Fri Sep 11, 2026 | 11:10 PM IST

மீசை, தாடி வளர லேட் ஆகுதா? இதை பண்ணுங்க தளதளனு வளரும்!

ஆண்கள் பலருக்கும் அதிக மீசை, தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இந்த காலக்கட்டத்தில் ஏணைய ஆண்களுக்கு மீசை, தாடி அடர்த்தியாக வளருவதில்லை.

மோசமான உணவுப் பழக்கம், தவறான உணவு முறை உள்ளிட்ட பல காரணங்களால் மீசை, தாடி வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது. அதேபோல் குறிப்பாக சோப், முகக் க்ரீம் வேலை பார்க்கும் இடத்தின் சுற்றுச்சூழல் நிலை போன்ற காரணங்களாலும் மீசை தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

மீசை, தாடி வேகமாக வளர வீட்டு வைத்தியம்

புரோட்டீன் நிறைந்த உணவுகள்

மீசை தாடி வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பிரச்சனை இருக்காது. இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பீன்ஸ், மீன், முட்டை, பால் உள்ளிட்ட உணவுகளை உங்கள் உணவு முறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெய்

மீசை மற்றும் தாடி அடர்த்தியாக வளருவதற்கு மற்றொரு மிக எளிதான வழி விளக்கெண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்வது.

தூக்கம் மிக முக்கியம்

தூக்கம் உடலுக்கு மிக முக்கியம். உடலின் பல ஆரோக்கிய நன்மைகள் தூக்கத்தை பொறுத்தே இருக்கிறது. அதேபோல் மீசை, தாடி வளர்ச்சிக்கும் தூக்கம் மிக முக்கியம்.

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்

டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண்களுக்கான ஹார்மோன் குறைவாக இருந்தாலும் முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். காரணம் இந்த ஹார்மோன் தான் முடி வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

இந்த ஹார்மோனை அதிகரிக்க மீன், முட்டை, வேர்க்கடலை, எள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இயற்கை ஹேர் க்ரீம்

ரோஸ்மேரி ஆயில், ஆப்பிள் சிடர் வினிகர், கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின்பு கழுவினால். மீசை, தாடி வளர்ச்சிக்கு நன்கு உதவும்.

தண்ணீர்

உடலில் டாக்ஸின் அல்லது வறட்சி இருந்தாலோ முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இதன்காரணமாக தினசரி குறைந்தது 8 கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம்.

மன அழுத்தம்

மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தலைமுடி நரைப்பதற்கும் இது முக்கிய காரணமாகும்.

Read Next

Monsoon Lip Care: மழைக்காலத்தில் உதடுகள் வறண்டு போகிறதா.? இப்படி செஞ்சா போதும்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content