How many times is too much to poop: மலம் கழிக்கும் எண்ணிக்கை இடைவெளியும் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இருப்பினும் பொதுவாக ஒரு நாளுக்கு ஒரு முறையாவது மலம் கழிப்பது இயல்பானதாக பார்க்கப்படுகிறது . மலம் கழிப்பது குடல் சுகாதாரத்தைக் காக்க உதவுகிறது. உணவுப் பொருட்கள் சரியாக ஜீரணமாகி, உடலுக்குத் தேவையான சத்துக்களை உறிஞ்சிய பிறகு, தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதை இது உறுதி செய்கிறது.
இதையும் படிங்க: யாரெல்லாம் அத்திப்பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
அமெரிக்க விஞ்ஞானிகள் சொல்வது என்ன? (American scientists study on stool frequency)
அமெரிக்க நுண்ணுயிரியல் நிபுணரான சான் கிப்பன்ஸ் நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் மூன்று முறை மலம் கழிப்பவர்களின் குடலில் அதிக நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதை தனது ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளார். தினசரி அல்லாமல் ஒரு வாரத்துக்கே மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பவர்களின் இரத்தத்தில் நாள்ப்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் அல்சமைர் நோயோடு தொடர்புடைய நச்சுக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கண்டுபிடித்துள்ளார். மலச்சிக்கல் உள்ளவர்களின் குடலில் மலம் நீண்ட காலம் தங்கிவிடுவதே இரத்தத்தில் அதிக நச்சுக்கள் உண்டாக காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
How many poops per day is healthy
எனவேதான் ஒரு நாளுக்கு இரண்டு முறை முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரை மலம் கழிப்பது ஆரோக்கியமான சிறந்த பழக்கமாக இருக்கலாம் என்கிறார். நுண்ணுயிரியல் நிபுணரான சான் கிப்பன்ஸ் அண்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு வாரத்திற்கு ஏழு நாட்களும் இயல்பான மலம் கழித்தவர்களோடு ஒப்பிடுகையில் வெறுமனே நான்கு முறை மலம் கழிப்பவர்களுக்கு வாழ்நாள் குறைவு என்று தெரிவிக்கிறது.
புற்றுநோய் அபாயம் இருக்கா?
- நேரத்திற்கு மலம் கழிக்காமல் இருந்தால், அது குடலில் நீர் உறிஞ்சப்பட்டு, மலம் வறண்டு மலச்சிக்கல் ஏற்படும். இது வயிற்றுவலியும், அசௌகரியத்தையும் உண்டாக்கும்.
- உடலில் ழிவுப் பொருட்கள் சேர்ந்து விட்டால், அவை உடலுக்குள் இருந்து நச்சாக செயல்படலாம். இதனால் தோலில் பருக்கள், கரும்புள்ளிகள், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதனால், தினமும் சரியாக மலம் கழிப்பது உடலுக்கு தேவையான டிடாக்ஸிஃபெயிங் (Detoxifying) செயல்பாட்டாகும்.
- குடல் புற்றுநோயை (Colon Cancer) தடுக்கும்நேரத்தில் மலம் கழிக்காமல் இருந்தால், உடலில் விஷப்பொருட்கள் (Toxins) அதிகமாகி, குடல் பிரச்சினைகளை உருவாக்கும். இது நீண்ட காலத்தில் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
- சரியான முறையில் மலத்தை வெளியேற்றுவது செரிமான முறையை சரியாக வைத்திருக்க உதவுகிறது. செரிமான பிரச்சினை இல்லாமல் இருந்தால், உடல் எடை அதிகரிக்காமல் சீராக இருக்கும்.
- நச்சுப்பொருட்கள் வெளியேறாமல் உடலில் தேங்கினால், அவை பருக்கள், கருமை, தோல் உலர்ச்சி, அரிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால், தினசரி மலம் கழிப்பது முகத்திலும், சருமத்திலும் பளபளப்பை தரும்.
- மலம் கழிக்க முடியாமல் இருந்தால், உள்சஞ்சலமாகவும், மன அழுத்தமாகவும் இருக்கும். அதனால், குடல் சீராக செயல்பட்டால், மனமும் உற்சாகமாக இருக்கும்.
அதிக இடைவெளியில் மலம் கழிப்பவர்கள் புற்றுநோயால் வருவதற்கு 242 மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழப்பதற்கு 227 மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
How many poops per day is healthy
இதையும் படிங்க: Remedy For Constripation: மலச்சிக்கலில் இருந்து விடுபட சர்க்கரை வள்ளி கிழங்கை இப்படி சாப்பிடுங்க!
நிறம் மற்றும் வடிவத்திலும் கவனம் செலுத்தனுமா?
எப்போதெல்லாம் மலம் கழிக்கிறோம் எத்தனை முறை மலம் கழிக்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல மலத்தின் நிறம் மற்றும் வடிவத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவ வல்லுனர்கள் . ஆரோக்கியமான டைப் த்ரீ அல்லது டைப் 4 என்று வகைப்படுத்தப்படும் மிருதுவான சாசேஜ் வடிவில் மலம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் மலம் இருந்தால் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகவும் கூட இருக்கலாம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர் அடிக்கடி பேதி ஏற்படுவது
உணவு உட்கொண்ட பிறகு வயிறு கனத்திருப்பது போன்ற உணர்வு மற்றும் வாயுத் தொந்தரவு இருந்தால் கட்டாயமாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை செய்வது நல்லது என்கிறார்கள் மருத்துவ வல்லுனர்கள்.
Image Source: Freepik