Expert

வெறும் 10 ரூபாய் போதும்… முகத்தை பளீச்சென மாற்ற வீட்டிலேயே சீரம் தயாரிக்கலாம்!

  • SHARE
  • FOLLOW
வெறும் 10 ரூபாய் போதும்… முகத்தை பளீச்சென மாற்ற வீட்டிலேயே சீரம் தயாரிக்கலாம்!


அப்படியானால் வீட்டிலேயே முகத்தைப் பராமரிக்கக்கூடிய ஸ்கின் கேர் புரோடெக்டட்களை இயற்கையான முறையில் தயாரிக்க முடியுமா? என்ற கேள்வி அதிக அளவில் எழுவதுண்டு. அதற்கான தீர்வைத் தான் இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போகிறோம்.

பிரபல அழகு கலை நிபுணரான வசுந்தரா, வெறும் 10 ரூபாய் செலவில் மிக, மிக எளிமையான வழிகளை பின்பற்றி வீட்டிலேயே ஃபேஸ் சீரம் செய்வது எப்படி என கற்றுத் தந்துள்ளார்.

முகத்திற்கு ஏன் சீரம் பயன்படுத்த வேண்டும்?

சீரம் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதனைப் பயன்படுத்துவதால் சருமம் கவர்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு சீரமும் சரும பிரச்சனைகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்படுகிறது. அதனால் தான் எந்த சீரம் பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: Spectacles Marks on Face: கண்ணாடி போட்ட தழும்பை… இயற்கையான முறையில் எப்படி மறைக்கிறதுன்னு தெரிஞ்சிக்கோங்க!

சீரம் பயன்படுத்துவது, முகப்பரு தழும்புகளைக் குறைக்கிறது. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. நிறமி புள்ளிகள், முகப்பரு ஆகியவற்றின் மீது திறம்பட செயல்படுகிறது.

சீரம் உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. சீரம் தடவினால் முகம் பொலிவு பெறும். மேலும் இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் சக்தி கொண்டது. சருமத்தை மென்மையாக்குகிறது. வயதான எதிர்ப்பு தீர்வாகச் செயல்படுகிறது. தோல் நிறத்தை மேம்படுத்துகிறது

இந்த பொருட்கள் மட்டும் போதும்:

அழகு சாதன பொருட்களிலேயே காஸ்ட்லியானதாக கருதப்படும் ஃபேஸ் சீரத்தை வீட்டிலேயே தயாரிக்க வெறும் 3 பொருட்கள் மட்டுமே போதும். அழகு கலை நிபுணர் வசுந்தரா, அரிசி கழுவிய தண்ணீர், அதிமதுரம் மற்றும் தேன் ஆகிய 3 பொருட்களைக் கொண்டு வெறும் 15 நிமிடங்களிலேயே ஃபேஸ் சீரம் தயாரிக்க முடியும் என்கிறார்.

அரிசி ஊறவைத்த தண்ணீர் - 3 டீஸ்பூன்
தேன் - 3 டீஸ்பூன்
அதிமதுரம் - சிறிய அளவில் 3 துண்டுகள்

இதில் அரிசி தண்ணீர் மற்றும் தேன் ஆகியவை வீட்டிலேயே எப்போதும் கிடைக்கக்கூடிய பொருட்கள் ஆகும். சில துண்டு அதிமதுரத்தை வாங்க மட்டுமே நாம் 10 ரூபாய் செலவழிக்க வேண்டும். ஒருவேளை இதுவும் வீட்டில் இருந்தால் செலவே இல்லாமல், சீக்கிரமாக நீங்கள் ஃபேஸ் சீரம் தயாரிக்கலாம்.

ரைஸ் வாட்டர்:

அரிசி ஊறவைத்த நீரையோ, சமைக்கப் பயன்படுத்தும் தண்ணீரையோ பயன்படுத்துவதன் மூலம் சரும பிரச்சனைகளைக் குறைக்க முடியும்.

சருமத்தை அழகுபடுத்துவதில் தொடங்கி, முகப்பருவை எதிர்த்துப் போராடி, தழும்புகள் மற்றும் பருக்களை நீக்க, ரைஸ் வாட்டர் பயன்படுகிறது. மேலும் ரைஸ் வாட்டர் கொண்டு அடிக்கடி முகம் கழுவி வந்தால், சன் டேன் நீக்கி முகத்தின் நிறம் மேம்படும்.

அதிமதுரம்:

அதிமதுரம் என்பது அதி மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள். இது இழந்த முகப்பொலிவை மீட்டு நிறத்தை மெறுகேற்றச் செய்கிறது. முகத்தைப் பளிச்சென்று வைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டிபயாடிக் பண்புகள் சருமத்தை தொற்று நோய் மற்றும் அலர்ஜியிலிருந்து பாதுகாக்கிறது.

Athimathuram

இதனை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கருமை, தழும்புகள் போன்றவை நீக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தேன்:

தேன் பல வகையான சரும பிரச்சனைகளுக்குத் தீர்வாக உள்ளது. இளமையை மீட்டெடுக்கவும், சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கவும், பல்வேறு தோல் நோய்களைக் குணப்படுத்தவும் தேன் பயன்படுகிறது. தேன் வறண்ட சருமத்தை புத்துயிர் பெற வைப்பது, முகப்பருவை குணப்படுத்துவது மற்றும் சன் டேனுக்கு சிகிச்சையளிப்பது போன்ற பல அழகு நன்மைகளைக் கொண்டுள்ளது.

தேனில் உள்ள இயற்கையான பண்புகள், முகப்பருவை அழிக்கவும், தழும்புகளைக் குணப்படுத்தவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், மந்தமான சருமத்தை பளபளப்பாக மாற்றவும், எக்ஸிமா அல்லது சொரியாசிஸ் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

10 ரூபாய் ஃபேஸ் சீரம் செய்வது எப்படி?

முதலில் அடிகனமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அதில் சில துண்டு அதிமதுரத்தை போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். தண்ணீரின் நிறம் மாறும் வரை கொதிக்க வைத்த பின், குளிர்விக்க வேண்டும்.

இதையும் படிங்க: Eyebrow: கரு, கருன்னு அடர்த்தியான புருவம் வேண்டுமா?… இந்த மூணே விஷயங்கள் போதும்!

தற்போது ஒரு கப் அதிமதுரம் கலந்த தண்ணீரில் 3 டீஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேனைக் கலந்து நன்றாகக் கலக்கவும்.

இந்த கலவையை ஸ்பிரே பாட்டிலில் சேகரித்து வைத்து மாய்ஸ்சரைசர் தடவுவதற்கு முன்பாக முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளலாம். இதன் மூலம் முகப்பரு, தழும்புகள் நீக்கி, முகம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

Image Source: Freepik

Read Next

Nalangu Maavu Benefits: நலங்கு மாவு யூஸ் பண்ணுங்க.. சருமம் தங்கம் போல் ஜொலிக்கும்.!

Disclaimer

குறிச்சொற்கள்