Remove Dark Circles: கருவளையத்தை ஒரே வாரத்தில் நீக்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சியுங்க!

  • SHARE
  • FOLLOW
Remove Dark Circles: கருவளையத்தை ஒரே வாரத்தில் நீக்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சியுங்க!


இதனால் சிறு வயதிலேயே, வயதான அறிகுறிகள் தோன்றுகின்றனர். தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால், கருவளையம் பிரச்சனை அதிகரிக்கிறது. நீங்கள் எவ்வளவு முயற்சித்தும் கருவளையத்தை நீக்க முடியவில்லை என்றால், நாங்கள் ஒரு எளிமையான பாட்டி வைத்தியம் பற்றி உங்களுக்கு கூறுகிறோம். இது ஒரே வாரத்தில் உங்கள் கருவளையத்தை நீக்க உதவும். இதை எப்படி தயாரிப்பது? இதன் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

கருவளையத்தை நீக்கும் தேன் மற்றும் காஃபி பவுடர்

தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் காபி சருமத்தை ஒளிரச் செய்கிறது. காஃபி பவுடர் கருவளையம் மட்டும் அல்ல, முக கருமையை நீக்கவும் உதவும்.

தேவையான பொருட்கள்:

தேன் - 1 ஸ்பூன்.
காஃபி பவுடர் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

  • முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில், தேன் மற்றும் காபி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின்னர், இந்த கலவையை முகம் மற்றும் கருவளையம் உள்ள பகுதிகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
  • பின்னர், 15-20 நிமிடங்கள் அதை அப்படியே விடவும்.
  • இதையடுத்து, குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும்.

இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்துவதன் மூலம், சிறந்த முடிவுகளை பெற முடியும். நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கும் 2 வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

இந்த பதிவும் உதவலாம் : தேங்காய் எண்ணெயால் உடலில் ஏற்படும் நன்மைகள்?

இவற்றையும் ஃபாலோ பண்ணுங்க

கருவளையம் பிரச்சனையை சமாளிக்க வெறும் வீட்டு வைத்தியம் மட்டும் போதாது. சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் நாம் வழங்க வேண்டும். கருவளையம் வருவதை தவிர்க்க இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்:

1. தினமும் 7 முதல் 8 மணிநேரம் நன்றாக தூங்குங்கள். இதனால் கருவளையம் வருவதை எளிமையாக தவிர்க்கலாம்.

2. அன்றாட உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும். இதனால், உங்கள் சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : பர்ஃபியூம் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா? அப்போ இந்த இடங்களில் அடிக்கவும்…

3. வாரம் ஒருமுறை முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள். முகத்தை மசாஜ் செய்வதால் சருமத்தை இறுக்கமாக்கி, கருவளையம் வருவதை தடுக்கலாம்.

4. தினமும் வெள்ளரிக்காயைப் பயன்படுத்தி கண்களுக்குக் கீழே உள்ள பகுதியை நீரேற்றமாக வைத்திருக்கவும். வெள்ளரிக்காயின் குளிர்ச்சியானது சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Dark Skin: உங்கள் தோல் கருமையாக மாறுகிறதா? அதற்கான காரணமும், வைத்தியமும் இதோ!

Disclaimer