Bun Dosa Recipe in Tamil: பெரும்பலான வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கலாகத்தான் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும் தோசை பிரியர்களுக்கு பஞ்சம் இருக்காது. மூன்று வேலை தோசை கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் விரும்பி சாப்பிடும் பலர் உள்ளனர். இவர்களை தோசை பிரியர்கள் என்பதற்கு பதில் தோசை வெறியர்கள் என்று கூறலாம்.
அப்படி நமக்கு பிடித்த தோசையை இன்னும் ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும். வாருங்கள், ஆரோக்கியம் நிறைந்த பன் தோசை எப்படி செய்வது, இதன் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவா - 1 கப் (250 கிராம்)
புளிச்ச தயிர் - 3/4 கப்
தண்ணீர் கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலைபெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டிகொத்தமல்லி இலை
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு
சோடா உப்பு
எண்ணெய்
இந்த பதிவும் உதவலாம்: Mutton liver curry: ஆட்டு ஈரல் குழம்பு சாப்பிட்ருக்கீங்களா? இப்படி செஞ்சி பாருங்க.. மிச்சமே இருக்காது
பன் தோசை செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு ரவா, முக்கால் அளவுக்கு புளித்த தயிர், அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- இந்த கலவையை ஒரு மிக்ஸ்ர் ஜாரில் மாற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
- அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- ஒரு கடாயில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு, ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சேர்த்து வறுக்கவும்.
- இதனுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கி, கால் டீஸ்பூன் பெருங்காய தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து மாவில் சேர்க்கவும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
- ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கொஞ்சமாக மாவை ஊற்றி வேக விடவும்.
- ஒரு பக்கம் வெந்ததும் இன்னொரு பக்கம் திருப்பி விட்டு வேக விடவும்.
- இரண்டு பக்கமும் வெந்ததும், கரண்டியில் இருந்து எடுத்து விடவும்.
- பஞ்சு போன்று இருக்கும் இந்த பன் தோசையை உங்களுக்கு பிடித்த சட்னி உடன் சூடாக பரிமாறவும்.
தோசை சாப்பிடுவதன் நன்மைகள்:
செரிமானத்திற்கு நல்லது: நொதித்தல் செயல்முறை சிக்கலான ஊட்டச்சத்துக்களை எளிமையான வடிவங்களாக உடைத்து, பெரும்பாலான மக்களுக்கு தோசையை எளிதில் ஜீரணிக்க வைக்கிறது.
கலோரிகள் குறைவாக: ஒரு சாதாரண தோசை இயற்கையாகவே கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை மேலாண்மைக்கு ஏற்ற தேர்வாக அமைகிறது.
புரதம் நிறைந்தது: அரிசி மற்றும் பருப்பு கலவையின் காரணமாக தோசை தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல மூலமாகும்.
நிறைவுற்ற கொழுப்பு குறைவாக: தோசையில் இயற்கையாகவே நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Cauliflower Gravy: அட உங்களுக்கு காலிபிளவர் பிடிக்குமா? அப்போ இப்படி கிரேவி செய்து சாப்பிடுங்க!
ஊட்டச்சத்து உறிஞ்சுதல்: நொதித்தல் அரிசி மற்றும் பருப்புகளிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.
நார்ச்சத்து மூலம்: செய்முறையைப் பொறுத்து. தோசை உணவு நார்ச்சத்தை வழங்க முடியும், இது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பல்வேறு விருப்பங்கள்: உங்கள் தோசையை அதன் ஊட்டச்சத்து மதிப்பை மேலும் அதிகரிக்க காய்கறிகள், பனீர் அல்லது முளைகள் போன்ற பல்வேறு ஆரோக்கியமான நிரப்புதல்களுடன் தனிப்பயனாக்கலாம்.
Pic Courtesy: Freepik