
நமது உடலின் இரண்டாவது மூளை என்று அழைக்கப்படும் குடல் (Gut) நம் முழு உடல் நலத்தையும் தீர்மானிக்கிறது. ஜீரணத்திலிருந்து மனநிலையில் வரை குடல் செயல்பாடு நேரடி தாக்கம் ஏற்படுத்துகிறது. எனவே அதை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதற்கான சில எளிய காலைப் பழக்கங்களை காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.
குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் காலைப் பழக்கங்கள்
காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவும்
காலையில் எழுந்த உடனே காபி குடிப்பதற்குப் பதிலாக முதலில் தண்ணீர் குடிப்பது உடல் நீர் அளவை சமநிலைப்படுத்தி, ஜீரண அமைப்பைச் சுறுசுறுப்பாக்கும். கஃபைன் குடிக்கும் முன் 1–2 கப் தண்ணீர் குடிக்கவும். இது குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
காலை நேர சூரிய ஒளியை பெறுங்கள்
உடல் கடிகாரத்தை (body clock) மீட்டமைக்கவும், செரோட்டோனின் சுரப்பை அதிகரிக்கவும் காலை சூரிய ஒளி உதவுகிறது. விழித்த பின் முதல் ஒரு மணி நேரத்திற்குள் 5–10 நிமிடங்கள் வெளியில் நின்று சூரிய ஒளியைப் பெறுவது சிறந்தது.
மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்
குடல் மற்றும் மூளை இடையிலான தொடர்பைச் சீராக வைத்திருக்கும் ‘vagus nerve’-ஐ இது தூண்டும். காலை உணவுக்கு முன் 2–3 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சு விட்டுப் பிடிக்கும் பயிற்சி செய்யவும். இது மனஅழுத்தத்தைக் குறைத்து குடல் இயக்கத்தைச் சீராக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: அதிக மன அழுத்தத்தால் அவதியா? நொடியில் போக குங்குமப்பூ ஒன்னு போதும்..
ப்ரீபயாட்டிக் உணவுகளைச் சேர்க்கவும்
குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கு உணவாகப் பயன்படும் ப்ரீபயாட்டிக் சத்துகள் காலை உணவிலே சேர்க்கப்பட வேண்டும். ஓட்ஸ், சிறிது பச்சைநிற வாழைப்பழம் போன்றவை சிறந்த தேர்வுகள்.
புரதம் + நார்ச்சத்து + ப்ரோபயாட்டிக்
இவை இரத்த சர்க்கரை அளவையும் குடல் நுண்ணுயிர்களையும் சமநிலைப்படுத்தும். கிரேக் தயிர், பேரிக்காய், சியா விதைகள் அல்லது ஆளி விதைகள் நல்ல தேர்வு. அல்லது, காய்கறி சேர்த்த முட்டை, லஸ்ஸி அல்லது கெபீர் குடிப்பதும் பயனுள்ளதாகும்.
திரையில் பார்க்காமல் உணவுக்காலம்
உணவு சாப்பிடும் போது மொபைல் அல்லது டிவி பார்ப்பது குடல்-மூளை ஒத்துழைப்பை குறைக்கும். திரையின்றி அமைதியாக சாப்பிடுவது ஜீரண அமைப்பைச் சீராகச் செய்கிறது.
உணவுக்குப் பிறகு சிறிய நடை
சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது நடைபயிற்சி ஜீரணத்தை மேம்படுத்தி வயிற்றுப் புடைப்பை குறைக்கும். 2–5 நிமிடங்கள் மெதுவாக நடப்பது போதும் என டாக்டர் கூறுகிறார்.
தினமும் மலத்தினை கவனியுங்கள்
உங்கள் மலத்தின் நிறம், வடிவம், எளிதில் வெளியேறுதல் ஆகியவை குடல் ஆரோக்கியத்தைக் காட்டும் முக்கிய அறிகுறிகள். ‘Bristol stool chart’ இல் 3–4 வகை தான் சரியான சமநிலை என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
View this post on Instagram
இறுதியாக..
குடல் ஆரோக்கியம் உடல் நலத்தின் அடிப்படை. காலை நேரத்தில் சிறிய பழக்க மாற்றங்களே ஜீரணத்தை சீராக்கி நோய் எதிர்ப்பு சக்தியையும் மனநலத்தையும் மேம்படுத்தும். தினமும் இந்த 8 பழக்கங்களையும் பின்பற்றுவது நீண்டநாள் நன்மை தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரை டாக்டர் சௌரப் சேதி அவர்களின் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பொது தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 03, 2025 22:40 IST
Published By : Ishvarya Gurumurthy