Makhana Benefits: சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லலாம் மக்கானா ஒரு சூப்பர்ஃபுட் என்று. இது ஆரோக்கியமான மற்றும் நன்கு நிறைவுற்ற உணவாகும். தற்போது மக்கானா குறித்து பேசுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று என பார்த்தால், பிரதமர் மோடி மக்கானா குறித்து கூறியதுதான்.
பிரதமர் நரேந்திர மோடி டயட் முறை
பிரதமர் நரேந்திர மோடி வருடத்தின் 365 நாட்களில் குறைந்தது 300 நாட்கள் தான் மக்கானாவை சாப்பிடுவதாக வெளிப்படுத்தினார். உலக அளவில் பீகாரின் இந்த பாரம்பரிய பயிரை அதிகம் உற்பத்திய செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க: இட்லி தயாரிப்பில் கேன்சரை உண்டாக்கும் பிளாஸ்டிக்! கர்நாடகத்தில் அதிரடி நடவடிக்கை
முக்கிய கட்டுரைகள்
மக்கானா சாப்பிட சொன்ன பிரதமர் மோடி
சமீபத்தில் கூட பிரதமர் மோடி நாட்டில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருவதாகவும், இதை தடுப்பதற்கு நாட்டு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்திருந்தார். அதேபோல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனவும் மக்கள் உடல் பருமனை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் 10 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளார்.
பிரதமர் மோடி இதுகுறித்து குறிப்பிட்ட விரிவான தகவலை பார்க்கையில், "தற்போது நாடு முழுவதும் உள்ள நகரங்களில் காலை உணவின் முக்கிய பகுதியாக மக்கானா மாறிவிட்டது.
தனிப்பட்ட முறையில் பேசுகையில், நான் வருடத்திற்கு 365 நாட்களில் குறைந்தது 300 நாட்கள் மக்கானாவை சாப்பிடுகிறேன். இது ஒரு சூப்பர்ஃபுட், இதை நாம் உலக சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதனால்தான், இந்த ஆண்டு பட்ஜெட்டில், மக்கானா விவசாயிகளின் நலனுக்காக மக்கானா வாரியத்தை அமைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது," என பிரதமர் பாகல்பூரில் நடந்த ஒரு பேரணியில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கானா என்றால் என்ன?
மக்கானா குறித்து பலருக்கும் தெரியாது. மக்கானா என்பது தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் தாமரை பொரி ஆகும்.
- இது ஆங்கிலத்தில் லோட்டஸ் சீட்ஸ், பாக்ஸ் நட்ஸ் என கூறப்படுகிறது.
- மக்கானா என்பது யூரியால் ஃபெராக்ஸ் தாவரத்திலிருந்து பெறப்பட்ட ஒரு வகை விதை.
- இது பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும்.
- மக்கானாக்கள் பொதுவாக வறுத்த ஒரு சுவையான சிற்றுண்டியாக கருதப்படுகின்றன.
- சில நேரங்களில், இவை கறிகள், இனிப்பு வகைகள் மற்றும் பிற துணை உணவுகளிலும் சேர்க்கப்படுகின்றன.

மக்கானா ஆரோக்கிய நன்மைகள்
- உடல் எடையை குறைக்க, மக்கள் முதலில் டயட்டைப் பின்பற்றத் தொடங்குவார்கள். காரணம் உடல் எடையில் முக்கிய பங்கு வகிப்பது உணவுதான்.
- மக்கானாவை தினமும் சாப்பிடுவது விரைவான எடை இழப்புக்கு உதவும் என்று பலர் நம்புகிறார்கள்.
- மக்கானாவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் உள்ளன.
மக்கானா சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
- மக்கானாவை அளவாக சாப்பிட்டால் எடை குறைய உதவும் என கூறப்படுகிறது.
- இது குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டுள்ளது, இது எடை இழப்புக்கான சூப்பர்ஃபுட் ஆகும்.
- எனவே மக்கானாவை அளவாக உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.
நிறைந்த நார்ச்சத்து
மக்கானாவை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக அதன் நுகர்வு உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
இது செரிமானத்திற்கும் நல்லது, இது அஜீரணம் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.
பசியை குறைக்கும்
மக்கானா உட்கொள்வதால் நீண்ட நேரம் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதனால் விரைவில் பசி ஏற்படாது. இது மட்டுமின்றி, நிரம்பிய உணர்வின் காரணமாக, உங்கள் அடுத்தவேளை உணவை நீங்கள் அளவாகவே எடுத்துக் கொள்வீர்கள்.
ஆற்றலை பராமரிக்க உதவும்
- உடற்பயிற்சி செய்வதற்கு நம் உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.
- உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் மக்கானாவை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் உடலை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
- கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் மக்கானாவில் காணப்படுகின்றன.
- இந்த சத்துக்கள் அனைத்தும் உடலில் ஆற்றலை பராமரிக்க உதவுகிறது.
புரதம் நிறைந்த உணவு
எடை இழப்புக்கு உணவில் புரதத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
நார்ச்சத்துடன், புரதமும் மக்கானாவில் ஏராளமாக உள்ளது, இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.
மேலும் படிக்க: Rare Disease Day 2025: அரிய நோய்கள் குறித்து அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்..
செரிமான அமைப்பு ஆரோக்கியம்
- மோசமான செரிமானம் காரணமாக, உடலில் இருந்து நச்சுகள் வெளியேற முடியாது.
- இவையும் உடலில் சேர ஆரம்பித்து எடை கூடும்.
- ஆனால் மக்கானா சாப்பிடுவது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, இது எடையையும் குறைக்கிறது.
image source: freepik