$
பெரியவர்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பது போல் குளிர்காலத்தில் குழந்தையின் சருமத்தை பராமரிப்பது அவசியம். ஏனெனில் குழந்தைகளின் தோல் பெரியவர்களை விட அதிக உணர்திறன் கொண்டது. எனவே, குழந்தைகளின் சருமம் சரியான முறையில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே அழகாக இருக்கும். இதற்கு தாய்மார்கள் என்ன கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
நீரேற்றம்:
சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க, உடலில் நீர்ச்சத்தை நல்ல அளவில் பராமரிக்க வேண்டியது அவசியம். கோடை மற்றும் குளிர்காலத்தில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் இல்லாததால், இது உடலில் விரைவாக நீரிழப்பை ஏற்படுத்துகிறது.

இதை போக்க, உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியமாகும். எனவே, குழந்தைகளின் உடலை நீரேற்றமாக வைத்திருக்க, அவர்களுக்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்கலாம். அதேபோல், சரியான தாய்ப்பால் குழந்தைகளை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
குளிக்க வைக்கும் போது இதை தவிருங்கள்:
குழந்தைகளைக் குளிப்பாட்டும்போது, ரசாயனங்கள் இல்லாத நல்ல பாடி வாஷைப் பயன்படுத்தவும், மேலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும். மேலும், உடலில் அதிக சோப்பு பயன்படுத்த வேண்டாம்.

குழந்தைகளுக்கு நேரடியாக சோப்பை பயன்படுத்த வேண்டாம். கைகளில் வைத்து குழந்தைகளின் உடலில் தடவவும். அதேபோல், குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும். மேலும் குளிக்க வைத்ததும் குழந்தையை மென்மையான காட்டன் துண்டால் நன்றாக துடைக்க வேண்டும், ஏனெனில் அதிக தண்ணீரில் இருப்பதும் சருமத்திற்கு நல்லதல்ல.
சருமம் வறண்டு போகாமல் இருக்க:

குழந்தைகளின் சருமத்தை வறண்டு போகாமல் வைத்திருப்பது, குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ரசாயனங்கள் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.
ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது:
குளிர்காலத்தில், குழந்தைகளுக்கு குளிரை தடுக்கக்கூடிய வகையிலான ஆடைகளை அணிவிக்க வேண்டும். அதற்காககுழந்தைகளுக்கு மிகவும் சூடாக இருக்கும் வகையில் ஆடை அணிவது நல்லதல்ல. இதனால் சரும பிரச்சனைகள் அதிகரிக்கும்.

அதேபோல், குழந்தைகளுக்கு அசௌகரியம் மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே குழந்தைகளின் சரும வகைக்கு ஏற்ற ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல், குழந்தைகளை அதிக சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது அவர்களின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
Image Source: Freepik