
உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை குடல் (Gut) ஆரோக்கியம் எனலாம். ஆனால் பலருக்கும் இது பற்றி பெரிதாக கவனம் இல்லாமல் போகிறது. செரிமானம் சரியாக இல்லையென்றால், அது உடலின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் பிரபலமான குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஆரோக்கியமற்ற குடலின் 5 ஆரம்ப அறிகுறிகள்” குறித்து பகிர்ந்துள்ளார். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஆரோக்கியமற்ற குடலின் 5 ஆரம்ப அறிகுறிகள்
அடிக்கடி வயிறு வீக்கம் (Frequent Bloating)
உணவு சாப்பிட்ட பிறகு அடிக்கடி வயிறு வீக்கம் அல்லது வாயு உண்டாகிறதா? இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் சமநிலையில்லாமல் இருப்பதைக் காட்டும் ஒரு முக்கிய அறிகுறி. “நம் குடல் பாக்டீரியாக்கள் செரிமானத்துக்கு உதவுகின்றன. ஆனால் அவை குறைந்தாலோ அல்லது தவறான உணவால் பாதிக்கப்பட்டாலோ, உணவுக்குப் பிறகு வீக்கம் ஏற்படும்” என்று டாக்டர் சேதி கூறுகிறார்.
மலச்சிக்கல் அல்லது அடிக்கடி வயிற்றுப்போக்கு (Irregular Bowel Movements)
மலச்சிக்கல் அல்லது அடிக்கடி வயிற்றுப்போக்கு என்பது குடல் சரியாக செயல்படவில்லை என்பதற்கான எச்சரிக்கை. இது குடலின் பாக்டீரியா சமநிலை மற்றும் செரிமான சுரப்பிகள் சரியாக இல்லாததைக் காட்டும். நீண்ட நாட்களாக இப்படியான பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம்.
விளக்கம் இல்லாத சோர்வு (Unexplained Fatigue)
போதுமான உறக்கம் எடுத்தும் சோர்வாக உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் குடல் சத்துகளை சரியாக உறிஞ்சவில்லை என்பதற்கான அறிகுறி இது. “குடல் சத்துகளை சரியாக உறிஞ்ச முடியாவிட்டால், உடலில் தேவையான சக்தி கிடைக்காது. இதனால் சோர்வு, மனச்சோர்வு, கவனக்குறைவு போன்றவை வரும்” என்று டாக்டர் சேதி கூறுகிறார்.
உணவு ஒவ்வாமை (Food Intolerances)
சில உணவுகள் சாப்பிட்டவுடன் வயிற்று வலி, உப்புச்சி, குமட்டல் அல்லது அலர்ஜி போன்று உணர்கிறீர்களா? இது உங்கள் குடல் அந்த உணவுகளை சரியாக ஜீரணிக்க முடியாமல் போராடுகிறது என்பதைக் குறிக்கிறது. இது நீண்டநாள் தொடருமானால், Food Allergy Test அல்லது Gut Health Test செய்து பார்க்கலாம் என மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் (Weakened Immunity)
நம் உடலின் 70% நோய் எதிர்ப்பு சக்தி குடலில்தான் உருவாகிறது. அதனால் அடிக்கடி சளி, காய்ச்சல், தொற்று போன்றவை வந்தால், அது குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதற்கான தெளிவான சிக்னல். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ப்ரோபயாட்டிக் உணவுகள், தயிர், மோர், இஞ்சி, காய்கறிகள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
View this post on Instagram
இறுதியாக..
குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் அது முழு உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை என அனைத்தையும் குடல் தீர்மானிக்கிறது. அதனால், வீக்கம், சோர்வு, உணவு சகிக்காமை, மலச்சிக்கல் போன்றவை தொடர்ந்தால், அவற்றை சிறுமையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உடனே மருத்துவரை அணுகி குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.
Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனை அல்ல. இது பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. உங்களுக்கு நீண்டகால செரிமான பிரச்சினைகள் அல்லது குடல் தொடர்பான குறைபாடுகள் இருந்தால், ஒரு நிபுணர் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 14, 2025 07:32 IST
Modified By : Ishvarya GurumurthyOct 14, 2025 07:32 IST
Published By : Ishvarya Gurumurthy