$
இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு மாசு மருவில்லாத, மென்மையான சருமத்தை பெற பல்வேறு அழகு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். முகத்தில் கோடுகள், சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை போக்க ஆயிரக்கணக்கில் செலவழித்து அழகு சாதன பொருட்களை வாங்கி குவிக்கின்றனர். குறிப்பாக சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைக்க சீரத்தை பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: கொழு,கொழு கன்னம் வேணுமா?… இந்த 4 வழிகளை முயற்சித்துப் பாருங்கள்!
ஆனால் சில இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே எளிமையான முறையில் சீரம் தயாரிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?… ஆம், இயற்கையான சில பொருட்களை கொண்டு கற்றாழை சீரம் தயாரிப்பது எப்படி என விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.
காற்றாழை:
கற்றாழை, ரோஸ் வாட்டர் மற்றும் வைட்டமின் டி ஆகியவை இதற்கு தேவை. கற்றாழையானது சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. வைட்டமின் டி ஆயில் சருமத்தை பிரகாசமாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.

கற்றாழை சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை வழங்கவும், சருமத்தை பிரகாசமாகவும் மிருதுவாகவும் மாற்றவும், சுருக்கங்கள் மற்றும் கோடுகளைத் தடுக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
பன்னீர் (Rose Water):
ரோஸ் வாட்டர் சரும அழகுக்கு மிகவும் பயனுள்ள மற்றொரு மூலப்பொருளாகும். ரோஸ் வாட்டர் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் மென்மையையும் தருகிறது.

ரோஜா இதழ்கள் மற்றும் ரோஸ் வாட்டரை வேகவைத்து வீட்டிலேயே பன்னீர் தயார் செய்யலாம். சருமத்தின் pH ஐ சமநிலைப்படுத்த உதவுகிறது. பல ஒவ்வாமை தோல் பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாகும்.
வைட்டமின் ஈ ஆயில்:

இதையும் படிங்க: கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் வேண்டுமா?… இந்த ஜெல்லை தயாரித்து தடவுங்க!
வைட்டமின் ஈ ஆயில், சரும பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ளது. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து, சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது. வைட்டமின் ஈ ஆயில் வறண்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது தோல் மற்றும் முடி ஆகிய இரண்டிற்கும் இன்றியமையாத வைட்டமின் ஆகும்.
சீரம் தயாரிப்பது எப்படி?

- புதிய கற்றாழையை நன்றாகக் கழுவி உள்ளே இருந்து ஜெல்லை வெளியே எடுக்கவும். மீண்டும் சிறிது நேரம் தண்ணீரில் போடலாம்.
- ஏனெனில் இதில் இருந்து வெளியேறும் மஞ்சள் நிற திரவம் சிலருக்கு அரிப்பு போன்ற ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடும். அதனை நீக்க கற்றாழை ஜெல்லை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அலசவும்.
- அதை ஒரு பிளெண்டரில் கலக்கவும். பிறகு அதை வடிகட்டவும். ஒரு மஸ்லின் துணியால் வடிகட்டி, ஜெல்லை மட்டும் பிரித்துக் கொள்ளவும்.
- அதில் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு துளி அல்லது இரண்டு வைட்டமின் ஈ ஆயிலையும் சேர்க்கவும்.
- உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், வைட்டமின் ஈ ஆயில் சேர்க்க தேவையில்லை.
- இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மசாஜ் செய்யதால், விரைவில் பளபளப்பான, மென்மையான சருமத்தை பெறலாம்.
Image Source: Freepik