பிறந்த குழந்தைகளின் தோல் மிகவும் உணர்திறன் மிக்க ஒன்றாகும். குழந்தைகளின் தோல் பராமரிப்பு, பெரியவர்களிடமிருந்து முற்றிலும் வேருபட்ட ஒன்றாகும். குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாப்பதற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் மென்மையான சருமத்தை அதிக இரசாயனங்கள் கொண்ட பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதிலாக, மென்மையான சோப்புகள், ஷாம்புகளை பயன்படுத்தலாம். கடினமான உணர்திறன் மிக்க இரசாயனங்கள் குழந்தைகளின் சருமத்திற்கு எதிர்வினையாற்றுவதாக அமைகிறது.
குழந்தைகளின் தோல் பராமரிக்கு பின்பற்ற வேன்டிய குறிப்புகள்
பிறந்த குழந்தைகளின் உணர்திறன் மிக்க தோல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான 9 தோல் பராமரிப்பு குறிப்புகள் இங்கே
டயபரால் தடிப்பு ஏற்படுதல்
குழந்தைகளுக்கு டயபர் அணிவதில் அதிக பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். டயபர்கள் ஈரமானதாக இருப்பின் குழந்தைகளுக்குச் சொறி ஏற்படும். இவ்வாறு ஈரப்பதம் கொண்ட டயபரை அகற்றுவதுடன், பகுதியைச் சுத்தம் செய்து மென்மையாக வைத்திருக்க வேண்டும். இது சுத்தம் செய்ய துடைப்பான்களைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைக்கு இதனால் ஏற்பட்ட தடிப்புகள் கடுமையாக இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
உலர் சருமம்
குழந்தைகளுக்கு சற்று வறண்ட சருமம் இருப்பது இயல்பான ஒன்றாகும். இது தானாகவே சரி ஆகிவிடும். இருப்பினும், நீண்ட நேரம் வறண்ட சருமம் இருப்பதை தவிர்க்கவும். இதற்கு இரசாயனங்கள் இல்லாத ஈரப்பதம் கொண்ட லோஷன்களைப் பயன்படுத்தி சருமத்தை மென்மையாக்கலாம்.
குளிக்க வைத்தல்
குழந்தையின் தோலில் இயற்கையான எண்ணெய்கள் உற்பத்தியாகும். இருப்பினும், தினமும் குழந்தைகளை குளிக்க வைப்பதால், மென்மையான சருமத்தை தரும் எண்ணெய்கள் அகன்று விடும். குழந்தைகளுக்கு வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் முகம் மற்றும் கண்களைத் தண்ணீரில் மட்டும் சுத்தம் செய்ய வேண்டும். இது குழந்தையின் தோலை உலர வைக்க உதவும். சூடான நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தியே குழந்தைகளைக் குளிப்பாட்ட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!
நகப்பராமரிப்பு
குழந்தைகளின் நகப்பராமரிப்பு சருமப் பராமரிப்புக்கு முக்கியமானது. ஏனெனில், நகம் நீளமாக வளர்ந்தால், குழந்தையின் முகம் அல்லது உடலில் கீறல்களை ஏற்படுத்தக் கூடும். நகங்களை பாதுகாப்பான முறையில் வெட்ட வேண்டும். குழந்தைகள் தூங்கும்போது நகங்களை வெட்டுவது நல்லது. இல்லையெனில் குழந்தை அசைவு ஏற்படுத்திக் கொண்டே இருக்க காயத்தை ஏற்படுத்தும்.
மசாஜ்
குழந்தைக்கு மசாஜ் செய்வதன் மூலம், குழந்தையின் சருமம் மென்மையாக இருப்பதை உணரலாம். இது குழந்தையின் தசைகளில் தளர்வை அதிகரித்து, சிறந்த தூக்கத்தைத் தருகிறது. எனினும், மசாஜ் செய்யும் போது வட்ட இயக்கங்களில் செய்வதையும், தீவிரமாக தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பான தோல் பொருள்கள்
மென்மையான உணர்திறன் கொண்ட சருமத்திற்கு தோல் பொருள்களை பாதுகாப்பானதாக தேர்வு செய்ய வேண்டும். அதிலும், pH அளவு 5 அல்லது 5.5-க்கு அருகில் கொண்ட இரசாயனம் மற்றும் வாசனை அற்ற பொருள்களைத் தேர்வு செய்து குழந்தைகளுக்குப் பயன்படுத்தலாம். மேலும், தோல் தயாரிப்புகள் வாங்க நினைக்கும் தாய்மார்கள், நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது.
சொறி ஏற்படுதல்

இந்த பதிவும் உதவலாம்: Newborn Sleeping: குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்
Image Source: Freepik