ந்த உணவுகள் இங்கே. 
  • SHARE
  • FOLLOW
மஞ்சள் முதல்.. ப்ரொக்கோலி வரை.. புற்றுநோயை தடுக்கும் 10 அற்புத உணவுகள் இங்கே.. நிபுணர் டிம்பிள் ஜாங்க்டா பரிந்துரை..


புற்றுநோய் என்பது உலகளவில் அதிகரித்து வரும் ஒரு ஆபத்தான நோயாகும். ஆனால் சரியான உணவு பழக்க வழக்கங்கள், இயற்கை மூலிகைகள் மற்றும் சில சூப்பர் உணவுகள் உடலை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் சக்தி கொண்டவை. ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜாங்க்டா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புற்றுநோயை தடுக்கும் 10 முக்கிய உணவுகளை பரிந்துரைத்துள்ளார். இப்போது அவற்றைப் பார்ப்போம்.

புற்றுநோயை தடுக்கும் உணவுகள்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற சேர்மம் புற்றுநோய்க்கு எதிரான சக்திவாய்ந்த இயற்கை மருந்து. இது anti-inflammatory, antibacterial, antiviral, antifungal குணங்களை கொண்டுள்ளது. பால், சாம்பார், ரசம், சாதம், பருப்பு வகைகள் எதிலும் சிறிது மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்.

அஷ்வகந்தா

Ashwagandha ஒரு adaptogenic மூலிகை. இது மன அழுத்தத்தை குறைக்கும், நல்ல நித்திரையை அளிக்கும், நோய் எதிப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும். மன அழுத்தமே புற்றுநோயை வேகமாக வளரச் செய்யும் காரணங்களில் ஒன்றாகும்.

நெல்லிக்காய்

ஒரு நெல்லிக்காய் = 20 எலுமிச்சை. அதிக அளவு Vitamin C கொண்டுள்ள ஆம்லா, உங்கள் DNA-வை மேலும் சேதப்படுத்தாமல் காக்கும். தினமும் ஒரு ஆம்லா சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு உயரும்.

பூண்டு

பூண்டில் உள்ள Allicin என்ற சேர்மம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மந்தமாக்கும். குறிப்பாக வயிற்றுப் புற்று, குடல்புற்று, மார்பகப் புற்று மற்றும் சுரப்பி புற்றை (Prostate Cancer) தடுப்பதில் மிகுந்த பயன் தருகிறது.

ப்ரோக்கொலி

புற்றுநோய்க்கு எதிரான சூப்பர் காய்கறி. இதில் உள்ள Sulforaphane என்ற சக்திவாய்ந்த சேர்மம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. தினமும் சுட்டோடு வேகவைத்த ப்ரோக்கொலியை உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: புறக்கணிக்கக் கூடாத 8 கொடிய பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள்.!

பசலைக்கீரை

இரும்புச் சத்து, வைட்டமின்கள், கனிமங்கள் நிறைந்த கீரை, ஆன்டிஆக்ஸிடென்ட்களால் வளமானது. புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவையான RBC (Red Blood Cells) வளர்ச்சியை அதிகரித்து நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது.

சுரைக்காய்

உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும் திறன் கொண்டது சுரைக்காய். இது ஒரு சாத்வீக உணவாகும். இது எளிதில் ஜீரணமாகும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புற்றுநோயை எதிர்கொள்ளும் சக்தியை அதிகரிக்கிறது.

ஆளி விதைகள்

Omega-3 Fatty Acids, Lignans, Antioxidants நிறைந்துள்ள ஆளி விதைகள், குடல் சுவரை பாதுகாக்கின்றன. தண்ணீரில் ஊறவைத்து எடுத்தால் “gooey texture” ஏற்பட்டு, குடலை பாதுகாக்கும். இது புற்றுநோய் செல்களின் மேலும் பரவலைத் தடுக்கிறது.

துளசி

துளசி உடலில் உள்ள அழற்சியையும் மன அழுத்தத்தையும் குறைக்கும். இது adaptogenic herb ஆகும். ஒரு துளசி இலை வாயில் போட்டு மென்றால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

திராட்சை & உலர்ந்த திராட்சை

திராட்சை மற்றும் உலர் திராட்சை, புற்றுநோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமானவை. இது அதிக தாகம், உடல் எடை குறைதல், burning sensation ஆகியவற்றை குறைக்கிறது. மேலும், RBC, ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி உடல் வலிமையையும் சக்தியையும் அதிகரிக்கிறது.

View this post on Instagram

A post shared by Dimple Jangda (@dimplejangdaofficial)

இறுதியாக..

புற்றுநோய் என்பது சவாலான நோய். ஆனால் நம் அன்றாட உணவில் மஞ்சள், ஆம்லா, ப்ரோக்கொலி, பூண்டு, துளசி போன்ற இயற்கை உணவுகளை சேர்த்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து உடலை பாதுகாக்க முடியும். டிம்பிள் ஜாங்க்டாவின் பரிந்துரைகள் நம் ஆரோக்கியத்திற்கு இயற்கையான வழிகாட்டுதலாகும்.

{Disclaimer: இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொது ஆரோக்கிய வழிகாட்டுதல்கள் மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை அல்ல. புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு, மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையை கட்டாயமாகப் பெறவும்.}

Read Next

பெற்றோர்களே! உங்க குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருந்தா எலும்பு புற்றுநோய் இருக்குனு அர்த்தம்

Disclaimer