Dates Apple Payasam Recipe in Tamil: தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும், நொறுக்கு தீனியும், இனிப்புகளும் தான். தீபாவளி வர ஒரு வாரம் இருக்கும் போதே நமது வீடுகளில் பலகாரங்கள் செய்ய துவங்கி விடுவார்கள். அதிரசம், லட்டு, குளோப் ஜாமும், வடை, அப்பம், முறுக்கு, ஜாங்கிரி என இனிப்புக்கு பஞ்சமே இல்லாமல் அடுக்கி வைப்பார்கள்.
நமக்கு பிடித்த இனிப்புகளை ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும் என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? அப்படி நீங்கள் ஏதாவது புதிதாக செய்ய முயற்சி செய்தால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். இந்த முறை பேரீட்சைப்பழம் ஆப்பிள் வைத்து ஒரு அட்டகாசமான பாயாசம் செய்யலாமா? இதோ உங்களுக்கான செய்முறை.
இந்த பதிவும் உதவலாம் : Besan Laddu: ஒரு கப் கடலை மாவு இருந்தால் போதும் சுவையான லட்டு செய்யலாம்!
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 1 துருவியது
பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது
வறுத்த சேமியா - 3 தேக்கரண்டி
பேரீட்சைப்பழம் நறுக்கியது
முந்திரி பருப்பு
திராட்சை
சர்க்கரை - 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு
நெய் - தேவையான அளவு
பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் செய்முறை:

- ஒரு பானில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, நறுக்கிய பேரீட்சைப்பழம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- அடுத்து ஆப்பிளின் தோலை நீக்கி துருவி கொள்ளவும்.
- ஒரு பானில் நெய் ஊற்றி துருவிய ஆப்பிளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
- ஒரு சாஸ் பானில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி, வறுத்த சேமியாவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- பின்பு சர்க்கரை, ஏலக்காய் தூள், வேகவைத்த ஆப்பிள் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
இந்த பதிவும் உதவலாம் : Javvarisi Bonda: ஜவ்வரிசியில் போண்டா செய்ததுண்டா? இதோ ரெசிபி!
- 2 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கலந்து விடவும். பிறகு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
- இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பேரீட்சைப்பழம் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
- சுவையான பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் தயார்.
பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் நன்மைகள்:

செரிமானம்
இளநீர் பாயசத்தில் உள்ள தேங்காய் கூழில் உள்ள உணவு நார்ச்சத்து கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை உடைக்க உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
குடல் ஆரோக்கியம்
கீரில் உள்ள அரிசியில் உள்ள ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வீக்கத்தையும் குறைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பாயாசத்தில் உள்ள பால் புரதம், கொழுப்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி12 மற்றும் கே ஆகியவற்றின் முழுமையான உணவாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Aval Ladoo: ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு… எப்படி செய்யணும் தெரியுமா?
பாலூட்டுதல்
ஞாவர அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஞாவரப் பாயசம், புதிய தாய்மார்களுக்கு பாலூட்டலை அதிகரிக்கும்.
முடி ஆரோக்கியம்
ஞாவர அரிசியைக் கழுவிய நீரை, குளிப்பதற்கு முன் தலையில் தடவுவது, முன்கூட்டிய முடி உதிர்வைத் தடுக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
குளிரூட்டும் விளைவு
கீர் வயிற்றையும் உடலையும் குளிர்விக்கும்.
எடை அதிகரிப்பு
தீங்கு விளைவிக்கும் பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் எடையை அதிகரிக்க சபுதான பாயாசம் ஒரு நல்ல வழி.
ஆற்றல்
சபுதான பாயசம் ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும். மேலும், விரத காலங்களில் முக்கிய உணவாகவும் இருக்கலாம்.
Pic Courtesy: Freepik