வளர்த்த செல்ல நாய் செல்லமாக நக்கியதால் உயிரிழந்த பெண்! மக்களே கவனம் தேவை

நோர்போக்கின் அட்டில்பரோவை சேர்ந்த பெண் ஒருவரின் காலில் நாய் நக்கியதால் அந்த பெண் உயிரிழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது எப்படி நேர்ந்தது, இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
வளர்த்த செல்ல நாய் செல்லமாக நக்கியதால் உயிரிழந்த பெண்! மக்களே கவனம் தேவை


நோர்போக்கின் அட்டில்பரோவை சேர்ந்த 83 வயது பெண் ஒருவர் நாய் நக்கியதால் உயரிழந்த சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. இதற்கு சில காரணங்களும் உள்ளது. 83 வயதான அந்த பெண்ணுக்கு அவரது காலில்காயம் ஏற்பட்டிருக்கிறது, சரியாக அந்த இடத்தில் அவர் வளர்த்த அந்த செல்ல நாய் நக்கி இருக்கிறது, இதனால் ஏற்பட்ட தொற்றால் அவர் இறந்துள்ளார்.

நோர்போக்கின் அட்டில்பரோவைச் சேர்ந்த 83 வயது பெண், வீட்டு நாய் தனது காலில் ஏற்பட்ட காயத்தை நக்கியதால் செப்சிஸ் என்ற தொற்றால் இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கடலை மாவு பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குமா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

ஜூன் 29ம் தேதியன்று, பாக்ஸ்டர் என்ற 83 வயது பெண் மிகவும் பலவீனமான நிலையில் இருந்திருக்கிறார், இருப்பினும் அவர் சுதந்திரமாகவும், வலிமையாக இருக்க மேற்கொள்ள வேண்டிய செயல்களை மேற்கொண்டு வந்ததாகவும் அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர். பாக்ஸ்டர் வீட்டில் இருக்கும்போதே அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

dog-licking-disease

நாய் நக்கியதால் உயிரிழந்த பெண்

காலில் ஏற்பட்ட காயத்தின் மீது அவர் செல்ல நாய் நக்கியதாக பாக்ஸ்டரின் முதன்மை பராமரிப்பாளரும், அவரின் பேத்தியுமான கெய்ட்லான் அல்லின் தெரிவித்தார்.

இதையடுத்து பாக்ஸ்டருக்கு அவரது வீட்டிலேயே துணை மருத்துவர்கள் உதவியுடன் காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சேதமடைந்த தோலை சரிசெய்து காயத்திற்கு அப்படியே கட்டுப்போட்டுள்ளனர். அப்போது பாக்ஸ்டர் வீட்டார்கள் நாய் நக்கியதால் தொற்று ஏற்படும் என்பது குறித்து விழிப்புடன் இல்லை.

மருத்துவர்கள் சிகிச்சை அளித்த அடுத்த நாள் பாக்ஸ்டர் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது, இதையடுத்து அவர் நோர்போக் மற்றும் நார்விச் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இரத்த பரிசோதனையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அவரது இரத்த பரிசோதனையில், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வீட்டு வளர்ப்பு விலங்குகளின் வாயில் அடிக்கடி காணப்படும் பாஸ்டுரெல்லாமல்டோசிடா என்ற பாக்டீயாவால் ஏற்படும் நோயை குறிக்கும் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, மருத்துவ பராமரிப்பில் இருந்த போதும் பாக்ஸ்டர் கடுமையாக செப்சிஸால் பாதிப்பால் உயிரிழந்தார். பாக்ஸ்டருக்கு முன்னதாகவே கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற அடிப்படை மருத்துவ நோய்களும் இருந்துள்ளன, இது அவரது மீட்பை இன்னும் கடினமாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Runny Nose : மூக்குல சளி நிக்காம ஒழுகுதா? - இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க, பட்டுன்னு நிக்கும்...!

இது வீட்டு நாய் நக்குவதால் ஏற்பட்ட தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளது. விலங்குகள் உமிழ்நீரை வெளிப்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களை இந்த பிரச்சனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, குறிப்பாக ஏற்கனவே உள்ள உடல்நல பாதிப்புகள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் நாய், பூனை வளர்ப்பவர்களுக்கு இந்த பிரச்சனை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

image source: meta

Read Next

உங்களுக்கு இந்த பழக்கம் இருக்கா? அப்போ ஹை கொலஸ்ட்ரால் இருப்பது உறுதி!!

Disclaimer

குறிச்சொற்கள்