$
Bone Injury: எலும்புகள் நமது உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். உறுப்புகளுக்கான பல ஆதரவை வழங்குவது எலும்புகள் தான். எழுவதற்கும், உட்காருவதற்கும், நடப்பதற்கும், எல்லா வகையான வேலைகளுக்கும் எலும்புகள் அவசியம். எலும்புகள் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால் எலும்பில் சிறு காயம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை.
இதுபோன்ற சூழ்நிலைகளில் எலும்புகளில் வலி தாங்க முடியாத அளவில் இருக்கும். காயம் தீவிரமாக இருக்கும்பட்சத்தில் வலி மற்றும் வீக்கம் மட்டுமின்றி, எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கலாம் என்பதை உணர்வது அவசியம். உங்களுக்கு எலும்பில் காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம்.
இதையும் படிங்க: Vitamin B12 Deficiency: கவனிக்க வேண்டியவை இது தான்…
எலும்பில் காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் அடிக்கடி இதுபோன்ற சூழ்நிலைகளை சந்திக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க, சில எளிய குறிப்புகள் தெரிந்து கொள்ளுங்கள்.
எலும்பில் காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்வது?

காயத்திலிருந்து இரத்தப்போக்கு இருந்தால், முதலில் இரத்தப்போக்கு நிறுத்தப்பட வேண்டும். இரத்தம் வெளியேறுவதை தடுத்த உடன் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஒரு எலும்பு முறிந்தால், அதற்கு ஆதரவு தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, காயமடைந்த பகுதியின் கீழ் ஒரு குஷன் அல்லது பலகையை வைக்கவும். காயம்பட்ட பகுதியை ஒரு துணியால் மூடி வைக்கவும். ஐஸை ஒரு காட்டன் துணியில் போர்த்தி பின் மெதுவாக தடவவும் இது இரத்தப்போக்கை தடுக்க உதவும்.
எலும்பு காயத்திற்கு சிகிச்சை அளிப்பது எப்படி?
- காயமடைந்த பகுதியை உங்கள் கைகளை பயன்படுத்து நகர்த்தவும். அந்த பகுதியை அதிகம் நகர்த்தக் கூடாது. இது வலியை அதிகரிக்கும்.
- தோள்பட்டை, கை, காலில் எலும்பில் காயம் ஏற்பட்டால் துணியால் கட்டித் தாங்கப் பிடிக்கவும்.
- முழங்கால் அல்லது கால் எலும்பு உடைந்தால் கைகள் மூலம் அதற்கான ஆதரவை வழங்க முடியும்.
- எலும்பு காயம் ஏற்படும் போது தோல் நீல நிறமாக மாறலாம். இதற்கு சிகிச்சையளிக்க, நீங்கள் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். ஆனால் எலும்பு முறியவில்லை என்று தெரிந்தால் மட்டுமே.
எலும்பு காயம் ஏற்பட்டால் என்ன செய்யக்கூடாது?

- எலும்பு காயம் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் மேற்கொள்ளக் கூடாது.
- முதலில் மருத்துவரிடம் பரிசோதித்து, எலும்பு முறிவு இல்லாவிட்டால் மட்டுமே வீட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
- காயமடைந்த எலும்பின் இயக்கத்தைக் குறைக்கவும். வலி இருக்கும் இடத்தில் அழுத்தம் கொடுத்து பிரச்சனையை மேலும் பெரிதாக மாற்றக் கூடாது.
- எலும்பு காயம் ஏற்பட்டால் ஓய்வு முக்கியம். முடிந்த அளவு தண்ணீர் அதிகமாக குடிக்கவும்.
இதையும் படிங்க: Tooth Decay: தீரா பல் வலியை தடுக்க உகந்த வைத்தியம்!
நம்மால் முடியும் என்று முயற்சி செய்வது எந்த பிரச்சனைக்கும் தீர்வாக தான் இருக்காம். அதேநேரத்தில் எலும்புகளில் அடிபட்டிருக்கும் போது பிரச்சனையை இது தீவிரமாக்கலாம் எனவே மருத்துவரை முறையாக அணுகி பரிந்துரையை பெறுவது அவசியம். ஆரோக்கியம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.
Image Source: FreePik