Healthy lifestyle habits to improve chances of pregnancy: இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் மலட்டுத்தன்மை பிரச்சனைகளும் அடங்கும். குறிப்பாக, பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். எந்தவொரு பெண்ணும், கர்ப்பம் தரிப்பதற்கு ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே, அன்றாட வழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கருத்தரிக்க மருந்துகளை மட்டும் சார்ந்திருப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருப்பதும் முக்கியமாகும்.
இதில் ஆஷா ஆயுர்வேதத்தின் இயக்குநரும் மகப்பேறு மருத்துவருமான டாக்டர் சஞ்சல் சர்மா அவர்கள், “கருத்தரிக்க ஆண்களும் பெண்களும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம்” என்று பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பிணி பெண்களே! நீங்க தினமும் உங்க உணவில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான காலை உணவுகள்
கர்ப்பம் தரிக்க சரியான வழக்கம் ஏன் அவசியம்?
டாக்டர் சஞ்சல் சர்மாவின் கூற்றுப்படி, பெண்கள் கருத்தரிக்க முக்கியமான பல்வேறு காரணிகள் உள்ளது. இதில் மிக முக்கியமானதாக, அவர்களின் அன்றாட வழக்கம் அமைகிறது. வாழ்க்கை முறை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால், ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறை வைட்டமின் சி எடுத்துக் கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் தூங்குவது, மன அழுத்தத்தைக் குறைப்பது போன்றவற்றின் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். ஏனெனில் இது கருவுறுதலை அதிகரிக்கிறது. மேலும் இது உடல் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்திருக்கிறது. இவை அனைத்துமே கருத்தரிக்க அவசியமாகும்.
கர்ப்பம் தரிப்பதற்கான சரியான வழக்கம் என்ன?
மருத்துவரின் கூற்றுப்படி, கர்ப்பம் தரிப்பதற்கு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே, கர்ப்பத்திற்கான தினசரி வழக்கம் சரியாக இருப்பது மிகவும் முக்கியமாகும். இதற்கு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சி: ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் கருப்பையில் இரத்த ஓட்டத்தை சரியாக வைத்திருக்கவும் மற்றும் குழந்தை நன்றாக வளரவும் உதவுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்வது: கர்ப்பமாக இருப்பதற்கு, உணவில் சமச்சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது முக்கியமாகும். ஆயுர்வேதத்தின்படி, கர்ப்பிணிப் பெண்கள் ஒருபோதும் பழைய உணவைச் சாப்பிடக்கூடாது. எப்போதும் அவர்கள் புதிய உணவைச் சாப்பிட வேண்டும்.
உடலில் இருந்து நச்சுப் பொருட்களை நீக்குவது: கருத்தரிப்பதற்கு முன், உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றுவது முக்கியமாகும். ஆயுர்வேதத்தின் படி, பஞ்சகர்மா உடலை சுத்தப்படுத்தவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், நச்சுப் பொருட்களை நீக்க உதவுகிறது. இதன் மூலம் கர்ப்பம் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் பெண்கள் தவறுதலாக கூட இந்த பானங்களை குடிக்கக்கூடாது.!
சரியான நேரத்தில் எழுந்திருப்பது: கருத்தரிக்க முயற்சிக்க, சூரிய உதயத்திற்கு முன் காலையில் எழுந்திருக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இந்த சமயத்தில் உடலில் நேர்மறை ஆற்றல் பாய்வதுடன், ஹார்மோன் சமநிலையும் பராமரிக்கப்படுகிறது.
மன அழுத்தத்தைக் குறைப்பது: இன்றைய காலகட்டத்தில், பெண்கள் கருவுறாமை பிரச்சனையால் கர்ப்பம் தரிக்கும் ஆபத்து அதிகரிக்கலாம். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் ஆகும். எனவே, கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கக்கூடாது. மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு, தொடர்ந்து யோகா மற்றும் பிராணயாமம் செய்யலாம். இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் கருவுறுதலையும் அதிகரிக்கிறது.
முடிவுரை
கர்ப்பம் தரிப்பதற்கு, எந்தவொரு பெண்ணும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் வழக்கத்தை பின்பற்றுவது முக்கியமாகும். எனவே, கர்ப்பமாக இருக்க விரும்பினால், மருத்துவர் வழங்கிய இந்த குறிப்புகளைப் பின்பற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS இருந்தாலும் குழந்தை பெற முடியுமா? Positive Result-க்கு மருத்துவர் கூறும் முக்கிய குறிப்புகள் இங்கே..
Image Source: Freepik