$
வாழைப்பழம் பொதுவாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழமாகும். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் என்பது பலருக்கும் தெரியும், ஆனால் வாழைக்காய் நன்மைகளை பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.
வாழைக்காயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. பொதுவாக பலரது வீட்டிலும் வாழைக்காயை பலவகையாக சமைத்து உணவு முறையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
வாழைக்காயை பலரும் பச்சையாக வேக வைத்தும் சாப்பிடுகிறார்கள். வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி6, வைட்டமின்-சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. வாழைக்காய் உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும்.
வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் வாழைக்காய் சாப்பிடுவது சர்க்கரையை கட்டுப்படுத்த பெருமளவு உதவுகிறது. இது தவிர, இது வயிறு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
செரிமான பிரச்சனைகளை போக்கும்
வாழைக்காய் பச்சையாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளை நீக்க பெரிதளவு உதவியாக இருக்கும். இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து குடல்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது
தற்போது உடல் பருமன் பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், வாழைக்காய் உட்கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக ஜீரணிக்க நேரம் எடுக்கும்.
இதனால் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதோடு விரைவில் பசி எடுக்காது. வாழைக்காய் தினமும் உட்கொள்வதால், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, உடல் பருமனைக் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் அல்லது தொற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களும் வாழைக்காய் உட்கொள்ள வேண்டும். வாழைக்காயில் ஏராளமான பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாழைக்காயை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
இதய நோய் வராமல் தடுக்கும்
வாழைக்காய் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் வாழைக்காய் உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதய நோய்களைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் உணவில் வாழைக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Source: FreePik