Newborn Gas Problem: பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு பிரச்சனையை நீக்க இத டிரை பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Newborn Gas Problem: பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு பிரச்சனையை நீக்க இத டிரை பண்ணுங்க


How To Get Rid Of Baby Gas Fast: பொதுவாக, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடல் நலப் பிரச்சனைகள் உருவாவது மிகவும் பொதுவான விஷயமாகும். அதில் ஒன்றே பிறந்த குழந்தைகளுக்கு வாயு பிரச்சனை ஏற்படுவது. தாயின் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது. ஒரு குழந்தையானது ஒரு நாளைக்கு 10 முதல் 15 முறை வாயுவை வெளிவிடலாம். ஆனால் சில நேரங்களில் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. குழந்தைகளில் ஏற்படும் இந்தப் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

அதாவது குழந்தை பால் குடித்த பிறகு துளிர்விடாமல் இருப்பது, ஃபார்முலா பாலை ஜீரணிக்க முடியாமல் போவது அல்லது பாட்டிலில் இருந்து பாலை வேகமாக குடிப்பது என பல காரணங்கள் இருக்கலாம். இவ்வாறு, அடிக்கடி வாயு உருவாவது குழந்தைகளுக்கு சங்கடத்தைத் தருவதுடன், அழ ஆரம்பிக்கும். இவ்வாறு தொடர்ந்து இந்த பிரச்சனையைச் சந்திக்கும் போது எரிச்சலை உணரலாம். இந்நிலையில், வாயு பிரச்சனையிலிருந்து குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க சில நடவடிக்கைகளை எடுக்கலாம். இதில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வாயுத் தொல்லையிலிருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Child Pneumonia Prevention: குழந்தைக்கு நிம்மோனியா இருப்பதற்கான அறிகுறிகள் இது தான்.! எளிதில் சரியாக இத செய்யுங்க.

புதிதாக பிறந்த குழந்தைகளில் வாயு பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள்

  • வயிற்றை நோக்கி கால்களை இழுத்தல்
  • குழந்தை வீங்கியதாக உணர்வது
  • சத்தமாக அழுவது
  • பதட்டம் மற்றும் எரிச்சலை உணர்வது
  • அடிக்கடி எரியும் உணர்வு
  • வயிற்றைத் தேய்ப்பது
  • குழந்தையின் வயிற்றில் சத்தம் உண்டாவது

இவை அனைத்தும் குழந்தைகள் வாயு பிரச்சனையைக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

பிறந்த குழந்தைகளின் வாயு பிரச்சனைக்கான சில வீட்டு வைத்தியங்கள்

மசாஜ் செய்வது

புதிதாகப் பிறந்த குழந்தையின் வயிற்றில் மசாஜ் செய்வதன் மூலம் வாயு சம்பந்தமான பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இவ்வாறு மசாஜ் செய்வதன் மூலம் வயிற்றில் சிக்கியுள்ள வாயு குமிழிகளை வெளியேற்ற உதவும். குழந்தைக்கு மசாஜ் செய்ய, அவரை முதுகில் படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குழந்தையின் வயிற்றை வட்ட இயக்கத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதில் அவர்களுக்கு 'ஐ லவ் யூ' மசாஜ் நுட்பத்தை முயற்சிக்கலாம். இதற்கு குழந்தையின் வயிற்றில் I, L மற்றும் Y என்ற எழுத்துக்களை எழுதுவதைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்வதன் மூலம் வாயு வெளியேறி குழந்தைக்கு நிவாரணம் கிடைக்கும்.

வயிற்றைக் கழுவுதல்

குழந்தை வயிறு வலி மற்றும் வாயு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பின், விரைவாக நிவாரணம் பெற உதவுவது அவர்களது வயிற்றைக் கழுவுவது ஆகும். இதற்கு டவல் ஒன்றை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நன்கு பிழிந்து கொள்ள வேண்டும். பிறகு குழந்தையின் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். இவ்வாறு சிறிது நேரம் செய்து வந்தால், குழந்தைக்கு வாயு தொல்லை நீங்குவதுடன், வயிற்றில் ஏற்படும் பிடிப்புகளும் நீங்கி விடும். எனினும், தண்ணீர் மிகவும் சூடாக இருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Earbuds For Babies: குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய இயர்பட் யூஸ் பண்றீங்களா? முதல்ல இத பாருங்க

பெருங்காயம்

வயிற்று வாயுவிலிருந்து குழந்தைக்கு நிவாரணம் அளிக்க பெருங்காயத்தைப் பயன்படுத்தலாம். அதாவது வாயு பிரச்சனை இருப்பின், குழந்தையின் தொப்புளில் பெருங்காயத் தண்ணீரைத் தேய்க்க வேண்டும். இவ்வாற் செய்வதன் மூலம் வாயுவில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். இது தவிர, குழந்தையின் வயிற்றில் வாயு ஏற்பட்டால், பெருங்காயத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அவரது வயிறு மற்றும் தொப்புள் சுற்றிலும் தடவ வேண்டும். இதன் மூலம் குழந்தைக்கு வாயு வெளியேறி நிவாரணம் கிடைக்கும்.

முழங்கால்களை வளைத்து சைக்கிள் ஓட்டுதல்

பல சமயங்களில் குழந்தை வாயு பிரச்சனையைக் கடக்க முடியாமல் போகலாம். இதனால், குழந்தை அசௌகரியத்தை சந்தித்து அழத் தொடங்கலாம். இந்நிலையில், குழந்தையின் வாயுத்தொல்லையிலிருந்து நிவாரணம் அளிக்க, அவரை முதுகில் படுக்க வைத்து, முழங்கால்களை வளைத்து கால்களை உயர்த்த வேண்டும். பின் சைக்கிள் ஓட்டுதல் போன்ற இயக்கங்களைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றில் உள்ள வாயு வெளியேறி குழந்தைக்கு நிவாரணம் கிடைக்கலாம்.

உணவளிக்கும் போது குழந்தையின் தலையை உயர்த்துதல்

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு, பாட்டிலில் பால் ஊட்டும் போது அவரது தலையை வயிற்றுக்கு சற்று மேலே வைத்து கொடுக்க வேண்டும். ஏனெனில், பல சமயங்களில் குழந்தை பாட்டிலிலிருந்து பாலை மிக வேகமாக உறிஞ்சுகிறது. இதனால், வயிற்றில் காற்றும் போய்விடும். மேலும், குழந்தையின் தலையை உயர்த்தி உணவளிக்கும் போது, உருவாகும் வாயுவானது மேல்நோக்கி வரும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் எளிதில் வாயுவை வெளியேற்றலாம். இதற்கு தாய்ப்பால் கொடுக்கும் போது நர்சிங் தலையணைகளைப் பயன்படுத்தலாம்.

புதிதாக பிறந்த குழந்தைகளின் வயிற்றில் வாயு உருவாவதற்கு நிவாரணம் அளிக்க, இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம். எனினும், குழந்தையின் நிலையைக் கருத்தில் கொண்டு, புதிதாக எந்தவொரு சிகிச்சையைப் பின்பற்றும் முன்னதாகவோ அல்லது குழந்தைக்கு இந்த வைத்திய முறைகளின் மூலம் நிவாரணம் கிடைக்காமல் போகும் போதோ உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: 6 மாத குழந்தைக்கு சர்க்கரை கலந்த பாலை கொடுக்கலாமா? நிபுணர் தரும் விளக்கம்.

Image Source: Freepik

Read Next

Earbuds For Babies: குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய இயர்பட் யூஸ் பண்றீங்களா? முதல்ல இத பாருங்க

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version