Newborn Baby Oil Massage: மசாஜ் செய்வதன் மூலம் உடலில் எலும்புகளையும், தசைகளையும் வலுப்படுத்த முடியும். புதிதாக பிறந்த குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த மசாஜ் செய்வது மிக முக்கியமானதாகும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இவ்வாறு மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைகள் ஒரு வயதை அடைவதற்கு முன்பாகவே, ஊர்ந்து செல்வது, நடப்பது போன்றவை செய்யத் தொடங்கும். குழந்தைக்கு மசாஜ் செய்வதில் பயன்படுத்தும் எண்ணெய் மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, பாரம்பரிய எண்ணெய் வகைகளே மசாஜ் செய்வதற்கு ஏற்றதாக அமைகிறது. இவையே குழந்தையின் உடலுக்கு வலிமைமிக்க ஊட்டச்சத்துகளைத் தருகின்றன. இதில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய உதவும் சிறந்த மசாஜ் எண்ணெய்களைக் காணலாம்.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய்
இந்த ஆர்கனிக் எண்ணெய்கள் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கு சிறந்த எண்ணெய்களாகும்.
இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்
ஆலிவ் எண்ணெய்
பொதுவாகவே ஆலிவ் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றைக் கொண்டு குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் மூலம் குழந்தையை சுறுசுறுப்பாக வளர்க்க முடியும். மேலும், குழந்தையின் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்சியை நீக்கி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய ஆலிவ் எண்ணெய் சிறந்த தேர்வாக உள்ளது.
தேங்காய் எண்ணெய்
குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாகும். இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், தசைகளில் இருந்து விறைப்பை வெளியிட்டு வலுப்படுத்த உதவுகிறது. மேலும், தேங்காய் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துகள் தலை முடி வளர்ச்சிக்கும், முடி அடர்த்தியாக மற்றும் கருப்பாக வளரவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Sleeping: குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்
கடுகு எண்ணெய்
குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் கடுகு எண்ணெயும் மிகச்சிறந்த எண்ணெய் ஆகும். இவை குழந்தையின் எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், இவை உடலுக்குத் தேவையான வெப்பத்தை அளிக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகள் நிமோனியாவால் அதிகம் பாதிக்கப்படுவர். இவர்கள் கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் உடலை வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க முடியும். குறிப்பாக, குளிர்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படலாம். இந்த சூழ்நிலைகளில் கடுகு எண்ணெயைப் பயன்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். மேலும், இவற்றில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றூம் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் தோல் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
பாதாம் எண்ணெய்
குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய் பாதாம் எண்ணெய் ஆகும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ சத்துகள் தோல் மற்றும் முடிக்கு சிறந்ததாகும். பொதுவாக புதிதாக பிறந்த குழந்தைகளின் சருமம் எளிதாக வறட்சி மற்றும் தொற்றுநோய்க்கு ஆளாகிறது. இதனைத் தடுக்க பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இந்த பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்வதன் மூலம் அனைத்து விதமான தோல் பிரச்சனைகளையும் நீக்க முடியும். இந்த எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள், மென்மையான சருமம், மற்றும் முடி வளர்ச்சியை பராமரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
எள் எண்ணெய்
எள் எண்ணெயும் குழந்தைகளின் மசாஜ் செய்வதற்கு ஏற்ற எண்ணெய் ஆகும். எனினும் பெரும்பாலான தாய்மார்கள் மசாஜ் செய்ய இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், இவை மிகவும் ஒட்டும் தன்மை கொண்டது. எனினும், இந்த எள் எண்ணெய் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், குழந்தைகளை மிகவும் சுறுசுறுப்பாகவும், வலிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், இந்த எண்ணெய் புதிதாக பிறந்த குழந்தைகள் பாதிக்கப்படும் தோல் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
இந்த எண்ணெய்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய்களாகும். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளுக்குத் தேவையான மற்றும் உகந்த ஊட்டச்சத்துகளைத் தருகின்றன. எனினும், பயன்பாட்டிற்கு பின் தோல் எதிர்வினையின் அபாயத்தை நீக்க, முதலில் பேட்ஸ் டெஸ்ட் செய்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க
Image Source: Freepik