இயற்கையாகவே மலம் வெளியேறி வயிறு காலியாக டாக்டர் சொன்ன இந்த 5 ட்ரிங்ஸ்ல ஒன்னு குடிங்க போதும்

Drinks that will make you poop fast: மலம் சுத்தமாக வெளியேறி வயிறு காலியாக இருப்பதற்கு சில ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் இயற்கையாகவே மலம் வெளியேறவும், வயிறு சுத்தமாக இருக்க உதவும் பானங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இயற்கையாகவே மலம் வெளியேறி வயிறு காலியாக டாக்டர் சொன்ன இந்த 5 ட்ரிங்ஸ்ல ஒன்னு குடிங்க போதும்


Drinks that will make you poop fast: அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் உடல் ஆரோக்கியத்தைக் கணிசமாக பாதிக்கலாம். ஏனெனில், இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய் சார்ந்த உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். இது அவர்களின் செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இதனால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகலாம். இதன் காரணமாகவே உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவுமுறை ஆரோக்கியமானதாக இருப்பது அவசியமாகும். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் சரியான நேரத்தில் மலம் கழிக்காமல் பின்வாங்கப்பட்டதாக உணர்கின்றனர். இதற்கு சிறந்த ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். டாக்டர் ஜிஐ ஜோ என்று ஆன்லைனில் நன்கு அறியப்பட்ட இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மலச்சிக்கல் மற்றும் மலம் கழிப்பதை இயற்கையாகவே சமாளிக்க உதவும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இப்படி மலம் கழிப்பவர்களுக்கு கேன்சர் வர வாய்ப்பு 242 மடங்கு அதிகமாம்... அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்...!

இயற்கையாகவே மலம் கழிக்க உதவும் பானங்கள்

டாக்டர் ஜிஐ ஜோ அவர்களின் கூற்றுப்படி, இயற்கையாகவே மலம் கழிக்க நாம் அருந்த வேண்டிய பானங்கள் சிலவற்றைக் காணலாம்.

சோர்பிடால் நிறைந்த சாறுகள்

சோர்பிடால் நிறைந்த பானங்களில் ப்ரூன், பேரிக்காய் மற்றும் ஆப்பிள் சாறுகள் போன்றவை அடங்கும். சோர்பிடால் எனப்படும் சர்க்கரை ஆல்கஹால் காரணமாக, இந்த பழச்சாறுகளை அருந்துவதால் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. இது மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பதால், இந்த சாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அவர், “ஒன்று அல்லது மற்றொன்றின் சுவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவற்றை ஒன்றாகக் கலக்கலாம், மேலும் நீங்கள் அதை புதியதாக செய்யலாம் அல்லது சர்க்கரை சேர்க்காமல் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, சோர்பிடால் குடலுக்குள் தண்ணீரை இழுத்து, மலத்தை மென்மையாக்கவும், குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

சியா ஃப்ரெஸ்கா

இந்த பானத்தை ஒரு முறை குடித்தால் மீண்டும் கேட்கத் தூண்டும். இது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இதற்கு மூன்று பொருள்கள் மட்டுமே தேவைப்படுகிறது. சியா விதைகள், புதிய எலுமிச்சை மற்றும் தண்ணீர் போன்றவை ஆகும். இதற்கு ஒரு தேக்கரண்டி சியா விதைகளை 10-15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்போது அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து, ஒரு புதிய எலுமிச்சையை பிழிந்து கொள்ள வேண்டும். இது தவிர, சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மலத்தை எளிதாக நகர்த்த உதவுகிறது. இதில் எலுமிச்சை சுவை மற்றும் செரிமான தூண்டுதல்களின் நன்மைகளுக்காக சேர்க்கப்படுகிறது.

காஃபின் கலந்த பானங்கள்

ஆம். காஃபின் கலந்த பானங்கள் கூட மலத்தை எளிதாக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் காஃபின் நிறைந்த பானங்களை அருந்துவது தூக்கத்திலிருந்து எழுப்புவது மட்டுமல்லாமல், மலத்தை எளிதாக கழிக்க உதவுகிறது. எனவே தான் அன்றாட உணவில் காபி அல்லது கிரீன் டீயை சேர்க்க மருத்துவர் பரிந்துரைக்கிறார். அவர் கூறியதாவது,”காஃபின் இரைப்பை குடல் அனிச்சையைத் தூண்டவும், குடல் இயக்கத்தைத் தூண்டவும் உதவுகிறது” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: தீராத மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியா? இந்த யோகாசனம் செய்யுங்க

மூலிகை தேநீர் வகைகள்

மூலிகை டீக்களை விரும்பியவர்கள், மலச்சிக்கலைத் தடுக்க அருந்தலாம். பல்வேறு மூலிகை டீ வகைகளில் ஜிஐ மருத்துவர் அவர்கள் சென்னா டீ அல்லது பெப்பர்மின்ட் டீயை பரிந்துரைக்கிறார். அவரின் கூற்றுப்படி, “இந்த சூடான நீர் குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. மேலும், குறுகிய கால பயன்பாட்டிற்கு சென்னா உள்ளவற்றையோ அல்லது வாயு மற்றும் வீக்கத்திற்கும் உதவும் பெப்பர்மின்ட் உள்ளவற்றையோ எடுத்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்“ என்று கூறியுள்ளார். சூடான டீக்களைக் குடிக்கும் போது நாம் மெதுவாக, நிதானமாக அருந்துவோம். இது நமது முழு செரிமான அமைப்பையும் நன்றாக உணர உதவுகிறது.

சைலியம் உமி பானம்

செரிமானத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த மற்றும் மற்றொரு பானமாக சைலியம் உமி பானம் அமைகிறது. சைலியம் உமி ஆனது ஒரு நார்ச்சத்து சப்ளிமெண்ட் ஆகும். இது உடலை புத்துணர்ச்சியூட்ட உதவுகிறது. மேலும் இது நார்ச்சத்தை சேர்ப்பதுடன், சர்க்கரை சேர்க்கப்படாத சுவையான பாக்கெட்டுகளை மருத்துவர் பரிந்துரைக்கிறார். இதைத் தயார் செய்வதற்கு, “சைலியம் உமியை தண்ணீர் அல்லது சாற்றில் கலந்து பானத்தை உருவாக்கலாம். சுவையான விருப்பத்திற்கு சுவையான மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாததாக பாக்கெட்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதைச் செய்யும் தொகுப்பைப் படிக்க மறக்காதீர்கள். மேலும், அடைப்பைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Pooping After Eat: சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க செல்கிறீர்களா? காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

Image Source: Freepik

Read Next

Benefits of Avocado: எடை இழப்பு முதல்.. நீரிழிவு மேலாண்மை வரை.. அவகேடோ நன்மைகள் இங்கே..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version