Rava Uttapam Recipe In Tamil: பெரும்பலான வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கலாகத்தான் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும் தோசை பிரியர்களுக்கு பஞ்சம் இருக்காது. மூன்று வேலை தோசை கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் விரும்பி சாப்பிடும் பலர் உள்ளனர். இவர்களை தோசை பிரியர்கள் என்பதற்கு பதில் தோசை வெறியர்கள் என்று கூறலாம்.
அப்படி நமக்கு பிடித்த தோசையை இன்னும் ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும். வாருங்கள், ஆரோக்கியம் நிறைந்த ரவா ஊத்தப்பம் எப்படி செய்வது, இதன் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bread Pakoda: ரோட்டுக்கடை ஸ்டைல் பிரட் பக்கோடா எப்படி செய்யணும் தெரியுமா?
தேவையான பொருட்கள்
ரவா - 1 கப் (250 மி.லி கப்)
அவல் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1 சிறிய கப்
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
துருவிய கேரட் - 2
கொத்தமல்லி இலை நறுக்கியது
நெய்
ரவா ஊத்தப்பம் செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ரவை, ஊறவைத்த அவல், தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை கரைக்கவும்.
- மாவு கொஞ்சம் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய சம்பார் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, துருவிய கேரட் சேர்த்து நன்றாக கலந்து வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
- தவாவில் மாவை ஊற்றி, தாளிப்பை மேலே பரப்பவும். நெய்/எண்ணெய் சுற்றி ஊற்றி, கொஞ்ச நேரம் விட்டு திருப்பி போட்டு வேக விடவும்.
- சூடான ரவை உத்தப்பம் ரெடி தேங்காய் அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும். கண்டிப்பாக முயற்சி செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம்: Muttaikose Pakoda: வெங்காய பக்கோடா சாப்பிட்டிருப்பீங்க... முட்டைக்கோஸ் பக்கோடா சாப்பிட்டிருக்கீங்களா?
ரவா ஊத்தப்பம் ஆரோக்கிய நன்மைகள்:
இரும்புச்சத்து அதிகம்: ரவை இரும்பின் நல்ல மூலமாகும். இது இரத்த சோகை மற்றும் சோர்வை எதிர்த்துப் போராட உதவும்.
குறைந்த கொழுப்பு: ரவை ஊத்தப்பம் இயற்கையாகவே கொழுப்பு இல்லாதது, இதயத்திற்கு ஆரோக்கியமானது.
நார்ச்சத்து நிறைந்தது: ரவையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்க உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
பி-வைட்டமின்களின் நல்ல ஆதாரம்: ரவையில் மூளை ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் மட்டங்களுக்கு முக்கியமான பி வைட்டமின்கள் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Mangalore Bun: ரெண்டே ரெண்டு வாழைப்பழம் இருந்தால் போதும் சுவையான மங்களூர் பன்ஸ் தயார்!
தனிப்பயனாக்கக்கூடியது: உங்கள் ஊத்தப்பத்தின் ஊட்டச்சத்து சுயவிவரத்தை மேம்படுத்த வெங்காயம், தக்காளி, கேப்சிகம் மற்றும் மூலிகைகள் போன்ற பல்வேறு காய்கறிகளைச் சேர்க்கலாம்.
பசையம் இல்லாதது: ரவை இயற்கையாகவே பசையம் இல்லாதது. இது பசையம் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
Pic Courtesy: Freepik