கடந்த மாதம் பள்ளியில் படித்த 4 வயது சிறுவன் ஒருவன் சாக்லேட் சாப்பிட்டு தலைச்சுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவனது சிறுநீர் பரிசோதனையில் பென்சோடியாசெபைன்கள் இருப்பது தெரியவந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பிப்ரவரி 17 ஆம் தேதி பள்ளியிலிருந்து திரும்பிய வந்த சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான். இதையடுத்து இதுகுறித்து விசாரணையில், அந்த சாக்லேட் சாப்பிட்டதை தான் கண்டதாக பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: Anal Itching: ஆசன வாயில் திடீரென அரிப்பு வந்து சங்கடத்தை ஏற்படுத்துகிறதா? காரணமும், தீர்வும்
மயக்கம் அடைந்த 4 வயது சிறுவன்
இதையடுத்து, அந்த சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். அங்கு சிறுநீர் பரிசோதனையில் மனச்சோர்வு மருந்து அதில் கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவருக்கு சாக்லேட் எங்கிருந்து கிடைத்தது அல்லது பென்சோடியாசெபைன் குழந்தையின் உடலில் எப்படி நுழைந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
தொடர்ந்து சாக்லேட் சாப்பிட்ட பிறகு அந்த சிறுவனுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதை அந்த சிறுவனின் குடும்பத்தினர் செய்தியாளர்கள் மத்தியில் வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறியது.
4 வயது சிறுவன் மயக்கம் குறித்து போலீஸார் விளக்கம்
அந்த சிறுவனின் நிலை குறித்து அமிர்தா மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி முதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தரப்பிலும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக தற்போது காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
4 வயது சிறுவன் குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம்
இதுகுறித்து பள்ளியில் பணியாற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுவன் தனது தாத்தாவுடன் அவனது வீட்டுக்கு செல்லும் வரை நன்றாக தான் இருந்திருக்கிறான் என கூறியுள்ளார். மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த அதிகாரி இதுகுறித்து குறிப்பிடுகையில், மற்றொரு குழந்தையும் அந்த சாக்லேட்டின் ஒரு பகுதியை சாப்பிட்டதாகவும் ஆனால் அந்த சிறுவன் நன்றாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு மிக அதிக இரத்த அழுத்தம் இருந்ததாகவும், அதனால் அவர் சில நாட்கள் ஐசியுவில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: குறைவாக சாப்பிட்டும் எடை குறையவில்லையா? உடற்பயிற்சி செய்தும் பலன் இல்லையா? இதை பண்ணுங்க!
மேலும் இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், தாயார் தனக்கு சாக்லேட் கொடுத்ததாக சிறுவன் ஆரம்பத்தில் கூறியதாகவும், ஆனால் அவர் அதை பின் மறுத்துவிட்டதாகவும் அதிகாரி கூறினார். இதுகுறித்த கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உண்மை நிலவரம் அனைத்தும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.