Avocado For Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல கரைக்கும் வெண்ணெய்பழம்! இப்படி சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Avocado For Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல கரைக்கும் வெண்ணெய்பழம்! இப்படி சாப்பிடுங்க


Avocado Recipes For Weight Loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க சில ஆரோக்கியமான பழங்கள் உதவுகிறது. அதன் படி, உடல் எடை குறைய உதவும் பழங்களில் அவகேடோ பழமும் ஒன்று. இது ஒரு சுவையான பழம் மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழமாகும். இந்த பழத்தில் வைட்டமின் ஈ, கே, பொட்டாசியம் மற்றும் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. இதில் உடல் எடை குறைய அவகேடோ பழத்தை எந்தெந்த வழிகளில் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Berries For Weight Loss: நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு எடை குறையணுமா? இந்த ஒரு பழம் சாப்பிடுங்க

வெண்ணெய் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

வெண்ணெய் பழத்தில் போதுமான அளவிலான ஆரோக்கியமான மற்றும் நன்மை பயக்கும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது ஒருவரை நீண்ட காலத்திற்கு முழுமையாக உணர வைக்கிறது. மேலும், வெண்ணெய் பழம் உட்கொள்ளல் செரிமான ஆரோக்கியத்திற்கும், இதய மற்றும் கண் ஆரோக்கியத்திற்கும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. எனவே வழக்கமாக வெண்ணெய் பழங்களை உட்கொள்ளும் பெண்களுக்கு வயிற்று கொழுப்பைக் குறைவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது.

தொப்பை குறைய வெண்ணெய் பழத்தை சாப்பிடும் முறைகள்

கீரை அவகேடோ ரோல்

முழு ஆரோக்கியத்திற்கும் சமச்சீரான காலை உணவை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். அதன் படி, அவகேடோவின் முழுமையான நன்மைகளைப் பெற இதை கீரையுடன் உட்கொள்ளலாம். அதன் படி, பசலைக் கீரையில் வைட்டமின் ஏ, இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளது. ரொட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு, அதன் மூலம் வெண்ணெய்யைச் சேர்த்து, அதில் சமைத்த கீரையை மேலே வைக்க வேண்டும். இதில் கடல் உப்பு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து ரோல் செய்து சாப்பிடலாம்.

முளைக்கட்டிய பயறுடன் அவகேடோ

நம் அன்றாட உணவில் சாலட்டை சேர்ப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன் படி சாலட்டில் மிக முக்கியமான மூலப்பொருளாக முளைகள் உள்ளது. இதில் இரும்பு, கால்சியம் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. சாலட்டில் அவகேடோவைச் சேர்ப்பது ஆரோக்கியமானதாக அமைவதுடன், அதிக ஊட்டச்சத்து மிகுந்த சத்தானதாகவும் மாறுகிறது. இந்த ரெசிபிக்கு வெண்ணெய் பழத்தை துண்டுகளாக வெட்டி, அதை முளைகளுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். பின் இதில் மிளகு, உப்பு, சாட் மசாலா போன்றவற்றைச் சேர்த்து சுவைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Loss Drinks: வெறும் ஏழே நாளில் தொப்பைக் கொழுப்பு கறைய இந்த ட்ரிங் குடிங்க!

அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி

காலை உணவு வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதாகவும், உடல் எடையைக் குறைப்பதாகவும் அமைவதில் ஸ்மூத்தி ஒரு சிறந்த தேர்வாகும். இது எளிதான மற்றும் ஆரோக்கியமான விருப்பமாகக் கருதப்படுகிறது. அதன் படி, ஸ்மூத்தி தயார் செய்ய அவகேடோ மற்றும் வாழைப்பழத்தைப் பயன்படுத்தலாம். இவை இரண்டுமே செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் ஊட்டச்சத்து சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இந்த ரெசிபி தயார் செய்ய, வாழைப்பழத்துடன், அவகேடோ பழத்தை ஒரு கப் பாலுடன் கலந்து அருந்துவதன் மூலம் ஆரோக்கியமான காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

அவகேடோ ரைதா

இன்று பெரும்பாலானோர் ரைதாவை விரும்பி உண்ணுவர். இது உணவுக்கு அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணவில் தேவையான புரோபயாடிக்குகளையும் சேர்க்கிறது. இந்த வெண்ணெய் பழ ரைதா சுவையான மற்றும் ஆரோக்கியமான கலவையாக அமைகிறது. இந்த ரெசிபி தயார் செய்வதற்கு பாதி வெண்ணெய் பழத்தை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, தயிருடன் கலந்து கொள்வதுடன், பிடித்த மசாலாவைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

அவகேடோ பாதாம் டோஸ்ட்

காலையில் விரைவாகவும், ஆரோக்கியமாகவும் செய்யக்கூடிய சிற்றுண்டி வகைகளில் அவகேடோ பாதாம் டோஸ்ட் ரெசிபியும் ஒன்றாகும். இதில் பாதாம் மற்றும் அவகேடோ டோஸ்ட் சுவையைத் தரக்கூடியதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. இதில் சேர்க்கப்படும் பாதாமில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, கால்சியம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்றவை நிறைந்துள்ளது. புதிய ரொட்டி ஒன்றில் வெண்ணெய் பழத்தை பாதியாக வெட்டி, ரொட்டி முழுவதும் பரப்ப வேண்டும். பின் இதில் சுவைக்காக பாதாம் சேர்த்து அலங்கரித்து உட்கொள்ளலாம்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் அவகேடோ பழத்தை உட்கொள்வதன் மூலம் வயிற்றுத் தொப்பையை எளிதில் கரைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Coffee for Weight Loss: தினமும் ஒரு டம்ளர் பிளாக் காபி! தொப்பைக் கொழுப்பு முழுவதும் காலி!

Image Source: Freepik

Read Next

Belly Fat: சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் இந்த பானத்தை குடியுங்க… தொப்பையை வெண்ணெய் போல கரைக்கலாம்!

Disclaimer