டயட் இருந்து உயிரிழந்த கேரள பெண்.. இந்த வகை டயட் இருக்கும் போது கவனம் தேவை!

கேரள பெண் ஒருவர் ஆன்லைன் வீடியோ மூலம் டயட் முறை கற்றுக் கொண்டு அதை பின்பற்றியுள்ளார், அதன் விளைவாக அந்த பெண் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலம் மட்டுமின்றி ஆன்லைன் வீடியோ மூலம் டயட் முறை கற்றுவோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • SHARE
  • FOLLOW
டயட் இருந்து உயிரிழந்த கேரள பெண்.. இந்த வகை டயட் இருக்கும் போது கவனம் தேவை!

கேரளாவைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர், ஆன்லைன் இணையதளங்களால் ஈர்க்கப்பட்டு, தீவிர நீர் டயட் முறை இருந்து வந்துள்ளார். இதனால் கடுமையான உடல்நல அபாயங்கள் ஏற்பட்டுள்ளது, அவசர உணவு முறைகள் மற்றும் நீடித்த டயட் முறை குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகவலைதளங்களில் அனைத்து விதமான தகவலும் கிடைக்கிறது. சிலர் அதை பார்த்து கற்றுக் கொள்கிறார்கள், சிலர் அதை பின்பற்ற விரும்புகிறார்கள். உடல் ரீதியிலான விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். மருத்துவர் தகவல் அல்லது அதற்கென இருக்கும் பிரத்யேக தளத்தை இதுபோன்ற விஷயத்தில் பின்பற்றுவது நல்லது.

மேலும் படிக்க: இரவில் சீக்கிரமா தூங்கணுமா? அப்ப படுக்கைக்கு செல்லும் முன் இத ஃபாலோ பண்ணுங்க

அதன்படி, கேரளாவின் தலச்சேரியைச் சேர்ந்த 18 வயது சிறுமி, ஆன்லைன் இணையதளங்கள் மூலம் பார்த்த டயட் வீடியோ ஒன்றை பின்பற்றி டயட் முறை மேற்கொண்டுள்ளார், இதன்காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்பதுதான் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் அந்த பெண் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக வீடியோவில் பார்த்த உணவுத்திட்டத்தை பின்பற்றி இருக்கிறார். இதன்காரணமாக அந்த பெண் உடல்நிலை மோசமடைந்து தலச்சேரியில் உள்ள மருத்துவமனை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

weight loss diets side effects

டயட் இருந்து உயிரிழந்த காரணம் என்ன?

தொடர்ந்து இதுகுறித்து மருத்துவமனை ஆலோசகர் மருத்துவர் நாகேஷ் மனோகர் பிரபு கூறுகையில், "அவரது எடை 24 கிலோவுக்கும் குறைவாகவே இருந்தது, அவரது சர்க்கரை அளவு, சோடியம் மற்றும் இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தது. வென்டிலேட்டர் ஆதரவு இருந்தபோதிலும், அவரது நிலை மேம்படவில்லை, இதன்காரணமாக அவர் உயிரிழந்தார்" என தெரிவித்தார்.

அந்த பெண் மேற்கொண்ட டயட் முறை என்பது வாட்டர் டயட் முறை ஆகும். அந்த பெண் ஐந்து மாதங்களாக இந்த டயட் முறையை பின்பற்றியுள்ளார். மேலும் இந்த காலக்கட்டத்தில் அந்த பெண் சூடான நீரை மட்டுமே குடித்து உயிர் பிழைத்துள்ளாள். மேலும் இந்த விஷயம் தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறாள்.

அனோரெக்ஸியா நெர்வோசா என்பதும் இதற்கு முக்கிய காரணமாகும். இது உடல் எடையை குறைக்க கடுமையாக எடுக்க வைக்கும் முயற்சியாகும். உடல் எடை குறைவாகவே இருந்தாலும் அதிகமாகவே இருப்பது போல் சிந்திக்க வைத்து தொடர்ந்து உடல் எடையை குறைக்க முயற்சிக்க வைக்கும் பிரச்சனையாகும். இது உணவை முழுமையாக தவிர்க்க வைக்கும் ஆபத்தான நடைமுறைக்கு வழிவகுக்கும். மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர் அறிவுரையின்றி இதுபோன்ற டயட் முறைகளை பின்பற்ற வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம்.

weight-loss-water-diet-plan

வாட்டர் டயட் முறை என்றால் என்ன?

வாட்டர் டயட் என்பது ஒரு வகையான டயட் முறையாகும், அதில் ஒருவர் தண்ணீரை மட்டுமே குடித்து, திட அல்லது திரவ உணவுகளை உட்கொள்ள மாட்டார். வாட்டர் டயட் என்பது ஒரு வகையான கடுமையான டயட் முறைப் பயிற்சியாகும், இது பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு செய்யப்படுகிறது.

வாட்டர் டயட் உடலுக்கு நன்மை பயக்கும், ஆனால் அது சில தீமைகளையும் ஏற்படுத்தக்கூடும். இது மருத்துவ மேற்பார்வையின் கீழ் அல்லது நிபுணர் ஆலோசனையின் பின்னர் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

வாட்டர் டயட் நன்மைகள்

  • எடை இழப்பு
  • சுகாதார நிலை மேம்படும்
  • உடல் சுத்திகரிப்பு
  • மன அமைதி

வாட்டர் டயட் தீமைகள்

  • பலவீனம் மற்றும் சோர்வு
  • தலைச்சுற்றல் மற்றும் தலைவலி
  • மலச்சிக்கல்
  • காய்ச்சல்
  • ஊட்டச்சத்து குறைபாடுகள்
  • இதயப் பிரச்சனைகள்

image source: freepik

Read Next

Walking Workouts: இவர்கள் எல்லாம் மருத்துவரின் அனுமதி இல்லாமல் நீண்ட தூரம் நடக்க கூடாது!

Disclaimer

குறிச்சொற்கள்