Dog Bites: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை என்பது அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் நாய் கடி பாதிப்பு என்பது அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இரவில் வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி அவர்கள் கீழே விழும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
பெரும்பாலான இடங்களில் நாய்கள் கடித்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 9 வயது சிறுவன் ஒருவன் நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க: சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமா இருக்கா? இதைத் தவிர்க்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
9 வயது சிறுவன் பலியான சோகம்
ஓசூர், நாகமங்கலம் ஊராட்சி நீலகிரி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் என்பவர் கட்டடம் கட்டும் வேலை செய்து வருகிறது. இவருக்கு நத்தீஸ் என்ற 9 வயது மகன் அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்துள்ளார். சிறவன் நத்தீஸ் அவரது பாட்டி வளர்ப்பில் வளர்ந்துள்ளார். நத்தீஸ் தாயார் கடந்த 2 ஆண்டுகளுக்கு உயிரிழந்த காரணத்தால் நத்தீஸை பாட்டி வளர்த்து வந்திருக்கிறார்.
நாய் கடித்ததை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மறைத்த சிறுவன்
இதற்கிடையில் நத்தீஸ் கடந்த மூன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது நத்தீஸை அங்கிருந்த தெருநாய் துரத்தி கடித்திருக்கிறது. நாய் கடிபட்ட நத்தீஸ் வீட்டில் உள்ள யாரிடமும் இதைபற்றி தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் நாய் கடித்த இரண்டே நாளில் நத்தீஸ்க்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதை கவனித்த நத்தீஸ்-ன் பாட்டி மற்றும் அத்தை அவரை உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.
கிருஷ்ணகிரியில் நாய் கடித்து உயிரிழந்த சிறுவன்
ஓசூர் மருத்துவமனையில் மருத்துவரிடம் சிறுவன் நாய் கடித்த சம்பவம் குறித்து கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 9 வயது சிறுவன் நத்தீஸ் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடித்தால் ஏன் கவனம் தேவை?
- நாய் கடித்தால் பலர் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். நாய் கடித்தால் அல்ல அதன் பற்கள் பட்டாலே உடனடியாக வைத்தியம் தேவை.
- நாய் கடித்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- இதன் முக்கிய ஆபத்துகளில் ஒன்று ரேபிஸ் நோய் பாதிப்பு.
- மேலும் உள் காயம், ஆழமான காயம் உள்ளிட்டவைகளும் அடங்கும்.
- இதேபோல் நாயின் வாயில் பாக்டீரியாக்கள் இருக்கும், நாய் கடிக்கும் போது இது நம் இரத்தத்தில் நேரடியாக கலந்து நோய்களை பரப்பக்கூடும்.
- எனவே நாய் கடித்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கட்டாயம் உடனடி முதலுதவி தேவை.
நாய் கடித்த உடன் செய்ய வேண்டிய முதலுதவி
- முடிந்தவரை உடனடியாக மருத்துவரிடம் சென்று ஊசி போடவும். இது நோய் பரவாமல் தடுக்க உதவும்.
- தொற்று பரவாமல் காயத்தை சுத்தமான துண்டை வைத்து மெதுவாக சுத்தம் செய்யவும்.
- நாய் கடித்த பிறகு, தாமதிக்காமல் காயத்தை விரைவில் சுத்தம் செய்யுங்கள்.
- பாதிக்கப்பட்ட பகுதியை மஞ்சள் நீரில் கழுவவும்.
- மஞ்சளில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொற்று பரவாமல் தடுக்கும்.
- காயத்தின் மீது ஆண்டி-பயாடிக் க்ரீமைப் பயன்படுத்துங்கள்.
நாய் கடித்தால் மேலே உள்ள அனைத்து தகவலும் முதலுதவி மட்டும்தான் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். கட்டாயம் உடனடியாக மருத்துவரை சென்று சந்திக்க வேண்டியது மிக அவசியம்.
நாய் கடிக்கு உகந்த வீட்டு வைத்தியம்
நாய் கடித்த உடன் சில வீட்டு வைத்தியங்களை செய்வது சிறந்த உதவியாக இருக்கும். இவை முதலுதவி போன்ற வீட்டு வைத்தியங்கள் மட்டுமே ஆகும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
அரைத்த சிவப்பு மிளகாய்
அரைத்த சிவப்பு மிளகாய் என்றவுடன் சற்று அதிர்ச்சியாகதான் இருக்கும். நாய் கடித்த இடத்தில் அரைத்த சிவப்பு மிளகாய் தடவவும். இப்படி செய்வதன் மூலம் உடலில் உள்ள விஷத்தை வெளியேற்றலாம்.
அக்ரூட் பருப்பு மற்றும் வெங்காய சாறு
நாய் கடித்தால், வெங்காய சாறு மற்றும் அக்ரூட் பருப்புகளை சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக அரைக்கவும். பின் இதில் சிறிது தேன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். இதை தடவிய பின் லேசாக ஒரு கட்டு கட்டவும். இப்படி செய்வதன் மூலம் நாய் விஷம் நீங்கும்.
மேலும் படிக்க: எவ்ளோ பெரிய தொப்பையையும் அசால்ட்டாகக் குறைக்க தினமும் தூங்கும் முன் நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்
மஞ்சள் நீர்
காயத்தை கழுவிய பின் மஞ்சள் நீரை பயன்படுத்துவது முக்கியம். ஞ்சள் நீரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் செப்டிக் பண்புகள் உள்ளன, இது தொற்று பரவும் அபாயத்தை தடுக்கும்.
மறக்க வேண்டாம். முன்னதாகவே குறிப்பிட்டது போல் இவை அனைத்தும் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி மட்டுமே ஆகும். உடனடியாக மருத்துவரை அணுகுவதே இதற்கான சிறந்த தீர்வாகும்.
pic courtesy: freepik