$
Healthy Banana Dosa Recipe: குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்துட்டாங்களா? என்ன ஸ்னாக்ஸ் செஞ்சி கொடுக்கலாம்னு யோசிக்கிறீங்களா? வீட்டில் வாழைப்பழம் இருந்தால் மட்டும் போதும். சூப்பர் ஸ்னாக்ஸ் ரெடி.
எப்போதும் செய்வது போல் இட்லி, தோசை என்று செய்யாமல், கொஞ்சம் ஸ்பெஷலா எதாவது ட்ரை பண்ணா, குழந்தைகளும் குஷி ஆயிடுவங்க. வாழைப்பழத்தை வைத்து அப்படி என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? சூப்பர் ரெசிபியை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

வாழைப்பழ தோசை ரெசிபி
தேவையான பொருட்கள்
- நன்கு பழுத்த வாழைப்பழம் - 3
- கோதுமை மாவு - 1 கப்
- பால் - 1/2 கப்
- உப்பு - 1 சிட்டிகை
- முந்திரி - 8
- வெல்லம் - 1 கப்
- துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
- நெய் - தேவையான அளவு
- ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
இதையும் படிங்க: Ulundhu Kanji: உளுந்தங்கஞ்சி செஞ்சு சாப்பிடுங்க! பல நன்மைகள் கிடைக்கும்..
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் ஏலக்காய், வெல்லம், தேங்காய், முந்திரி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின் இதில் கோதுமை மாவு மற்றும் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.
- இந்த கலவையை 20 நிமிடங்களுக்கு ஊற விடவும். இவ்வாறு செய்தால் மாவு ரெடி.
- தற்போது தோசை கல்லை சூடு படுத்தி, அதில் நெய் தடவிக்கொள்ளவும்.
- இப்போது தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து, சிறிது மாவை ஊற்றவும்.
- இதில் நெய் சிறிது சேர்க்கவும்.
- ஒரு பக்கம் வெந்த உடன், திருப்பி போடவும்.
- அவ்வளவு தான் ருசியான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழ தோசை ரெடி. உங்கள் குழந்தைகளுடன் நீங்களும் இதனை ருசிக்கவும்.
Image Source: Freepik
Disclaimer