$
Sanal Vithai Benefits: பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சணல் விதைகள் சாடிவா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இதில் கிட்டத்தட்ட எட்டு அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்க உதவுகின்றன. மேலும், சணல் விதையில் புரோட்டீன்கள், கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இது போன்ற ஏராளமான ஊட்டச்சத்துகளைக் கொண்ட சணல் விதைகளை உணவுப் பொருள்களில் சேர்ப்பது ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க உதவுகிறது. இந்த அற்புத நலன்களைத் தரும் சணல் விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
சணல் விதையின் ஆரோக்கிய நன்மைகள்
உடல் உறுப்புகள் நன்றாக செயல்பட எப்படி இதயம் உதவுகிறதோ, அது போல எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் பெற சணல் விதைகள் அவசியமாகும். இப்போது சணல் விதைகளின் நன்மைகளைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Oats: தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இதய ஆரோக்கியம்
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைப்பதில் சணல் விதைகள் பெரிதும் உதவுகின்றன. இவ்வாறு கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதனுடன் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்றவற்றை தடுக்க உதவுகிறது.

செரிமான ஆரோக்கியம்
கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் என இரண்டு வகையான மூலங்களும் சணலில் உள்ளன. இந்த சணல் விதைகளில் உள்ள நார்ச்சத்துகள், உடலில் குடல் செயல்பாட்டைத் தூண்டி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும், இந்த விதையில் உள்ள நார்ச்சத்துகள் பசியின்மையை ஏற்படுத்தி குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. இவை உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?
எடை இழப்பு
சணல் விதைகளில் குறைந்த அளவிலான நார்ச்சத்து, கலோரிகள், முழுமையான புரதம் போன்றவை உள்ளது. எனவே, இது உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இவற்றில் உள்ள புரதங்கள் உடலை நிறைவாக உணர வைக்க உதவுகிறது. மேலும் இவற்றின் நார்ச்சத்துகள் ஊட்டச்சத்துகள் உறிஞ்சுவதை அதிகரித்து பசியின்மையைக் கட்டுப்படுத்துகிறது.

ஹார்மோன் சமநிலை
சணல் விதைகளில் காமா-லினோலெனிக் அமிலம் உள்ளது. இவை தைராய்டு, கணையம் போன்றவற்றிற்கு ஹார்மோனை சீராக செயல்பட உதவுகிறது. மேலும் இது மனநிலை மாற்றங்கள், பதட்டம், மனச்சோர்வு, மாதவிடாய் போன்றவற்றின் போது ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக ஏற்படும் பல்வேறு அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
தூக்கமின்மை
சணல் விதையில் மெக்னீசியம் சத்துகள் நிறைந்திருக்கிறது. சணல் விதைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நிம்மதியான உறக்கத்தைப் பெற முடியும்.

தாவர புரதம்
அனைத்து 21 அமினோ அமிலங்களையும் கொண்ட ஒரே தாவரத்தின் உணவு வகையாக சணல் விதைகள் உள்ளது. இவை பால், முட்டை மற்றும் மீனை விட முழுமையான புரதத்தைத் தருகிறது. மேலும், உடலால் உற்பத்தி செய்ய முடியாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்களின் ஆற்றல் மையமாக சணல் விதைகள் உள்ளன. இவை எடை இழப்பு, சகிப்புத் தன்மை, மன அழுத்தத்தைக் குறைப்பது, தசை வலிமை உள்ளிட்ட அனைத்திற்கும் உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!
Image Source: Freepik