$
Natural Home Remedies For Eye Pain: பொதுவாக அனைவருமே கண் வலியால் பாதிக்கப்படுகின்றனர் இது கண்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகும். கண்களில் ஏற்படும் வலி மருத்துவ ரீதியாக கண் நோய் எனவும் அழைக்கப்படுகிறது. கண்களின் மேற்பரப்பில் வலி ஏற்படுவது கண் வலி என்றும், கண்ணின் உட்பகுதியில் வலி ஏற்படுவது ஆர்பிட்டல் வலி என அழைக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் இந்த கண் வலி சிகிச்சையைப் பயன்படுத்தாமல் அல்லது மருந்து உபயோகிக்காமல் குணப்படுத்தப்படுகிறது. எனினும் அரிதாகவே கண் வலி தீவிரமடைந்து கடுமையான கண் வலி மற்றும் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தலாம்.
கண் வலிக்கான காரணங்கள்
பொதுவாக கண்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
- கண் வலிக்கான பொதுவான காரணம் கண்களில் காயம் ஏற்படுதலாகும். இதனால் கண்கள் சிவப்படைதல், கண்களில் வலியையும் ஏற்படுத்தும்.
- இரவு முழுவதும் கான்டாக்ட் லென்ஸ் அணிவது, லென்ஸ்களை சரியாக கிருமி நீக்கம் செய்யாமல் அணிவது போன்றவை கண் வலி மற்றும் எரிச்சலைத் தரும்.
- கண்ணின் வெள்ளைப்பகுதியான கார்னியாவில் சிராய்ப்பு ஏற்படுவதும் கண் வலி ஏற்படுவதற்குக் காரணமாகும்.
- கண் பார்வையை மூளையுடன் இணைக்கும் நரம்பு, பார்வை நரம்பு ஆகும். இது கண்களில் வீக்கமடையும் நிலையை ஏற்படுத்தும். இது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்துகிறது. இது கண்களில் லேசான வலியை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம்: Sore Throat Remedies : மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை வலியை நீக்க வீட்டு வைத்தியம்!
கண் வலியைக் குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்
சில வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி கண் வலியைக் குறைக்க உதவுகின்றன.
ஃபேஸ் வாஷ்
ஃபேஸ் வாஷ் செய்வதன் மூலம் கண் வலியைக் குணப்படுத்த முடியும். மர மஞ்சளுடன் ஒரு ஸ்பூன் படிகாரம் சேர்த்து ஃபேஸ் வாஷ் செய்யலாம். இரவு தூங்கும் முன்னரே 10 கிராம் அளவுள்ள மரமஞ்சளுடன் 1 ஸ்பூன் படிகாரம் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதை காலையில் வடிகட்டி அந்த நீரைக் கொண்டு கண்களை கழுவ வேண்டும். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது.
பன்னீர்
சிலருக்கு உடல்சூடு அதிகமாகும் போது கண்களில் சிவந்த கட்டி ஏற்படும். இந்த கண்கட்டி வராமல் தடுக்க சிறிதளவு பன்னீரை மசித்து கண்களில் மேல் தடவி வரலாம். இவ்வாறு செய்வது கண்கட்டி வராமல் தடுக்கலாம்.

இஞ்சி மற்றும் வெல்லம்
வெல்லம், இஞ்சி, மிளகு, புதினா கீரை போன்றவற்றைச் சம அளவில் எடுத்து அதில் சிறிதளவு நீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை காலை எழுந்தவுடன், வெறும் குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவி விட்டு பின், இந்த கலவையை வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் அளவு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் கண்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ear Pain: காது வலி வரக் காரணமும், குணமாக வீட்டு வைத்தியமும்!
சீரகம்
கண் வலி குறைய சீரகம் முக்கிய பங்காற்றுகிறது. சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து பின் சிறிது நேரம் ஆறவைக்க வேண்டும். இவை முழுமையாக குளிர்ச்சியடையாமல் வெதுவெதுப்பாக இருக்கும் போது அந்த தண்ணீரை காட்டன் துணியில் தொட்டு ஒத்தடம் கொடுத்து வருவதன் மூலம் கண் அழுத்தப் பிரச்சனைகள் மற்றும் கண் வலியைக் குறைக்கலாம்.

எண்ணெய் குளியல்
கண்களுக்கு எரிச்சல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடல் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படுவதாகும். குறிப்பிட்ட சில நேரங்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. கண் வலி பிரச்சனை கொண்டிருப்பவர்கள் மிளகு, பசும்பால் சேர்த்து அரைத்து பின் நல்ளெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி வாரத்திற்கு ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல் குணமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Cracked Mouth Corner Treatment: வாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version