$
Makhana Benefits: பொரி என்றவுடன் நினைவுக்கு வருவது அரிசி பொரி, மக்காசோளத்தில் தயாரிக்கப்படும் பாப்கார்ன் மட்டும்தான். மக்கானாவை பலருக்கும் தெரியாது. மக்கானா என்பது தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் தாமரை பொரி ஆகும். இது ஆங்கிலத்தில் லோட்டஸ் சீட்ஸ் பாக்ஸ் நட்ஸ் என கூறப்படுகிறது.
பலருக்கு நொறுக்குத் தீனி உண்ணும் பழக்கம் இருக்கும். ஆனால் இதனால் உடல் எடை அதிகரிக்கும், கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிக்கும் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதை அறிந்தும் பலர் இதை விடமுடியாமல் தவிப்பார்கள். இனி இந்த கவலை வேண்டாம், இனிமேல் நொறுக்குத் தீனியையே ஆரோக்கியமாக நீங்கள் சாப்பிடலாம்.
மக்கானா ஆரோக்கிய நன்மைகள்
உடல் எடையை குறைக்க, மக்கள் முதலில் டயட்டைப் பின்பற்றத் தொடங்குவார்கள். காரணம் உடல் எடையில் முக்கிய பங்கு வகிப்பது உணவுதான். மக்கானாவை தினமும் சாப்பிடுவது விரைவான எடை இழப்புக்கு உதவும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால் மக்கானாவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் உள்ளன. அப்படியென்றால் மக்கானா உண்மையில் எடை இழப்புக்கு வழிவகுக்குமா என்ற கேள்விவரும். இதுகுறித்து நிபுணர் கூறும் தகவலை பார்க்கலாம்.
இதையும் படிங்க: Morning Vs Evening Walk: எடை குறைய எந்த நேரத்தில் நடக்க வேண்டும்?
மக்கானா சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
நிபுணர்களின் கூற்றுப்படி, மக்கானாவை அளவாக சாப்பிட்டால் எடை குறைய உதவும் என கூறப்படுகிறது. இது குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டுள்ளது, இது எடை இழப்புக்கான சூப்பர்ஃபுட் ஆகும். எனவே மக்கானாவை அளவாக உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

நிறைந்த நார்ச்சத்து
மக்கானாவை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக அதன் நுகர்வு உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். தவிர, இது செரிமானத்திற்கும் நல்லது, இது அஜீரணம் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.
பசியை குறைக்கும்
மக்கானா உட்கொள்வதால் நீண்ட நேரம் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதனால் விரைவில் பசி ஏற்படாது. இது மட்டுமின்றி, நிரம்பிய உணர்வின் காரணமாக, உங்கள் அடுத்தவேளை உணவை நீங்கள் அளவாகவே எடுத்துக் கொள்வீர்கள்.
ஆற்றலை பராமரிக்க உதவும்
உடற்பயிற்சி செய்வதற்கு நம் உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் மக்கானாவை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் உடலை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் மக்கானாவில் காணப்படுகின்றன. இந்த சத்துக்கள் அனைத்தும் உடலில் ஆற்றலை பராமரிக்க உதவுகிறது.
புரதம் நிறைந்த உணவு
எடை இழப்புக்கு உணவில் புரதத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். நார்ச்சத்துடன், புரதமும் மக்கானாவில் ஏராளமாக உள்ளது, இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.
செரிமான அமைப்பு ஆரோக்கியம்
மோசமான செரிமானம் காரணமாக, உடலில் இருந்து நச்சுகள் வெளியேற முடியாது. இவையும் உடலில் சேர ஆரம்பித்து எடை கூடும். ஆனால் மக்கானா சாப்பிடுவது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, இது எடையையும் குறைக்கிறது.
இதையும் படிங்க: Weight loss: உடல் எடையை குறைக்க தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
மக்கானாவால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் உங்களுக்கு உடலில் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் இதை உட்கொள்ளும் முன் மருத்துவர் பரிந்துரை பெறுவது நல்லது.
Pic Courtesy: FreePik