First Aid For Dog Bites: இந்த காலக்கட்டத்தில் ஏணையோர் நாய்களை வீட்டில் வளர்க்க விரும்புகிறார்கள். வீட்டைப் பாதுகாப்பதற்கு மட்டுமின்றி பலர் தங்களை மகிழ்விக்க நாய்களை வளர்க்க விரும்புகிறார்கள். அதேசமயம் நாய்களைக் கண்டு மிகவும் பயப்படுபவர்கள் ஏராளம். பொதுவாக தமிழகத்தின் பெரும்பாலான தெருக்களில் உலாவக் கூடிய உயிரனமாக நாய்கள் இருக்கிறது.
வாகன ஓட்டிகளை குறிவைக்கும் தெருநாய்கள்
வாகன ஓட்டிகள் தங்களது பயண அனுபவத்தில் எதை சந்தித்திருக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக ஒருமுறையாவது நாய் துரத்தி வரும் அனுபவத்தை சந்தித்திருப்பார்கள். இப்படி பலரது கால்களை நாய்கள் கடித்திருக்கிறது. மேலும் தெருவோரம் இருக்கும் நாய்கள் குழந்தைகளை மிக எளிதாக தாக்குகிறது. நாய்கள் என்பது செல்லப்பிராணி தான் என்றாலும் தெருவோரம் இருக்கும் நாய்கள் அப்படி இருப்பதில்லை. எதிர்பாராத நேரத்தில் மனிதர்களை தாக்குகிறது.
மேலும் படிக்க: எடை குறைய தினமும் இத்தனை அடிகள் நடக்கனும்..
இத்தகைய நிலையில் ஒரு தெரு நாய் உங்களை எதிர்பாராத நிலையில் தாக்கினால், உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை அறிந்திருக்க வேண்டும். பொதுவாக பலரும் நாய்கள் கடித்தால் தான் வைத்தியம் எடுக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை, நாய்களின் பற்கள் லேசாக நம்மீது பதிந்தாலும் உடனடி வைத்தியம் என்பது மிக முக்கியம்.
நாய்கள் கடித்தால் தொப்புலை சுத்தி 14 ஊசி போட வேண்டுமா?
நாய் கடித்தால் 14 ஊசி போடப்படுகிறது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இது வெறும் கட்டுக்கதை, ஏனெனில் நாய் கடித்த பிறகு தொற்று பரவாமல் தடுக்க 2 முதல் 3 ஊசிகள் மட்டுமே எடுக்க வேண்டும். மருத்துவரிடம் செல்வதற்கு முன் சில முதலுதவி செய்ய வேண்டியதும் மிக அவசியம்.
நாய் கடித்தால் சரியான நேரத்தில் முதலுதவி வழங்குவது ஏன் முக்கியம்?
- நாய் கடித்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- இதன் முக்கிய ஆபத்துகளில் ஒன்று ரேபிஸ் நோய் பாதிப்பு.
- மேலும் உள் காயம், ஆழமான காயம் உள்ளிட்டவைகளும் அடங்கும்.
- இதேபோல் நாயின் வாயில் பாக்டீரியாக்கள் இருக்கும், நாய் கடிக்கும் போது இது நம் இரத்தத்தில் நேரடியாக கலந்து நோய்களை பரப்பக்கூடும்.
- எனவே நாய் கடித்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கட்டாயம் உடனடி முதலுதவி தேவை.
நாய் கடித்த உடன் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?
- நாய் கடித்தவுடன் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்து அனைவரும் அறிந்துக் கொள்வது அவசியம்.
- முடிந்தவரை உடனடியாக மருத்துவரிடம் சென்று ஊசி போடவும். இது நோய் பரவாமல் தடுக்க உதவும்.
- தொற்று பரவாமல் காயத்தை சுத்தமான துண்டை வைத்து மெதுவாக சுத்தம் செய்யவும்.
- நாய் கடித்த பிறகு, தாமதிக்காமல் காயத்தை விரைவில் சுத்தம் செய்யுங்கள்.
- பாதிக்கப்பட்ட பகுதியை மஞ்சள் நீரில் கழுவவும்.
- மஞ்சளில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொற்று பரவாமல் தடுக்கும்.
- காயத்தின் மீது ஆண்டி-பயாடிக் க்ரீமைப் பயன்படுத்துங்கள்.
நாய் கடித்தால் மேலே உள்ள அனைத்து தகவலும் முதலுதவி மட்டும்தான் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். கட்டாயம் உடனடியாக மருத்துவரை சென்று சந்திக்க வேண்டியது மிக அவசியம்.
நாய் கடிக்கு உகந்த வீட்டு வைத்தியம்
நாய் கடித்த உடன் சில வீட்டு வைத்தியங்களை செய்வது சிறந்த உதவியாக இருக்கும். இவை முதலுதவி போன்ற வீட்டு வைத்தியங்கள் மட்டுமே ஆகும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
அரைத்த சிவப்பு மிளகாய்
அரைத்த சிவப்பு மிளகாய் என்றவுடன் சற்று அதிர்ச்சியாகதான் இருக்கும். நாய் கடித்த இடத்தில் அரைத்த சிவப்பு மிளகாய் தடவவும். இப்படி செய்வதன் மூலம் உடலில் உள்ள விஷத்தை வெளியேற்றலாம்.
அக்ரூட் பருப்பு மற்றும் வெங்காய சாறு
நாய் கடித்தால், வெங்காய சாறு மற்றும் அக்ரூட் பருப்புகளை சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக அரைக்கவும். பின் இதில் சிறிது தேன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். இதை தடவிய பின் லேசாக ஒரு கட்டு கட்டவும். இப்படி செய்வதன் மூலம் நாய் விஷம் நீங்கும்.
மேலும் படிக்க: Excessive thirst: தண்ணீர் குடித்த பிறகும் தாகம் அடங்கவில்லையா? அப்போ இதுதான் காரணம்!
மஞ்சள் நீர்
காயத்தை கழுவிய பின் மஞ்சள் நீரை பயன்படுத்துவது முக்கியம். ஞ்சள் நீரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் செப்டிக் பண்புகள் உள்ளன, இது தொற்று பரவும் அபாயத்தை தடுக்கும்.
மறக்க வேண்டாம். முன்னதாகவே குறிப்பிட்டது போல் இவை அனைத்தும் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி மட்டுமே ஆகும். உடனடியாக மருத்துவரை அணுகுவதே இதற்கான சிறந்த தீர்வாகும்.
pic courtesy: freepik