Doctor Verified

Baby Skin Care Tips: குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதுகாக்க இந்த முறைகளைப் பின்பற்றுங்க

  • SHARE
  • FOLLOW
Baby Skin Care Tips: குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதுகாக்க இந்த முறைகளைப் பின்பற்றுங்க

குழந்தைகளின் மென்மையான தோல் பராமரிப்புக்காக, குளிக்க வைத்தால் மட்டும் போதாது. சருமத்தில் தினம் எதைப் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். பல நேரங்களில் பல்வேறு தவறுகளை நாம் அறியாமல் செய்து விடுகிறோம். இது குழந்தைகளின் சருமத்தை சேதமடைய வைக்கலாம். குழந்தைகளின் உணர்திறன் மிக்க சருமத்தை கவனித்துக் கொள்வதற்கு, சாரதா கிளினிக்கின் மருத்துவர் டாக்டர் கே.பி.சர்தானா அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Rashes on Baby Neck: பிறந்த குழந்தையின் கழுத்தில் புண்கள் வர காரணம்..

குழந்தைகளின் தோல் பராமரிப்பில் செய்யக் கூடாதவை

மருத்துவர் கே.பி.சர்தானா அவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் மென்மையான தோல் பராமரிப்புக்கு நாம் தவிர்க்க வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்.

அடிக்கடி டயப்பர் மாற்றவும்

குழந்தைகளின் தோல் மென்மையாக இருப்பதால், ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்கும் ஒரு முறை டயப்பரை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். டயப்பரை மாற்றும் போது, குழந்தைகளின் உடல் பாகங்களை சிறிது நேரம் திறந்து வைத்து, லேசான காற்று வீச அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தை ஈரப்பதத்திலிருந்து விடுவிப்பதுடன், குழந்தைகளுக்கு ஏற்படும் எரிச்சலையும் குறைக்கலாம். மேலும் புதிய டயப்பரை மாற்றும் முன் குழந்தையின் தோலை ஈரமான துணியால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

தினமும் குளிக்க வைப்பதை தவிர்த்தல்

குழந்தை முழங்காலில் நடக்கத் தொடங்கும் வரை வாரத்திற்கு 3 முதல் 4 முறை மட்டுமே குளிக்க வைக்க வேண்டும். அதிகமாக குளிக்க வைக்கும் போது, சருமம் வறண்டு போவதுடன் அரிப்பு ஏற்படலாம். குளிக்க வைப்பதற்குப் பதில், குழந்தையின் டயப்பர் வைக்கும் பகுதி, தொடைகள், அக்குள் போன்றவற்றை தினமும் ஈரமான துணியால் சுத்தம் செய்யலாம். குளிக்கும் போது வாசனை மற்றும் சாயம் இல்லாத பேபி வாஷைப் பயன்படுத்தலாம்.

நேரடி சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைத்தல்

பிறந்து 6 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகள் இருப்பின், முடிந்தவரை அவரை நேரடி சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சட்டை, பேன்ட், தொப்பி, பருத்தி தலைப்பாகை போன்றவற்றை அணியலாம். இது சூரிய ஒளியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது. குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையாக இருப்பதால், வெயிலில் எடுத்துச் செல்வது, அவர்களின் தோலில் எரிச்சல், சொறி, மற்றும் அரிப்புத் தன்மையை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Baby Skin Care: குழந்தையின் சரும பராமரிப்புக்கு பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்

மாய்ஸ்சரைசர் பயன்பாட்டைக் குறைத்தல்

மென்மையான உணர்திறன் மிக்க சருமம் கொண்ட குழந்தைகளுக்கு, அதிகளவிலான மாய்ஸ்சரைசர் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. இது குழந்தையின் தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மேலும், குழந்தையின் தோல் மிகவும் வறண்டு இருக்கும் போது அந்த இடத்தில் பெட்ரோலியம் ஜெல் தடவலாம். சில நேரங்களில் அதிகமாக மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும் போது தோலில் எரிச்சல் உண்டாகலாம்.

டயப்பர் சொறி ஏற்படாமல் பாதுகாத்தல்

குழந்தைகளுக்கு டயப்பர் சொறி ஏற்படும் போது அது எரிச்சல் மற்றும் கவலை உணர்வைத் தரும். இந்த சூழ்நிலையில் இந்த சிக்கலைத் தவிர்க்க, டயப்பர் மாற்றும் முன், டயப்பர் வைக்கும் இடத்தில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். குழந்தைகளின் டயப்பர்களை விரைவாக மாற்ற வேண்டும். துணி டயப்பர்களைப் பயன்படுத்தினால், அதைத் துவைக்க கெமிக்கல் நிறைந்த டிடர்ஜென்ட் பவுடர் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். அதே போல, கழுவிய பிறகு, டயப்பரை வெயிலில் உலர்த்த வேண்டும். வெயிலில் பாக்டீரியாக்கள் இல்லாதவையாக மாறிவிடும்.

உணர்திறன் வாய்ந்த மென்மையான சருமம் கொண்ட குழந்தைகளை இந்த வழிகளில் கவனித்துக் கொள்ள வேண்டும். எனினும், குழந்தைகளின் தோலில் புதியதாக எதையும் பயன்படுத்தும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!

Image Source: Freepik

Read Next

Child Feeding Tips: குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்குறாங்களா? குழந்தைகளுக்கு உணவூட்ட இது தான் சரியான வழி

Disclaimer

குறிச்சொற்கள்