Curry Leaf Health Benefits: கறிவேப்பிலை மருத்துவ மற்றும் சமையல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. கறிவேப்பிலையில் தாமிரம், தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் கறிவேப்பிலையில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன.
உங்கள் உணவில் கறிவேப்பிலையைச் சேர்ப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு, நீரிழிவு நோய், காலை சோர்வு மற்றும் குமட்டல் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே விரிவாக காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
கறிவேப்பிலை நன்மைகள் (Curry Leaf Benefits)

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்
கறிவேப்பிலை ஒருவரின் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை, நல்ல கொழுப்பின் (HDL) அளவை உயர்த்தி, பெருந்தமனி தடிப்பு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
செரிமானத்தை அதிகரிக்கும்
கறிவேப்பிலையின் நன்மைகளில் ஒன்று செரிமானத்திற்கு உதவுகிறது. இது மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகளை தடுக்க உதவுகிறது.
முடி வளர்ச்சியை துரிதப்படுத்தும்
சேதமடைந்த கூந்தலுக்கு சிகிச்சையளிப்பதில், கறிவேப்பிலை சிறந்து திகழ்கிறது. இது மெல்லிய முடி தண்டுக்கு வலுவூட்டுகிறது. இது பொடுகு பிரச்னையை தீர்க்கிறது.
கண் ஆரோக்கியம்
கறிவேப்பிலையில் கரோட்டினாய்டு கொண்ட வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதனால் கார்னியா பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. வைட்டமின் A இன் குறைபாடு இரவு குருட்டுத்தன்மை, பார்வை இழப்பு போன்ற கண் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனை சரி செய்ய கறிவேப்பிலை உதவுகிறது.
எடை இழப்பை ஊக்குவிக்கிறது
எடையை குறைக்க கறிவேப்பிலை சிறந்த தேர்வாக உள்ளது. உடலில் தேங்கியுள்ள கொழுப்பை வெளியேற்ற இது சிறந்த திகழ்கிறது. கறிவேப்பிலை ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உடல் பருமனை தடுக்க உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
கறிவேப்பிலையை வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் பிரச்னைகள், கோனோரியா, வயிற்றுப்போக்கு மற்றும் வலிகளைப் போக்க உதவுகிறது.
கயங்களை குணப்படுத்தும்
கறிவேப்பிலையின் பேஸ்ட்டைத் தடவுவதால் காயங்கள், சொறி, கொதிப்பு, லேசான தீக்காயங்கள் போன்றவை குணமாகும். இந்த பேஸ்ட் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் தொற்றுநோயையும் தடுக்கவும் அகற்றவும் உதவுகிறது.
Image Source: Freepik